மலாக்கா பறவைகள் பூங்கா
மலாக்கா பறவைகள் பூங்கா மலாய்: Taman Burung Melaka; ஆங்கிலம்:Malacca Bird Park; சீனம்:马六甲飞禽公园) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ வனப்பகுதியில் உள்ள பறவைகள் பூங்கா ஆகும். இந்தப் பறவைகள் பூங்கா 23 மார்ச் 2013-இல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.[3][4]
மலாக்கா பறவைகள் பூங்கா Malacca Bird Park Taman Burung Melaka | |
---|---|
மலாக்கா பறவைகள் பூங்கா | |
திறக்கப்பட்ட தேதி | 1 ஏப்ரல் 2013 |
அமைவிடம் | ஆயர் குரோ, மலாக்கா, மலேசியா (Lebuh Ayer Keroh, Ayer Keroh, 75450 Melaka) |
நிலப்பரப்பளவு | 2.02 எக்டர் |
விலங்குகளின் எண்ணிக்கை | 6000 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 400 |
உரிமையாளர் | ஆங் துவா ஜெயா நகராட்சி[1][2] |
மேலாண்மை | கொன்சோர்டியம் கேகே (2013–2018) ஆங் துவா ஜெயா நகராட்சி (2018–) |
வலைத்தளம் | www |
ஆசியாவிலேயே மிகப்பெரிய பறவைகள் பூங்கா என இந்தப் பூங்கா பெயர் பெற்று உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் துறை ஆய்வாளர்கள், இந்த மலாக்கா பறவைகள் பூங்காவிற்கு வருகை புரிந்து பறவைகள் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.[5]
பொது
தொகு2018-ஆம் ஆண்டு வரை இந்தப் பூங்கா, ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. 2019-ஆம் ஆண்டில், மலாக்கா மாநில அரசு தலையிட்டு, இந்தப் பூங்காவை மலாக்கா உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்தது. அதன் பின்னர் மலாக்கா பறவைகள் பூங்கா எனும் பெயரை நிலைப்படுத்தியது.
இந்தப் பறவைகளின் பூங்காவின் வெளிப்புறம் ஒரு தாழ்வான பச்சை வண்ண அரங்கத்தைச் சார்ந்து இருக்கிறது. அது ஒரு பசுமையான தோற்றத்தையும்; மற்றும் கிளி அமர்ந்த மாதிரியாகவும் உள்ளது. இதுவே அந்தப் பூங்காவின் ஒரு தனிப்பட்ட வரவேற்பு அடையாளம் ஆகும்.[6]
இந்தப் பூங்காவில் 400-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. [7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "MPHTJ Takes Over running of Malacca Zoo, Bird Park".
- ↑ "Malacca takes over zoo and aviary park".
- ↑ "Malacca Bird Park". Malacca. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "Melaka Bird Park, Melaka". Gyppo travel reviews (in ஆங்கிலம்). 2 April 2022. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "Malacca Bird Park launches Dinosaur Club, new attractions". Malay Mail. 15 December 2019. https://www.malaymail.com/news/life/2019/12/15/melaka-bird-park-targets-100000-visitors-next-year/1819425.
- ↑ "Melaka Bird Park, Ayer Keroh, Melaka - Closed Indefinitely". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "Melaka Bird Park: There are more than 6,000 birds of more than 400 species in the park". TRIP.COM. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Melaka Bird Park தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- முகநூலில் மலாக்கா பறவைகள் பூங்கா