மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தி
மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அல்செடினிடே
|
பேரினம்: | |
இனம்: | அ. பெனின்சுலே
|
இருசொற் பெயரீடு | |
அல்சிடோ பெனின்சுலே (iலாவுப்மான், 1941) |
மலேசிய (அல்லது மலேய) நீலப்பட்டை மீன்கொத்தி (அல்சிடோ பெனின்சுலே)(Malaysian blue-banded kingfisher) என்பது அல்செடினினே என்ற துணைக் குடும்பத்தினைச் சேர்ந்த மீன்கொத்தி பேரினம் ஆகும்.
விளக்கம்
தொகுஇது ஒரு சிறிய, மாறாகக் கருமையான மீன்கொத்தியாகும். வெள்ளை மார்பின் குறுக்கே பரந்த நீல-பச்சை பட்டையுடன் ஆண் மிகவும் தனித்துவமானது. முழு ஆரஞ்சு வயிற்றுப் பகுதியும் பெண் மீன்கொத்தி மிகவும் வித்தியாசமானது. சிரலைவிட ஒட்டுமொத்தமாக மங்கலான, இருண்ட நிறம் மற்றும் கண்ணுக்குப் பின்னால் பிரகாசமான வெள்ளை மற்றும் ஆரஞ்சு இணைப்பு இல்லாமல் காணப்படும். மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தியின் அழைப்பு சிரலைப் போலவே இருக்கும்.
வாழிடம்
தொகுஇதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.
பரவல்
தொகுமலேசிய நீலப்பட்டை மீன்கொத்தி மியான்மர், மலாய் தீபகற்பம், சுமத்திரா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2022). "Alcedo peninsulae". IUCN Red List of Threatened Species 2022: e.T22726979A216225846. https://www.iucnredlist.org/species/22726979/216225846. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ IOC World Bird List (v 13.2). 2023. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/IOC.ML.13.2.