சிரல்
சிரல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. atthis
|
இருசொற் பெயரீடு | |
Alcedo atthis (L., 1758) | |
Breeding range
Resident all year-round Non-breeding range |
சிரல் எனும் சிறு நீல மீன்கொத்தி (Alcedo atthis) என்பது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஐரோவாசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக உள்ளது. இதில் ஏழு கிளையினங்கள் உள்ளன.
விளக்கம்
தொகுஇப்பறவை சிட்டுக்குருவியைவிட சற்று பெரியது. உடலின் மேல்பாகம் நீலமும் ,பச்சையும் கலந்த நிறமுடையது. அடர்த்தியான குட்டை வாலும், நீண்ட நேரானகூர் அலகும் கொண்டது. இப்பறவை கிணறு, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளில் தனியாக கல்லின் மீதோ அல்லது தொங்கும் மரக் கிளை மீதோ அமர்ந்திருக்கும். நீருக்கு மேலே சிறகடித்து பறந்துகொண்டு திடீரென்று நீருக்குள் பாய்து இரையை கௌவிக்கொண்டு பறக்கும்.
புவியியல் மாறுபாடு
தொகுஇதில் ஏழு கிளையினங்கள் உள்ளன. அவை அவற்றின் மேல் பகுதிகளின் சாயலில் இருந்தும் அடிப்பகுதியின் செம்பழுப்பு நிறத்தின் தீவிரம் போன்றவற்றில் ஓரளவு மாறுபாடு கொண்டவையாக உள்ளன. கிளையினங்கள் தங்கள் நிறத்தில் 10% வரை அளவு மாறுபடுகின்றன. வாலசுக் கோட்டிற்கு தெற்கே வசிக்கும் கிளையினங்கள் நீல நிற மேல் பகுதிகளையும், ஓரளவு நீல நிற காது திட்டுகளையும் கொண்டுள்ளன.[2]
- A. a. ispida Linnaeus, 1758. அயர்லாந்து, எசுப்பானியா, தெற்கு நோர்வேயில் இருந்து உருமேனியா மற்றும் மேற்கு உருசியா வரை இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் ஈராக்கு தெற்கு போர்த்துகல் போன்ற பகுதிகளுக்கு வலசை போகின்றன.
- A. a. atthis. வடமேற்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு இத்தாலியின் கிழக்கில் இருந்து ஆப்கானித்தான், காஷ்மீர், வடக்கு சிஞ்சியாங், சைபீரியா ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இஸ்ரேல்,[3] வடகிழக்கு சூடான், யெமன், ஓமான், பாக்கித்தான் போன்ற பகுதிகளுக்கு வலசை வருகின்றன.
- A. a. bengalensis Gmelin, 1788. இந்தியாவிலிருந்து இந்தோனேசியா, சீனா, கொரியா, யப்பான் கிழக்கு மங்கோலியா வரை தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் தெற்கே இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை வலசை வருகின்றன.
- தென்னிந்திய சிறு நீல மீன்கொத்தி A. a. taprobana Kleinschmidt, 1894. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.
- A. a. floresiana Sharpe, 1892. பாலியிலிருந்து திமோர் வரை இனப்பெருக்கம் செய்கின்றன.
- A. a. hispidoides Lesson, 1837. சுலாவெசியிலிருந்து நியூ கினி மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடல் தீவுகள் வரை இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
- A. a. solomonensis Rothschild and ஆர்டெர்ட், 1905. சொலமன் தீவுகளின் கிழக்குப் பகுதியில் இருந்து சான் கிறிஸ்டோபால் வரை இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Alcedo atthis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
- ↑ Arnold, Paula: Birds of Israel, (1962), Shalit Publishers Ltd., Haifa, Israel. p. 12