மலேசிய பகாங் பல்கலைக்கழகம்

மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(University Pahang Malaysia; மலாய்: Universiti Pahang Malaysia) (UMPSA) என்பது மலேசியா, பகாங், பெக்கான் நகரில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும்.

மலேசிய பகாங் பல்கலைக்கழகம்
University Malaysia Pahang
Universiti Malaysia Pahang Al-Sultan Abdullah
முந்தைய பெயர்
  • University College of Engineering and Technology Malaysia (2002–2007)
  • Universiti Malaysia Pahang (2007–2022)
குறிக்கோளுரைபொறியியல், தொழில்நுட்பம், படைப்பாற்றல்
(Engineering, Technology, Creativity)
(Kejuruteraan, Teknologi, Kreativiti)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
உருவாக்கம்பெப்ரவரி 16, 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-02-16)
நிதிநிலைRM 224,020,000[1]
வேந்தர்சுல்தான் அப்துல்லா
துணை வேந்தர்யுசுரி சைனுடின்
(Yuserrie bin Zainuddin)
கல்வி பணியாளர்
814
நிருவாகப் பணியாளர்
992
மாணவர்கள்17925
பட்ட மாணவர்கள்10835
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1423
அமைவிடம்,
வளாகம்பல வளாகங்கள்
சேர்ப்புASAIHL
MTUN
இணையதளம்ump.edu.my

தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ஆங்கிலம்:(University College of Engineering and Technology Malaysia; மலாய்: Kolej Universiti Kejuruteraan dan Teknologi Malaysia)) (UTEC / KUKTEM) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[2] பின்னர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டது.

28 நவம்பர் 2015 அன்று, இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.

வரலாறு

தொகு

2002-ஆம் ஆண்டில், மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பகாங் வளாகம் எனும் பெயரில் மலேசிய பகாங் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு, குவாந்தான் பண்டார் இந்திரா மக்கோத்தா நகரில் ஒரு சிறிய வளாகத்தில் இருந்து இயங்கி வந்தது.[3][4]

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் சிந்தனையின் விளைவாக இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. நஜீப் ரசாக் அப்போது மலேசிய கல்வி அமைச்சராகப் பதவியில் இருந்தார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் பெக்கான் நகரில் உள்ளது. 27 சூலை 2009-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. முதன்மை வளாகத்தில் 10,000 மாணவர்கள் மற்றும் 2,000 கல்விப் பணியாளர்கள் வரை தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

துறைகள்

தொகு
  • மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை - (Faculty of Electrical and Electronics Engineering)
  • இயந்திரவியல் மற்றும் தானுந்து பொறியியல் துறை - (Faculty of Mechanical and Automotive Engineering Technology)
  • உற்பத்தி மற்றும் நுண் ஒளித்துகளியல் தொழில்நுட்ப துறை - (Faculty of Manufacturing and Mechatronic Engineering Technology)
  • கணினியல் துறை - (Faculty of Electrical and Electronics Computing)
  • நவீன மொழிகளுக்கான மையம் - (Centre for Modern Languages)

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Zairil Khir Johari: With budget cuts of up to 27%, how will our universities become "world-class"?". Mediarakyat.net. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
  2. "About Us | Official Portal - Universiti Malaysia Pahang (Malaysia University) - Public University in Pahang, Malaysia". www.ump.edu.my. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.
  3. "University College of Engineering & Technology Malaysia Overview". www.kuktem.edu.my. Archived from the original on 16 August 2004.
  4. "Profile". www.ump.edu.my. Archived from the original on 30 April 2007.

வெளி இணைப்புகள்

தொகு