மலேசிய கல்வி அமைச்சர்

மலேசிய கல்வி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Education Malaysia; மலாய்: Menteri Pendidikan Malaysia) என்பவர் மலேசிய கல்வி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர்கள் இருவர் உதவியாக உள்ளனர். மலேசிய கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.

மலேசிய கல்வி அமைச்சர்
Minister of Education
Menteri Pendidikan Malaysia
தற்போது
பட்லினா சிடேக்‌
(Fadhlina Sidek)

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய கல்வி அமைச்சு
சுருக்கம்KPM / MOE
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1955 (1955)
முதலாமவர்அப்துல் ரசாக் உசேன்
இணையதளம்www.moe.gov.my

வரலாற்று அடிப்படையில், மலேசிய கல்வி அமைச்சர் பதவி என்பது எதிர்கால மலேசியப் பிரதமர் பதவிக்கு ஒரு படிக்கல் என்று அறியப்படுகிறது. மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் ஒன்பதாவது பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து மலேசியப் பிரதமர்களும் இந்தப் பதவியை வகித்துள்ளனர்.

பொது

தொகு

மலேசிய கல்வி அமைச்சரின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது. மலேசியாவின் கல்வித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும்; செயல் பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் முதன்மை அரசாங்க அமைச்சராகச் செயல் படுகின்றார். அத்துடன் கல்வி சார்ந்த அனைத்துக் கொள்கைகளை நிர்வகித்துப் பராமரிக்கும் பொறுப்புகளும் இவரைச் சார்ந்ததாகும்.

மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. பட்லினா சிடேக்‌ (Fadhlina Sidek) மலேசியக் கல்வி அமைச்சராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.[1]

மலேசிய உயர்கல்வி அமைச்சு

தொகு

மலேசிய கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட 1955-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pendidikan) என்று பொதுவாக அழைக்கப்படது. அந்த அமைச்சு கல்வித்துறை தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்தது.

2004-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வி அமைச்சு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவின் பெயர் மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pelajaran). அந்த அமைச்சு பாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. மற்றொரு பிரிவின் பெயர் மலேசிய உயர்கல்வி அமைச்சு (Ministry of Higher Education).

பிரதமர் நஜீப் ரசாக் (Prime Minister Najib Razak) பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், இரண்டு அமைச்சுகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், 2015-இல் மீண்டும் இரு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாகச் செயல்படுகின்றன.

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

கல்வி அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்


தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  அப்துல் ரசாக் உசேன்
Abdul Razak Hussein
(1922–1976)
கூட்டணி (அம்னோ) கல்வி அமைச்சர் 1952 1957 மலாயா கூட்டரசு
துங்கு அப்துல் ரகுமான்
(I)
  கிர் ஜொகாரி
Mohamed Khir Johari
(1923–2006)
1957 1960 துங்கு அப்துல் ரகுமான்
(I • II)
அப்துல் ரகுமான் தாலிப்
Abdul Rahman Talib
(1916–1968)
1960 1962 துங்கு அப்துல் ரகுமான்
(II)
அப்துல் அமீட் கான்
Abdul Hamid Khan
(1900–1974)
1962 1964
அப்துல் ரகுமான் தாலிப்
Abdul Rahman Talib
(1916–1968)
1964 1965 துங்கு அப்துல் ரகுமான்
(III)
  கிர் ஜொகாரி
Mohamed Khir Johari
(1923–2006)
1965 1969
அப்துல் ரகுமான் யாகோப்
Abdul Rahman Ya'kub
(1928–2015)
கூட்டணி
(ஐக்கிய சபா கட்சி)
1969 1970 துங்கு அப்துல் ரகுமான்
(IV)
  உசேன் ஓன்
Hussein Onn
(1922–1990)
கூட்டணி (அம்னோ) 1970 1973 அப்துல் ரசாக் உசேன்
(I)
முகமட் யாகோப்
Mohamed Yaacob
(1926–2009)
13 ஆகஸ்டு 1973 4 செப்டம்பர் 1974
  மகாதீர் பின் முகமது
Mahathir Mohamad
(பிறப்பு. 1925)
பாரிசான் (அம்னோ) 5 செப்டம்பர் 1974 1 சனவரி 1978 அப்துல் ரசாக் உசேன்
(II)
உசேன் ஓன்
(I)
மூசா ஈத்தாம்
Musa Hitam
(பிறப்பு. 1934)
1 சனவரி 1978 16 சூலை 1981 உசேன் ஓன்
(II)
சுலைமான் தாவூத்
Sulaiman Daud
(1933–2010)
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) 17 சூலை 1981 17 சூலை 1984 மகாதீர் பின் முகமது
(I • II)
  அப்துல்லா அகமது படாவி
Abdullah Ahmad Badawi
(பிறப்பு. 1939)
பாரிசான் (அம்னோ) 17 சூலை 1984 10 ஆகஸ்டு 1986 மகாதீர் பின் முகமது
(II)
  அன்வர் இப்ராகீம்
Anwar Ibrahim
(பிறப்பு. 1947)
11 ஆகஸ்டு 1986 15 மார்ச் 1991 மகாதீர் பின் முகமது
(III • IV)
சுலைமான் தாவூத்
Sulaiman Daud
(1933–2010)
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) 15 மார்ச் 1991 7 மே 1995 மகாதீர் பின் முகமது
(IV)
  நஜீப் ரசாக்
Najib Razak
(பிறப்பு. 1953)
பாரிசான் (அம்னோ) 8 மே 1995 14 டிசம்பர் 1999 மகாதீர் பின் முகமது
(V)
மூசா முகமது
Musa Mohamad
(1943–2024)
15 டிசம்பர் 1999 26 மார்ச் 2004 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
  இசாமுடின் உசேன்
Hishammuddin Hussein
(பிறப்பு. 1961)
27 மார்ச் 2004 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(II • III)
  முகிதீன் யாசின்
Muhyiddin Yassin
(பிறப்பு. 1947)
10 ஏப்ரல் 2009 28 ஜூலை 2015 நஜீப் ரசாக்
(I • II)
Idris Jusoh
இட்ரிஸ் ஜுசோ
(பிறப்பு. 1955)
இரண்டாம் கல்வி அமைச்சர் 16 மே 2013 29 சூலை 2015 நஜீப் ரசாக்
(II)
மாட்சிர் காலிட்
Mahdzir Khalid
(பிறப்பு. 1960)
கல்வி அமைச்சர் 29 சூலை 2015 9 மே 2018
  மசுலி மாலிக்
Maszlee Malik
(பிறப்பு. 1974)
பாக்காத்தான் (பெர்சத்து) 21 மே 2018 3 சனவரி 2020 மகாதீர் பின் முகமது
(VII)
  மகாதீர் பின் முகமது
Mahathir Mohamad
(பிறப்பு.1925)
இடைக்காலம்
3 சனவரி 2020 24 பிப்ரவரி 2020
  முகமட் ராட்சி சிடின்
Mohd Radzi Md Jidin
(பிறப்பு.1977)
பெரிக்காத்தான் (பெர்சத்து) மூத்த கல்வி அமைச்சர் 10 மார்ச் 2020 24 நவம்பர் 2022 முகிதீன் யாசின்
(I)
இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  பட்லினா சிடேக்‌
Fadhlina Sidek
(பிறப்பு. 1977)
பாக்காத்தான் (மக்கள் நீதிக் கட்சி) கல்வி அமைச்சர் 3 டிசம்பர் 2022 பதவியில் உள்ளார் அன்வர் இப்ராகீம்
(I)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கல்வி_அமைச்சர்&oldid=4015087" இலிருந்து மீள்விக்கப்பட்டது