மலேர்கோட்லா மாவட்டம்

இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம்

மலேர்கோட்லா மாவட்டம் ( Malerkotla district), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் மலேர்கோட்லா ஆகும். சங்கரூர் மாவட்டத்தின் மலேர்கோட்லா, அமர்கர் மற்றும் அகமதுகர் ஆகிய வருவாய் வட்டங்களைக் கொண்டு மலேர்கோட்லா மாவட்டம் புதிய 23வது மாவட்டமாக 2 சூன் 2021 அன்று நிறுவப்பட்டது.[1]

மலேர்கோட்லா
ஈத்கா பள்ளிவாசல், மலேர்கோட்லா
ஈத்கா பள்ளிவாசல், மலேர்கோட்லா
பஞ்சாப் மாநிலத்தில் மலேர்கோட்லா மாவட்டத்தின் அமைவிடம்
பஞ்சாப் மாநிலத்தில் மலேர்கோட்லா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°32′N 75°53′E / 30.53°N 75.88°E / 30.53; 75.88
மாநிலம்பஞ்சாப்
கோட்டம்பாட்டியாலா
நிறுவியது02 சூன் 2021
தலைமையிடம்மலேர்கோட்லா
பரப்பளவு
 • மொத்தம்684 km2 (264 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,29,754
 • தரவரிசை23வது
 • அடர்த்தி629/km2 (1,630/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
148XXX
வாகனப் பதிவுPB-28(for Malerkotla)
PB-76(for Ahmedgarh)
PB-82(for Ahmedgarh SDM)
PB-92(for Amargarh)
பாலின விகிதம்896 /
சராசரி எழுத்தறிவு76.28%
மக்களவைத் தொகுதிசங்கரூர் மக்களவை தொகுதி
பதேகர் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதி2
  • மலேர்கோட்லா
  • அமர்கர்
சராசரி மழைப்பொழிவு450 மில்லிமீட்டர்கள் (18 அங்)
சராசரி கோடை வெப்பம்48 °C (118 °F)
சராசரி குளிர்கால வெப்பம்7 °C (45 °F)
இணையதளம்malerkotla.nic.in

மாவட்ட நிர்வாகம்

தொகு

684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் மலேர்கோட்லா வருவாய் வட்டம், அமர்கர் வருவாய் வட்டம் மற்றும் அகமதுகர் வருவாய் எனு மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் மலேர்கோட்லா அகமதுநகர் நகராட்சிகளையும் மற்றும் அமர்கர் பேரூராட்சிகளையும், 3 ஊராட்சி ஒன்றியங்களையும், 175 கிராம ஊராட்சிகளையும், 192 கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மலேர்கோட்லா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,29,754 ஆகும்.[3] இதன் 40.50% மக்கள் தொகை நகரபுறங்களில் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும்; பட்டியல் பழங்குடிகள்]] இதன் மக்கள் தொகையில் 93,047 (21.65%) ஆகவுள்ளனர்.[4] இம்ம்மாவட்டத்தில் சீக்கியர்கள் 50.89%, முஸ்லீம்கள் 33.26%, இந்துக்கள் 15.19% மற்றும் பிறர் 0.66% உள்ளனர்.[1][5] பஞ்சாபி மொழி பேசுபவர்கள் 96.69% உருது பேசுபவர்கள் 3.21% மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.10% ஆக உள்ளனர்.

அரசியல்

தொகு

இம்மாவட்டத்தின் அமர்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக, ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Punjab CM declares state's only Muslim-majority town Malerkotla as district on Eid". https://www.indiatoday.in/amp/india/story/punjab-cm-declares-state-s-only-muslim-majority-town-malerkotla-as-district-on-eid-1802664-2021-05-14. 
  2. [ https://malerkotla.nic.in/subdivision-blocks/ Malerkotla District]
  3. "Demography | District Malerkotla, Government of Punjab | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
  4. "District Census Handbook: Sangrur" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India. 2011.
  5. "Table C-01 Population by Religious Community: Punjab". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேர்கோட்லா_மாவட்டம்&oldid=3890738" இலிருந்து மீள்விக்கப்பட்டது