மல்லிகார்ச்சுன துர்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

மல்லிகார்ஜுன துர்கம் (Malligarjunadurgam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், குந்துகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மல்லிகார்ஜுனதுர்கம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,175
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635107

மக்கள் வகைப்பாடு தொகு

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 65 கிமீ தொலைவிலும், தளியில் இருந்து 17 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 330 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 718 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3175 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1664, பெண்களின் எண்ணிக்கை 1511 என உள்ளது.[2]

காணவேண்டிய இடங்கள் தொகு

இந்த ஊருக்கு அருகில் உள்ள மல்லிகார்ஜுன மலையி உச்சியில் கோட்டை ஒன்று உள்ளது. இக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 2996 அடி உயரத்தில் உள்ளது.[3] மேலும் இந்த மலையில் மல்லிகார்ஜுனர் சிவன் கோயில் உள்ளது. மேலும் மலையின் இடது புறத்தில் உள்ள ஒரு பாறைக் குன்றில் 11ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Malligarjunadurgam
  3. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 132. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. "தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா துர்கம் மலையில் பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு". செய்தி. தினகரன். 2 செப்டம்பர் 2017. Archived from the original on 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகார்ச்சுன_துர்கம்&oldid=3716978" இலிருந்து மீள்விக்கப்பட்டது