மாக்லோலோபசு

மாக்லோலோபசு (Machlolophus) என்பது பட்டாணிக் குருவி குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும். இதன் சிற்றினங்கள் முன்னர் பரசு பேரினத்தில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் 2013-இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு பகுப்பாய்வின் அடிப்படையில் மாக்லோலோபசு பேரினத்திற்கு மாற்றப்பட்டன. இதன் உறுப்பினர்கள் ஒரு தனித்துவமான உயிரினக் கிளையினை உருவாக்கின.[2]

மாக்லோலோபசு
மாக்லோலோபசு சாந்தோஜெனிசு (இமயமலை கருப்பு பட்டாணிக் குருவி)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பட்டாணிக் குருவி
பேரினம்:
மாக்லோலோபசு

கேபானிசு, 1851
மாதிரி இனம்
Parus spilonotus[1]
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்

மச்சோலோபசு

மாக்லோலோபசு பெயரானது செருமனிய பறவையியலாளர் ஜீன் கபனிசால் 1850-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இந்த வார்த்தை பாரம்பரிய கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. மக்லோசு (makhlos) ஆடம்பரமான பொருள், மற்றும் லோபோசு (lophos) முகடு என்று பொருள்.[4]

பின்வரும் ஆசியச் சிற்றினங்கள் இந்தப் பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன:[5]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
மாக்லோலோபசு நுச்சாலிசு வெண்பிடரி பட்டாணிக் குருவி தென்னிந்தியா
மாக்லோலோபசு கோல்சுடி மஞ்சள் பட்டாணிக் குருவி மத்திய தைவான்
மாக்லோலோபசு சாந்தோஜெனிசு இமயமலை கறும் முகட்டலகு பட்டாணிக் குருவி இந்திய துணைக்கண்டத்தில் இமயமலை
மாக்லோலோபசு அப்பலோனாடசு இந்தியக் கறுப்பு பட்டாணிக்குருவி இந்திய துணைக்கண்டம்
மாக்லோலோபசு இசுபில்லோனடசு மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி வங்கதேசம், பூட்டான், சீனா, ஹாங்காங், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து,வியட்நாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  3. Cabanis, Jean. Museum Heineanum : Verzeichniss der ornithologischen Sammlung des Oberamtmann Ferdinand Heine, auf Gut St. Burchard vor Halberstadt (Volume 1). R. Frantz. p. 91.
  4. Jobling, James A. The Helm Dictionary of Scientific Bird Names. Christopher Helm. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  5. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்லோலோபசு&oldid=3946273" இலிருந்து மீள்விக்கப்பட்டது