மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)
மாசற்ற கருத்தரித்தல் பேராலயம்அல்லது புனித கன்னி மரியாளின் மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (Cathedral of the Immaculate Conception of the Holy Virgin Mary) என்பது மாஸ்கோ உரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின் பேராலயமாகவும் புதிய கோதிக் கிறித்தவ தேவாலயமாகவும் உள்ளது. இரசியாவின் மைய ஆட்சி ஒக்ருக் அல்லது மாவட்டப்பகுதியில் அமைந்துள்ள இது மாஸ்கோவிலுள்ள இரண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தேவாலயங்களில் ஒன்றும், இரசியாவில் பெரியதும் ஆகும்.[1]
மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் புனிய கன்னி மரியாளின் மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் | |
---|---|
அமைவிடம் | மாஸ்கோ |
நாடு | இரசியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்கத் திருச்சபை |
வரலாறு | |
நிறுவப்பட்டது | திசம்பர் 21, 1911 |
நிகழ்வுகள் | மக்கள் தேவைக்காக சோவியத்தினால் மீளக்கட்டப்பட்டது, 1956 |
Architecture | |
நிலை | மறைமாவட்டப் பேராலயம் |
செயல்நிலை | இயங்குகிறது |
பாணி | கோதிக் மறுமலர்ச்சி |
நிருவாகம் | |
பங்குதளம் | பேதுரு, பவுல் |
உயர் மறைமாவட்டம் | மாஸ்கோ உரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் |
குரு | |
பேராயர் | பாலோ பெசி |
பேராலயக் கட்டுமானம் 1894 இல் சார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 1899 இல் அடிக்கல்நாட்டப்பட்டு, 1901 இல் கட்டுமான வேலைகள் தொடங்கின, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவ்வேலைகள் நிறைவடைந்தன. சிவப்புச் - செங்கல்லினால் மூன்று சுற்றுகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட இப்பேராலயக் கட்டமைப்பு வடிவம் கட்டடக்கலைஞரான தோமஸ் பக்தனோவிச் துவர்ஷெட்ஸ்கியால் மேற்கொள்ளப்பட்டது. இதன் வடிவமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் மடம், மிலான் பேராலயம் ஆகியவற்றின் பாங்குக்கேற்ப அமைந்துள்ளது. உருசியாவின் கத்தோலிக்க மற்றும் அயல்நாடுகளின் நிதி உதவியுடன் உருவான இக்கோயில் மாஸ்கோவின் போலாந்துப் பங்குக்காக சிற்றாலயமாக 1911 இல் அர்ப்பணிக்கப்பட்டது.
1917 உருசியப் புரட்சியின் விளைவாக, போல்செவிக்குகளால் உருசிய இடைக்கால அரசு நீக்கப்பட்டு உருசியா புதிதாக உருவாக்கப்பட்ட சோவியத் ஒன்றியப் பகுதியாக மாறியது. மார்க்சிச-லெனினியக் கருத்தியல் வழிவந்த புதியஅரசு நாத்திகத்தை ஊக்குவிக்கும் வகையில் பல கோயில்களை மூடுமாறு கட்டளையிட்டது. அதனடிப்படையில் இப்பேராலயம் 1938 இல் மூடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இப்பேராலயம் தகர்க்கப்படுவதற்கான அச்சுறுத்தல் இருந்தது. போருக்குப்பின் மக்கள் தேவைக்காகச் சேமிப்பிடமாகவும், பின் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. 1991 இல் பொதுவுடைமைக் கொள்கை வீழ்ச்சியைத் தொடர்ந்து, 1996 இல் கோயிலாக மாற்றப்பட்டது. 2002 இல் பேராலயம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. விரிவான மற்றும் பெரும் செலவிலான புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து இப்பேராலயம் 2005 இல் மீண்டும் அர்ப்பணிக்கபபட்டது.
58 ஆண்டுகள் சமயமற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இப்பேராலயம் , மீண்டும் 21 ஆம் நூற்றாண்டில் உருசியம், போலிய மொழி, கொரிய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, எசுப்பானியம், அருமேனிய மொழி, இலத்தீன் ஆகிய பல மொழிகளில் வழமையான கோயில் திருப்பணிகளையும், ஆர்கன் மற்றும் தேவாலய இசை வாத்தியங்களைக் கொண்டு ஈகைக் கச்சேரிகளையும் செய்துவருகின்றது. பேராலயம் கட்டப்பட்டதிலிருந்து மூன்றாவதாக தற்போது இங்குள்ள ஆர்கன் இசைக்கருவி சுவிட்சர்லாந்தின் பாசல் நகரப்பேராலயத்தால் கொடையாக வழங்கப்பட்டது. மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் உருசியாவின் பாரம்பரியக் கட்டடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.[2][3]
கட்டடக்கலையும் வசதிகளும்
தொகுபுதிய கோதிக் வடிவில் கட்டப்பட்ட பேராலயம் மூன்று சுற்றுக்களுடன் சிலுவை அமைப்புடனான பெருங்கோவில் தோற்றத்துடன், மூன்று நடுக்கூடங்களையும் ஒரு அரைவட்ட முகப்பையும் கொண்டுள்ளது. இது முழுவதும் செஞ்செங்கற்களினாலும், வெளியே சீமெந்து வேலையற்றும் கட்டப்பட்டுள்ளது. ஐந்து தூண்களைக் கொண்ட முதன்மைச்சுற்று 65 மீட்டர்கள் (213 அடி) வரை பரந்துள்ளது. ஒவ்வொன்றும் பக்கவாட்டாக 13 மீட்டர்கள் (43 அடி) நீளம் கொண்டுள்ளது. எண்கோண ஒளிக்கூண்டுக் கோபுரம் குறுக்கு அமைப்புக்கு மேலாக 30 மீட்டர்கள் (98 அடி) உயரத்தில் உள்ளது. புறத்தோற்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மட வடிவத்தை அடிப்படையாகக் கொண்டும், கோபுரம் அமைப்பு மிலான் பேராலயத்தைப் போன்றும் உள்ளன.[4] [5] பழைய பாங்குக்கோயில்களின் ஒவ்வொரு சுற்றுப்பக்கங்களும் ஐந்து முட்டுக்களால் பலப்படுத்தப்பட்டு, மொத்தமாகவுள்ள இப்பத்து சுவர்தாங்கிகளும் பத்துக் கட்டளைகளை அடையாளப்படுத்துகின்றன. புனரமைப்பின் பகுதியாக சிலுவைகள் எழுப்பப்பட்டு, ஒவ்வொரு முக்கிய கோபுரத்தின் மேலும் நிற்கின்றன. மத்திய புறத்தோற்ற உச்சியும் ஏனைய இரு உச்சிகளும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், பேராயர் தடேயுஸ் கொண்ருசிவிச்ஸ் ஆகியோரின் சின்னங்களைக் கொண்டுள்ளன.[5]
பெரும் நுழைவாயிலுக்கான முதல் பத்துப் படிகளும் பத்துக்கட்டளைகளை அடையாளப்படுத்த, பதினோராவது இயேசு கிறித்துவை அடையாளப்படுத்துகிறது.[5][6] இந்த பெரும் நுழைவாயில் பரலோகக் கதவை அடையாளப்படுத்துவதோடு, இயேசுவின் படிப்பிணைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படிவதன் மூலம் அதனை அடைய முடியும் எனவும் அடையாளப்படுத்துகிறது. பெரும் நுழைவாயில் தூண்களால் சூழப்பட்டு முக்கோண வடிவத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவச்சுவர் புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளால் அழகுபடுத்தப்பட்டு, மத்தியில் உள்ள பொன் முதல் எழுத்துக்கள் "VMIC" என அலங்கரிக்கப்பட்டுள்ளது. "VMIC" என்பது Virgo Maria Immaculata Concepta என்பதன் சுருக்கம் ஆகும். இதன் பொருள் "மாசற்றுக் கருத்தரித்த கன்னி மரியாள்" ("Virgin Mary, conceived unblemished") என்பதாகும். மூலக்கட்டட வடிவமைப்பில் முதல் எழுத்துக்களுக்குப் பதில், மரியாளின் யூத விசுவாசத்தைக் குறிக்கும் தாவீதின் நட்சத்திரம் இருந்தது.[5][6] மேலேயுள்ள முக்கோண வடிவச் சுவர் 3-மீட்டர் (9.8 அடி) உயர சன்னலாக வெளிர்நிறத்தைக் கொண்டு ஒளி ஊடுருவும் கல்லால் கட்டப்பட்டது.[5]
உசாத்துணை
தொகு- ↑ "Russlands größte katholische Kirche" (in German). Deutschlandradio. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2012.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Kath. Kathedrale in Moskau verlegt Gottesdienste" (in German). Priesterbruderschaft St. Pius X. Archived from the original on 6 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "храм римско-католический" (in Russian). Министерство культуры Российской Федерации—Главный инофрматционно-Вычислителый центр. Archived from the original on 4 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "О Храме" (in Russian). Official website of the church. Archived from the original on 21 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 30 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "О Храме » Архитектура храма" (in Russian). Official website of the church. Archived from the original on 29 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 30 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ 6.0 6.1 TV documentary about the cathedral, from the series "Myths and Legends", at TV channel Stolitsa; (in Russian), retrieved 30 March 2009
வெளி இணைப்புகள்
தொகுCathedral of the Immaculate Conception of the Holy Virgin Mary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- Official website of the cathedral with historic photographs பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் and videos பரணிடப்பட்டது 2012-04-24 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- More than 200 photographs of the cathedral; inside and outside (உருசிய மொழியில்)