மாலைமாற்று

மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.[1]

தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி, மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்று அடங்கும்.[2] மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.[3]

வரலாறு

தொகு
 
Sator Arepo Tenet Opera Rotas

இது வரையில் கண்டறியப்பட்ட பழைய மாலைமாற்றானது கி. மு. 79ஐச் சேர்ந்த இலத்தீன் சொல்லான Sator Arepo Tenet Opera Rotas என்பதாகும்.[4]

வகைகள்

தொகு

சொல்

தொகு
  • தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை  போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்.
  • ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்..

ஆங்கிலத்தில் நீண்ட மாலை மாற்று

தொகு

ஆக்சுவோர்டு ஆங்கில அகரமுதலியில் மாலைமாற்றாகவுள்ள நீண்ட சொல் Tattarrattat என்பதாகும்.

தொடர்கள்

தொகு

தமிழ் மொழியில்

  • தேரு வருதே,
  • மாடு சாடுமா,
  • மோரு தாருமோ
  • தோடு ஆடுதோ
  • மேக ராகமே
  • மேள தாளமே

போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளது.[5]

ஆங்கிலத்தில்

  • Was it a cat I saw?,
  • Do gees see God?,
  • A Toyota's a Toyota,
  • A nut for a jar of tuna,
  • Madam, I am Adam

போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

பொதுவாக, மாலைமாற்றுத் தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து-சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.

பெயர்கள்

தொகு

ஆங்கிலத்தில் Anna, Hannah, Ada, Bob, Eve போன்ற பெயர்கள் மாலைமாற்றுகளாக அமைந்துள்ளன.

பாடலில்

தொகு

சம்பந்தர்

தொகு

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.[6] [7]

கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
  • இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.
  • பாடலின் பொருள்
    • யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
    • நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
    • யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
    • காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
    • காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
    • காழீயா-சீர்காழியானே
    • மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
    • மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே
  • இப்படிப் பத்துப் பாடல்கள் உள்ளன.

பிறர்

தொகு

மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணம் ஆகிய தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பாக்கள் உள்ளன.[8]

எளிய பாடல்

தொகு
தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே
  • இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்
  • பாடலின் பொருள்
    • வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

திரைப்படப் பாடல்

தொகு
வினோதன் எனும் தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" எனும் நீண்ட திரைப்படப்பாடலும் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுத் திரைப்படப் பாடல் ஆகும். இதில் ஒவ்வொரு பதத்தை திருப்பிப்படிக்க முடியும். ஆனால் ஓர் அடியின் கடைசியில் இருந்து திருப்பிப்படிக்க இயலாது. இதனை மதன் கார்க்கி எழுதியதுடன் டி. இமான் இசையமைத்துள்ளார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Palindrome (ஆங்கில மொழியில்)
  2. "மாலைமாற்று PALINDROME பாகம் 2". Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  3. மாலைமாற்று எடுத்துக்காட்டுகள் 1(ஆங்கில மொழியில்)
  4. மாலைமாற்று எடுத்துக்காட்டுகள் 2(ஆங்கில மொழியில்)
  5. "மாலைமாற்று PALINDROME பாகம் 1". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  6. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். மாலைமாற்றுத் திருப்பதிகம். திருப்பிரமபுரம்.
  7. "மாலைமாற்று PALINDROME பாகம் 4". Archived from the original on 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  8. 117 117. சீகாழி
  9. "மேளராகமே பாடல் காணொளி". பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாலை மாற்று
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலைமாற்று&oldid=4174536" இலிருந்து மீள்விக்கப்பட்டது