மா. பாஸ்கர்
மா. பாஸ்கர் (M.Bhaskar: 3 ஏப்ரல் 1935 - 13 சூலை 2013) தமிழ்த் திரைப்படத் துறைக்கு மிகுதியும் பணியாற்றிய தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். அவர், இயக்குநர் சி. வி. ஸ்ரீதரின் உதவியாளராகத் தம் திரைத்துறை வாழ்வைத் தொடங்கினார். பின்னர் தனது வழிகாட்டியும் குருவுமான, சி. வி. ஸ்ரீதரை விட்டு நீங்கிய அவர், சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ், சின்னப்பத் தேவரின் கீழ் எஸ். பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன், உதிரிப் பூக்கள் பாலகிருஷ்ணன் மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் இவர், '20th Century Fox' என்னும் ஆலிவுட் கம்பெனி கோவாவில் படப்பிடிப்பு நடத்தியபோது அக்கம்பெனிக்காகப் பணியாற்றினார்.
ஆஸ்கார் மூவீஸ் மா. பாஸ்கர் Oscar Movies M. Bhaskar | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 3, 1935 பட்டம்புதூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு[1] |
இறப்பு | 13 சூலை 2013[2] சென்னை, தமிழ்நாடு | (அகவை 78)
இனம் | தமிழ் தேவர் |
கல்வி | பி. ஏ. ஆங்கில இலக்கியம், எம். ஏ. அரசியல் அறிவியல் எப். எல் (சட்டம்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரசிடென்சி கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை சட்டக் கல்லூரி, சென்னை |
பணி | கதை, திரைக் கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் & தயாரிப்பாளர் (ஆஸ்கார் மூவீஸ் நிறுவனர்) |
செயற்பாட்டுக் காலம் | 1978-2013 |
அமைப்பு(கள்) | ஆஸ்கார் மூவீஸ் |
பெற்றோர் | வி. எஸ். மாரியப்பத் தேவர் & ஜானகி அம்மாள் |
ஆரம்பகால வாழ்க்கைதொகு
மா. பாஸ்கர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள, பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவர் இயக்குநர் சி. வி. ஸ்ரீதரின் உதவியாளராகத் தம் திரைத்துறை வாழ்வைத் தொடங்கினார். இவர் பைரவி என்னும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1] பைரவி திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ஆஸ்கார் மூவீஸ் மா. பாஸ்கரால் இயக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்த் தமிழ்திரையில் தனியொரு கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.[3] இப்படம் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்து அவரை முன்னணி நடிகராக்கியது. ரஜினி இப்படத்தின்மூலம் சூப்பர்ஸ்டார் என்னும் பட்டத்தைப் பெற்றார்.[4][5][5][6][7] இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாகவும், கீதா ரஜினியின் தங்கையாகவும் நடித்தார்கள். கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டார். ஸ்ரீகாந்த் இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்தார். மலையாள நடிகர் சுதீர் பைரவி கதாப்பாத்திரத்தின் ஒன்றுவிட்ட அண்ணனாக நடித்தார். மனோரமாவும் சுருளிராசனும் இதர முக்கியப் பாத்திரங்களில் நடித்தனர்.
இறப்புதொகு
பாஸ்கர் 2013 ஆம் ஆண்டு சூலை 13ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அப்போது அவருக்கு அகவை 78 ஆகும்.[1] இவருக்கு மீனா ராணி என்ற மனைவியும் பாலாஜி பிரபு, மாரியப்ப பாபு என இரு மகன்களும் ஜானகிபிரியா என ஒரு மகளும் இருக்கின்றனர்.[8] இவரது இறப்புச் செய்தியானது தொலைக்காட்சி, நாளேடுகள், பத்திரிக்கைகள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக உடனடியாக அறிவிக்கப்பட்டது.[8]
திரைப்பட வரலாறுதொகு
Year | Film | Language | FILMCAST | Notes |
---|---|---|---|---|
1975 | இன்னும் ஒரு மீரா | தமிழ் | டெல்லி கணேஷ், குட்டி பத்மினி | |
1978 | பைரவி[9][10] | தமிழ் | ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், மனோரமா, சுருளிராசன், விகே ராமசாமி, சுதிர், பைரவி கீதா | ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் தமிழ் படம் |
1979 | பைரவி | தெலுங்கு | ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா | ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் தெலுங்கு படம் |
1980 | சூலம் | தமிழ் | ராஜ்குமார் சேதுபதி, ராதிகா | வைரமுத்து இப்படத்தின்மூலம் தம் திரைப் பாடலாசிரியர் பணியைத் துவங்கினார். . |
1982 | பக்கத்து வீட்டு ரோஜா | தமிழ் | கார்த்திக், ராதா, கவுண்டமணி, ஜனகராஜ், செந்தில், எஸ் எஸ் சந்திரன், தியாகு | |
1982 | தீர்ப்புகள் திருத்தப்படலாம் | தமிழ் | சிவக்குமார், சத்யராஜ், அம்பிகா, சசிகலா, விஎஸ் ராகவன், மீனா, விஎஸ் கோபாலகிருஷ்ணன் | |
1983 | தண்டிக்கப்பட்ட நியாயங்கள் | தமிழ் | சிவக்குமார், லட்சுமி, சிவச்சந்திரன், மீனா, புஷ்பலதா | |
1984 | ஒரு சுமங்கலியுடே கதா | மலையாளம் | ஜகாதி ஸ்ரீகுமார், திக்குரிசி சுகுமாரன் நாயர், இரதீஸ் மற்றும் சந்தோஷ் | இந்தப் படம் சியாம் மற்றும் உஷா உதூப் ஆகியோரால் பாடல் இசைக்கு புகழ் பெற்றது. |
1985 | பவுர்ணமி அலைகள் | தமிழ் | சிவக்குமார், அம்பிகா, ரேவதி, மேஜர் சுந்தரராஜன், மீனா, சுமித்ரா | |
1986 | பன்னீர் நதிகள் | தமிழ் | சிவக்குமார், அமலா, ஜீவிதா, ஜயஸ்ரீ, நிழல்கள் இரவி, மீனா, இராஜசுலோச்சனா, கோவைசரளா, செந்தில், எஸ் எஸ் சந்திரன் | |
1986 | சிரவண சந்தியா[சான்று தேவை] | தெலுங்கு | சோபன் பாபு, விசயசாந்தி, சுபாசினி மணிரத்னம், ராவ் கோபால் ராவ், கொல்லப்புடி மாருதி ராவ், இரமண மூர்த்தி, சுதிவேலு, சுதி வீரபத்ர ராவ், ஜான்சி & கே. விஜயா | 1986 இல் 100 ஆம் நாள் விழா சென்னை விஜய சேஷ மஹாலில் நடந்தது. மா. பாஸ்கர், கணேஷ் பாட்ரோ, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, கே. சக்கரவர்த்தி, சுதாகர் ரெட்டி, டி. சிவ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். |
1987 | மஜால் | இந்தி | ஜிதேந்திரா, ஜயப் பிரதா மற்றும் ஸ்ரீதேவி | |
1989 | சட்டத்தின் திறப்புவிழா | தமிழ் | கார்த்திக், ஷோபனா, இரவிச் சந்திரன், விஎஸ் இராகவன், சுமித்திரா, குயிலி | |
1991 | எல்லாம் உங்கள் நன்மைக்கே[11] | தமிழ் | நிழல்கள் இரவி, ஷர்மிலி, எஸ்எஸ் சந்திரன், மேஜர் சுந்தர ராஜன் | |
1993 | சக்ரவர்த்தி | தமிழ் | கார்த்திக், பானுபிரியா, இராஜேஷ், நிழல்கள் இரவி, மேஜர் சுந்தர்ராஜன் | |
1995 | விஷ்ணு | தமிழ் | விஜய், சங்கவி, ஜெய்சங்கர், எஸ் எஸ் சந்திரன், தலைவாசல் விஜய் | |
2000 | காதல் ரோஜாவே | தமிழ் | விஷ்ணு, பூஜா குமார், சரத் பாபு, சார்லி | பூஜா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். |
2004 | ஒன்பது ரூபாய் நோட்டு | தமிழ் | சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இரம்யா கிருஷ்ணன், அர்ச்சனா, நாசர் | படத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தங்கர் பச்சானால் இயக்கப்பட்ட இப்படம் தாமதமாக வெளியிடப்பட்டது. |
2008 | தோட்டா | தமிழ் | ஜீவன், பிரியா மணி, சரண் ராஜ், இலிவிங்ஸ்டன், சந்திரசேகர், தாமு | |
2009 | மீரா ஆக்ரோஷ் | இந்தி | ஜீவன், பிரியாமணி, மல்லிஷ்கா குஜ்ஜார், நீபா, ராஜ் கபூர், மல்லிகா, இலிவிங்ஸ்டன், சம்பத் குமார், சரண்ராஜ் | |
2010 | தோட்டா | தெலுங்கு | ஜீவன், பிரியாமணி, மல்லிஷ்கா குஜ்ஜார், ஹேமா சவுத்திரி, நீபா, ராஜ் கபூர், மல்லிகா, இலிவிங்ஸ்டன், சம்பத் குமார், சரண்ராஜ் | |
2011 | ஊதாரி | தமிழ் | வினோத் கிருஷ்ணன், விஷ்ணு பிரியா, கோமல் சர்மா | |
2013 | ஏக் புல்லட் | இந்தி | ஜீவன், பிரியாமணி மற்றும் பலர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.indiaglitz.com/mbhaskar-no-more-tamil-news-95471
- ↑ "Cinema Plus / TV Serials : Serials". The Hindu. 6 November 2009. Archived from the original on 17 மார்ச் 2011. https://web.archive.org/web/20110317115759/http://www.hindu.com/cp/2009/11/06/stories/2009110650301400.htm. பார்த்த நாள்: 30 November 2011.
- ↑ http://www.cinemalead.com/visitor-column-id-the-journey-of-living-legend-rajinikanth-part-2-rajinikanth-20-08-133154.htm
- ↑ 5.0 5.1 http://www.indiatvnews.com/entertainment/bollywood/rajinikanth-top-films-19150.html
- ↑ Superstar Rajinikanth's biography : Rajini News – India Today. இந்தியா டுடே. 10 September 2010. http://indiatoday.intoday.in/story/superstar-rajinikanths-biography/1/112118.html. பார்த்த நாள்: 3 December 2011.
- ↑ "Think you know Rajnikanth? Take this quiz! – Rediff.com Movies". Movies.rediff.com. 28 September 2010. 30 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 8.0 8.1 http://www.cinemalead.com/news-id-director-who-changed-rajnis-fortune-dies-oscar-movies-13-07-132796.htm
- ↑ "Starry starry might". தி டெலிகிராஃப். 10 October 2010. 16 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|publisher=
(உதவி) - ↑ Naman Ramachandran (2014). Rajinikanth: The Definitive Biography. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8184757964. https://books.google.com/books?id=3mzyPGSfwKMC&pg=PT345&dq=%22M.+Bhaskar%22+Bairavi&hl=en&sa=X&ei=6lt3U9ekFcaQuASvqYGADA&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=%22M.%20Bhaskar%22%20Bairavi&f=false.
- ↑ "Ellam Ungal Nanmaike - Celluloid". syzygy. 10 October 2010. 19 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|publisher=
(உதவி)