மிசோ மகளிர் சங்கம்
நாரி சக்தி விருது பெறும் மகளிர் சங்கப் பிரதிநிதி | |
உருவாக்கம் | சூலை 6, 1974 |
---|---|
நிறுவனர் | சங்குமி புல்சுவாக் |
சேவை பகுதி | மிசோரம் |
ஆட்சி மொழி | மிசோ மொழி |
விருது(கள்) | நாரி சக்தி விருது |
மிசோ மகளிர் சங்கம் (Mizo Hmeichhe Insuihkhawm Pawl)(மிசோ மொழியில் "பெண்களை ஒன்றிணைத்தல்" என்று பொருள்படும்) என்பது இந்தியாவின் மிசோரம் ஒன்றிய பிரதேசத்தில் 6 சூலை 1974 அன்று உருவாக்கப்பட்டது. இது பெண்களுக்கு அதிகாரம் மற்றும் பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1][2][3] ஒரே பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக்கத் தில்லி உயர் நீதிமன்றத்தின் 2009 தீர்ப்பைத் தொடர்ந்து, மிசோ மகளிர் சங்கம், மிசோரம் உபா பவுல், இளம் மிசோ சங்கம் (YMA) மற்றும் மிசோ மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து நங்கை, நம்பி, ஈரர், திருனர் எதிர்ப்பு கூட்டணியில் இணைந்தது.[4]
2013-ல், மிசோரம் சட்டப் பேரவையில் முன்மொழியப்பட்ட மிசோ திருமண மசோதா, மிசோ மரபுரிமை மசோதா மற்றும் மிசோ விவாகரத்து மசோதா போன்ற பல மசோதாக்களுக்குப் பின்னால் மிசோ மகளிர் சங்க பங்கு இருந்தது.[1] 2014 மிசோ திருமண விவாகரத்து மற்றும் சொத்தின் பரம்பரைச் சட்டம், விவாகரத்துக்குப் பிறகு மனைவிக்கு ஒன்றும் இல்லாமல் போகும் வழக்கமான நடைமுறையை ரத்து செய்து, மனைவி எந்தச் சொத்திலும் 50 சதவிகிதம் வரை வைத்திருக்க முடியும் என்பதை நிறுவியது.[2][5] 2018 சட்டமன்றத் தேர்தலின் போது, மிசோ மகளிர் சங்கம், அதிகமான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்தது.[6] மிசோ மகளிர் சங்கத்தினை பி. சங்குமியும் பின்னர் லால்த்லமுவானியும் தலைமை தாங்கி வழிநடத்தினார்.[7][8]
அங்கீகாரம் மற்றும் விருதுகள்
தொகுமிசோரமில், சூலை 6ஆம் தேதி மிசோ மகளிர் சங்கம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தேசிய வங்கி விடுமுறை நாளாகும்.[3] மிசோ மகளிர் சங்கத்திற்கு 2016 நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hanghal, Ninglun (10 September 2013). "League of extraordinary women" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628171033/https://www.thehindu.com/features/metroplus/society/league-of-extraordinary-women/article5111555.ece.
- ↑ 2.0 2.1 "41 years struggle for gender equality in Mizoram" (in en-IN). The Northeast Today. 6 July 2015 இம் மூலத்தில் இருந்து 18 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211118193624/https://thenortheasttoday.com/states/mizoram/41-years-struggle-for-gender-equality-in-mizoram/cid2551661.htm.
- ↑ 3.0 3.1 "Bank Holidays July 2022: There Are 16 Bank Holidays This Month" (in en-IN). India Times. 28 June 2022 இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628171033/https://www.indiatimes.com/trending/social-relevance/july-2022-bank-holidays-573379.html.
- ↑ "Mizoram NGOs to 'cleanse' society of homosexuals" (in en). Deccan Herald. 2 October 2015 இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628171034/https://www.deccanherald.com/content/504044/mizoram-ngos-cleanse-society-homosexuals.html.
- ↑ "New Mizo marriage and inheritance of property law soon: Min". Business Standard India. 17 December 2014 இம் மூலத்தில் இருந்து 3 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220303023405/https://www.business-standard.com/article/pti-stories/new-mizo-marriage-and-inheritance-of-property-law-soon-min-114121700654_1.html.
- ↑ Karmakar, Rahul (25 November 2018). "Mizoram Assembly Elections 2018: Little room for women" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628171033/https://www.thehindu.com/elections/mizoram-assembly-elections-2018/mizoram-assembly-elections-2018-little-room-for-women/article25591748.ece.
- ↑ "Mizoram's Padma awardee B Sangkhumi felicitated". ETV Bharat News. Archived from the original on 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 June 2022.
- ↑ "Mizo women's body for proper representation in assembly" (in en). The Times of India. 30 August 2013 இம் மூலத்தில் இருந்து 28 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220628171033/https://timesofindia.indiatimes.com/city/guwahati/mizo-womens-body-for-proper-representation-in-assembly/articleshow/22149519.cms.
- ↑ "Nari Shakti Awardees - M.H.I.P., Mizoram". Ministry of Women and Child Development. Archived from the original on 10 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 June 2022.