முகப்படாம்

யானையின் அணிகலன்

முகப்படாம் அல்லது நெற்றிப் பட்டம் (Nettipattom) என்பது கோயில் யானைகளை அலங்கரிக்கக் கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் ஆபரணம். யானைகளின் நெற்றியில் இவை அணிவிக்கப்படுகின்றன. நெற்றிப்பட்டம் தங்கம் மற்றும் செப்பு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இது கேரள கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த ஒன்றாகும். நெற்றிப்பட்டமும் முத்துக்கூடும் புத்தமதத்தின் பங்களிப்பாகும்.[1] சூரல்போலி, நாகபதம், வென்டோட் என பல்வேறு வகையான நெற்றிப்பட்டங்கள் உள்ளன. இவை பொதுவாக நெற்றிப்பட்டம் என்று அழைக்கப்பட்டாலும், கோயில்களில் தலைகெத்து என்று அழைக்கப்படுகிறது. 

பெயரிடல்

தொகு

நெற்றிப்பட்டம் என்ற சொல் பாலி மொழியிலிருந்து வந்தது. பாலி மொழியில் பட்டம் என்பதன் பொருள் இலை.[2]

வரலாறு

தொகு
 
நெற்றிப்பட்டம் அணிந்த யானை

பெளத்த மதத்தில், சிறப்பு மரியாதையினை கொடுக்க, ஆலமர இலை ஒன்றினை நெற்றியில் வைத்திருப்பார்கள். இது "பட்டம்" கொடுப்பதாக அறியப்பட்டது. கோயில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள் ஆலமர இலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. பிற்காலத்தில் இலைகளுக்குப் பதில் ஆபரணமாக மாறியது. இதற்கு நெற்றிப்பட்டம் என்ற பெயரும் வந்தது.

உற்பத்தி

தொகு
 
வண்ணக்கிண்ணம்

நெற்றிப்பட்டம் திருச்சூரில் தயாரிக்கப்படுகிறது. திரிப்பூணித்துறை நெற்றிப்பட்டம் தயாரிக்கப்படும் மற்றொரு இடமாகும். உலோக பந்துகளைச் சிறப்பு வடிவங்களில் பருத்தி மற்றும் சணல் சாக்குகளில் தைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் செப்பு (தாமிரம்) பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகிறது. பித்தளை அரிதாக இருந்தாலும் பயன்படுத்தப்படுகிறது. செம்பு அல்லது பித்தளை பயன்படுத்தி தயார் செய்த பின்னர் மஞ்சள் பிரகாசத்திற்குத் தங்க முலாம் அல்லது வண்ணம் தீட்டப்படுகிறது.[சான்று தேவை]

நெற்றிப்பட்டம் ஓர் பல பாகங்களைக்கொண்ட சிக்கலான ஆபரணம் ஆகும். இது அரை நிலவின் வடிவத்தில் 11 பொருள்களைக் கொண்டுள்ளது. கூம்பன் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஒரு கூர்மையான பொருள், 2 சுற்று ஒன்று, 37 அரை பந்துகள், 40 முழு பந்துகள், 1 கலாஞ்சி மற்றும் 5000 சிறிய குமிழ்கள் இதில் உள்ளன.

 
கூம்பன் கிண்ணம்

மேற்கோள்கள்

தொகு
  1. പി.ഒ., പുരുഷോത്തമൻ (2006). ബുദ്ധന്റെ കാല്പാടുകൾ-പഠനം. കേരളം: പ്രൊഫ. വി. ലൈല. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-240-1640-2.
  2. പി.എം., ജോസഫ് (1995). മലയാളത്തിലെ പരകീയ പദങ്ങൾ. തിരുവനന്തപുരം: കേരള ഭാഷാ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട്.

கேலரி

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகப்படாம்&oldid=4118008" இலிருந்து மீள்விக்கப்பட்டது