முகவெலும்பு
முகவெலும்புகள் (Facial bones) எனப்படுபவை மண்டையோட்டுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும் எலும்புகள் ஆகும்[1]. இவை தலையோட்டின் முன், கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகளாகும். இவற்றுள் வாய்ப்பகுதியில் இருக்கும் முக்கிய எலும்பான தாடையெலும்பும் அடங்கும். முக எலும்புகள் என்பவை முகத்தில் அமைந்ததுள்ள 14 எலும்புகள் ஆகும்.
முகவெலும்புகள் | |
---|---|
14 முகவெலும்புகள். | |
14 முகவெலும்புகள் மண்டையோட்டுன்
நீலம்: மூக்குச்சுவர் எலும்பு (1)
மஞ்சள்: மேல்தாடை எலும்பு (2)
ஊதா: கீழ்த்தாடை எலும்பு (1)
இளஞ்சிவப்பு: மூக்கெலும்பு (2)
சிவப்பு: அண்ணவெலும்பு (2)
வெளிர்நீலம்: கண்ணீர்க் குழாய் எலும்பு (2)
கரும்பச்சை: கன்ன எலும்புகள் (2)
வெளிர்பச்சை: கீழ்மூக்கு சங்கெலும்பு (2) | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ossa faciei, ossa facialia |
MeSH | D005147 |
TA2 | 356 |
Anatomical terms of bone |
மனித முகவெலும்புகள்
தொகுமனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் 14 முகவெலும்புகளும் விளங்குகின்றன:[1][2][3]
- கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2
- கண்ணீர்க் குழாய் எலும்பு (Lacrimal bones) - 2
- கீழ்த்தாடை எலும்பு (Mandible) - 1
- மேல்தாடை எலும்பு (Maxilla) - 2
- மூக்கெலும்பு (Nasal bones) - 2
- அண்ணவெலும்பு (Palatine bones) - 2
- மூக்குச்சுவர் எலும்பு (Vomer) - 1
- கன்ன எலும்பு (Zygomatic bones) - 2
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Learn Bones/Skull Bones|Cranial and Facial Bones
- ↑ SEER Training Modules/Anatomy & Physiology/Skeletal System/Divisions of the Skeletal/Axial Skeletal, National Cancer Institute
- ↑ "Facial Bones- Definition from Merriam-Webster's Medical Dictionary". Archived from the original on 2008-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.