முஜ்ரா நடனம்
முஜ்ரா நடனம் என்பது முகலாய சாம்ராஜ்யத்தின் போது தெற்கு ஆசியாவில் தோன்றிய ஆடல் கணிகைகளால் ஆடப்படும் ஒரு வகை நடனம் ஆகும். உயரடுக்கு வர்க்கம் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்களான இந்திய சமுதாயத்தின் நவாப்கள் (பெரும்பாலும் முகலாய பேரரசரருடன் அரச ரீதியிலான தொடா்பில் இருந்தவா்கள் ) இரவுநேரங்களில் தங்கள் பொழுதுபோக்கிற்காக அடிக்கடி புறப்பெண்டிர் அல்லது ஆடல் கணிகைகளின் நடனங்களை காண்பதை பழக்கமாக்கிக் கொண்டனா். முகலாய சாம்ராஜ்யத்தின் சீரழிந்த அல்லது வீழ்ச்சியடைந்த ஆண்டுகளில் இந்த போக்கு பெருகி இருந்ததை வரலாறுகள் மூலம் தெளிவாக அறிய முடியும். [1]
பின்னணி மற்றும் வரலாறு
தொகுஇந்த நடனம் பாரம்பாிய கதக் நடனத்தின் கூறுகளுடன் தும்ரிஸ் மற்றும் கஜல்கள் உள்ளிட்ட பூர்வீக இசையுடன் இணைக்கிறது. அக்பர் முதல் பகதூர் ஷா ஜாபரின் ஆளும் காலங்கள் வரையிலான பேரரசர்கள் போன்ற பிற முகலாயர்கள் காலத்து கவிதைகளும் இதில் அடங்கும். [2] முஜ்ரா பாரம்பரியமாக மெக்பில்ஸ் என்ற நடன மண்டபங்கள் மற்றும் கேத்தாஸ் அல்லது அவேலி என்றழைக்கப்படும் வசதி படைத்த சீமான்களின் சிறப்புப் வீடுகளிலும் ஆடப்பட்டது. . துணைக் கண்டத்தில் முகலாய ஆட்சியின் போது, டெல்லி, லக்னோ, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில், முஜ்ரா நடனம் பாரம்பரியமாக ஒரு குடும்பக் கலையாக இருந்தது, பெரும்பாலும் தாயிடமிருந்து மகளுக்கு இந்த நடனம் கற்றுத்தரப்பட்டு ஆட வைத்தனா்.. இந்த புறப்பெண்டிர் அல்லது தவாய்ப்புகள் என்றழைக்கப்படும் ஆடல்கணிகைகள் மேல்தட்டு வர்க்கத்தினரை அணுகுவதற்கும் தொடா்பு கொள்வதற்குமான சில சக்தி மற்றும் அந்தஸ்தையும் பெற்றிருந்ததோடு அவர்களில் சிலர் கலாசாரத்துடன் தொடா்புடையவா்களாகவும் அறியப்பட்டு வந்தனா். சில உயர் வகுப்பு குடும்பங்கள் தங்கள் மகன்களை முஜ்ரா நடன மங்கைகளிடம் இங்கித நடத்தை நெறிகள் (தெஹ்ஸீப்) மற்றும் உரையாடல் கலையை கற்றுக்கொள்வதற்காக அனுப்பி வைத்தனா்.. [1] அவர்கள் சில நேரங்களில் ஆடல் கணிகை என்றும் அழைக்கப்பட்ட அவா்கள் நடனக் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் அவர்களின் புரவலர் நவாப்களின் விளையாட்டுத் தோழர்களாகவும் இருந்தனர்.
தற்போதைய நிலை
தொகுநவீன முஜ்ரா நடனக் கலைஞர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பாரம்பரிய முகலாய கலாச்சாரம் அதிகமாக உள்ள நாடுகளில் திருமணங்கள், பிறந்த நாள் மற்றும் பிரம்மச்சாரிய விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். ஓரளவிற்கு, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடனக் கலைஞர்கள் பிரபலமான உள்ளூர் இசையுடன் நவீன வடிவிலான முஜ்ராவை பெரும்பாலும் ஆடுகிறார்கள். [1] [3]
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்
தொகு2005 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் நடனக் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டபோது, பல முன்னாள் கேளிக்கை விடுதிப் பெண்கள் மும்பையில் உள்ள கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள கென்னடி பிரிட்ஜ் அருகே உள்ள 'காங்கிரஸ் ஹவுஸுக்கு' குடிபெயர்ந்தனர், இது முஜ்ரா நடனத்தின் நகரத்தின் பழமையான மையமாகும்.இந்தப் பெண்கள் ஆக்ரா, இந்தியா மற்றும் லாகூர், மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய இடங்களில் முஜ்ரா நடனப் பயிற்சி பெற்றவர்கள் ஆவா். கராச்சி, லாகூரின் ஹீரா மண்டி பகுதியை “பாகிஸ்தானின் பழமையான சிவப்பு விளக்கு மாவட்டம் பல நூற்றாண்டுகளாக இருந்தது, பாரம்பரிய சிற்றின்ப நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் விபச்சாரிகளின் மையமாக இருந்தது” என டான் செய்தித்தாள், விவரிக்கிறது.[4]
இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளில், முஜ்ரா நடனப் பெண்டிரை் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனா். உதாரணமாக அவர்கள் வட இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் தாவாய்ஃப்கள் (இந்தி மற்றும் உருது பேசும் பகுதிகளில்) என்றும், தென்னிந்தியாவில் தேவதாசிகள் என்ற பெயரிலும் பாய்ஜிஸ் என்று வங்காளத்திலும் அழைக்கப்படுகின்றனர் [1]
திரைப்பட படப்பிடிப்புகளில் சர்வதேச நடனத் தொழில் அல்லது தெற்காசிய நடன தொழிலை பெரும்பாலான பெண்கள் நம்பி இருக்கின்றனர்
மராத்தி மற்றும் இந்தி / உருது மொழிகளில் முஜ்ரா என்பதன் பொருள்:
- மரியாதை செலுத்துதல்
- நடனமாடும் பெண்ணின் இசை நடிப்பு
- தோல்வியுற்ற வணக்கம்
மேலும் காண்க
தொகு- நடனப் பட்டி (இந்தியா)
- நாட்ச்
- ஹீரா மண்டி (பாகிஸ்தானின் லாகூரில் ஷாஹி மொஹல்லா அல்லது சிவப்பு விளக்கு மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது)
மேலும் படிக்க
தொகு- மார்தா ஃபெல்ட்மேன், போனி கார்டன். புறப்பெண்டிர்க் கலை: குறுக்கு கலாச்சார முன்னோக்குகள் . பக். 312–352.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Soumya Rao (15 May 2019). "Mughal-era courtesans are the unsung heroes of India's freedom struggle". Quartz India website. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
- ↑ Sanjoy Hazarika (6 October 1985). "THE RICHES OF MOGUL INDIA BRING A DYNASTY TO LIFE". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
- ↑ John Caldwell, University of North Carolina at Chapel Hill,, Southeast Review of Asian Studies Volume 32 (2010), pp. 120-8, Retrieved 2 February 2017
- ↑ 'How Facebook is killing Lahore's Heera Mandi' on Dawn (newspaper) Published 23 August 2016, Retrieved 2 October 2019