மு. அ. சிதம்பரம்

இந்திய தொழிலதிபர்
(முத்தையா அண்ணாமலை சிதம்பரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மு. அ. சிதம்பரம் (M. A. Chidambaram) என்னும் முத்தையா அண்ணாமலை சிதம்பரம் (அக்டோபர் 12, 1918-ஜனவரி 19, 2000) ஒரு தொழிலதிபர் ஆவார். இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்துள்ளார்[1].

முத்தையா அண்ணாமலை சிதம்பரம்
பிறப்பு(1918-10-12)12 அக்டோபர் 1918
கானாடுகாத்தான்
இறப்பு19 சனவரி 2000(2000-01-19) (அகவை 81)
சென்னை, இந்தியா
பெற்றோர்அண்ணாமலை செட்டியார் (தந்தை)
பிள்ளைகள்அ. சி. முத்தையா, சீதா

வாழ்க்கை

தொகு

பிறந்த ஊர் கானாடுகாத்தான். பள்ளிப்படிப்பு சென்னையில். குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தொழில்களைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலையால், கல்வியைத் தொடர முடியவில்லை எனினும் இங்கிலாந்தில் உள்ள வின்செஸ்டர் நகரில் கல்வியை சிறிது தொடர முடிந்தது.

பணிகள்

தொகு

செட்டிநாட்டு அரசர், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மூன்றாவது மகனான மு. அ. சிதம்பரம் இளம் வயதிலேயே குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தினார். சர்க்கரை, இரும்பு, ஆட்டோமொபைல், கப்பல் எனப்பல தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் தமிழக அரசுடன் இணைந்து ஸ்பிக் உர ஆலையைத் தொடங்கியதில் இவருக்கு முதன்மைப் பங்குண்டு. விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவரின் முயற்சியினால் சென்னையில் உருவானதுதான் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கம்.

வகித்த பொறுப்புகள்

தொகு

1955இல் சென்னை மேயராகவும், 1951முதல் 1955வரை தென்னிந்திய தொழில் வர்த்தக அவையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழிசைக்கு தொண்டாற்றிய இவர் தமிழிசை சங்கத்தின் கௌரவச் செயலாளராக இருந்தார்.[2],

குறிப்புகள்

தொகு
  1. "The Hindu : M.A. Chidambaram, a multi-faceted personality". hindu.com. 2000. Archived from the original on 16 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013. Born on October 12, 1918, {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்79
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1954
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அ._சிதம்பரம்&oldid=4041770" இலிருந்து மீள்விக்கப்பட்டது