முன்னீர்பள்ளம்

திருநெல்வேலி மாவட்ட சிற்றூர்

முன்னீர்பள்ளம் (Munnirpallam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

முன்னீர்பள்ளம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
627356

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், பாளையங்கோட்டையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 655 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மக்கள் வகைபாடு

தொகு

இந்த கிராமத்தில் 1,928 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7,183 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,616 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3567 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 72.03% ஆகும். இதில் ஆண்களில் எழுத்தறிவு விகிதம் 77.26% என்றும், பெண்களிட் எழுத்தறிவு விகிதம் 66.87% ஆகும்.[2] இந்த ஊரின் எழுத்தறிவு விகிதமானது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

இந்த ஊரில் பரிபூரண கிருபேசுவரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்த ஊரில் பிறக்கும் ஆண் பிள்ளைகளுக்கு இந்த சிவனின் பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது.[3]

ஊரைச் சேர்ந்த பிரபலங்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Munnerpallam Village". www.onefivenine.com. Retrieved 2023-02-05.
  2. "Munnirpallam Village in Palayamkottai (Tirunelveli) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2023-02-05. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "பூர்ணம் விஸ்வநாதன் 100: குறையொன்றுமில்லை!". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-05.
  4. "மு.சி.பூர்ணலிங்கம் 10". Hindu Tamil Thisai. Retrieved 2021-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னீர்பள்ளம்&oldid=3651712" இலிருந்து மீள்விக்கப்பட்டது