மும்பையில் யூதர்களின் வரலாறு

வரலாற்றின் அம்சம்

மும்பையில் உள்ள யூதர்களின் வரலாறு (History of the Jews in Mumbai) என்பது முதல் நூற்றாண்டில் யூதர்கள் மும்பையில் குடியேறத் தொடங்கியபோது, அதன் பொருளாதார வாய்ப்புகளின் காரணமாக தொடங்கியது.[1] மும்பையின் யூத சமூகம் கொங்கணின் பெனே இசுரேல் , ஈராக் பாக்தாதி யூதர்கள் மற்றும் மலபாரில் உள்ள கொச்சின் யூதர்கள் என மூன்று தனித்துவமான சமூகங்களின் எச்சங்களைக் கொண்டிருந்தது. [2]

மும்பையில் யூதர்கள்
மும்பையில் உள்ள குறிப்பிடத்தக்க யூத வழிபாட்டு ஆலயங்கள்

இந்தியாவின் வேகமாக குறைந்து வரும் யூத மக்கள்தொகையில் பெரும்பாலோர் மும்பையில் வசிக்கின்றனர். 1940களின் பிற்பகுதியில், அதன் உச்சத்தில் இருந்தபோது, மும்பையின் யூத மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000 ஐ எட்டியது.[3]

முதல் பாக்தாத் யூதரான ஜோசப் செமா 1730 இல் சூரத்திலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தார். [4] கொங்கண் மண்டலத்தில் உள்ள கிராமங்களிலிருந்து பிரித்தானிய இந்தியா முழுவதுமாக அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.[5][6][7] 1796 இல் அவர்களின் முதல் தொழுகைக்கூடம் மும்பையில் திறக்கப்பட்டது.[6][8][9] மேலும் புனே, அகமதாபாது மற்றும் பாக்கித்தானின் கராச்சி ஆகிய இடங்களிலும் தொடர்ந்தது.[10] அங்கு இவர்கள் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் முக்கிய பதவிகளைப் பெற்றனர். 1796 இல் சாமுவேல் எசேக்கியேல் திவேகர் (1730-1797) "த கேட் ஆஃப் மெர்சி" என்ற யூதர்களின் வழிபாட்டு ஆலயத்தை நிறுவினார்.[11]

தற்போதைய மக்கள் தொகை

தொகு

தற்போதைய கணக்குப்படி மும்பையில் 4,000க்கும் குறைவான யூதர்களே வாழ்கின்றனர்.[12] [13] நகரத்தில் எட்டு வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. [14] இன்று, மும்பையின் பெரும்பான்மையான யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர்.[15]

மும்பையில் தீவிரவாத தாக்குதல்

தொகு

நவம்பர் 2008 மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போது ஆறு யூதர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.[16]

வகுப்புவாத உறவுகள்

தொகு

மும்பை யூதர்களின் முஸ்லிம் சமூகத்துடனான உறவுகள் வரலாற்று ரீதியாக வலுவானது. மும்பை தாக்குதலுக்குப் பிறகும் அப்படியே நீடிக்கிறது.[17] இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலத்தில் இரு குழுக்களும் சிறுபான்மையினராக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர் - அவர்களின் அசைவ உணவுகளான கஷ்ருட் மற்றும் அலால் உணவுகளில் கூட ஒற்றுமையாக உள்ளனர்.[18] முஸ்லிம்களுக்கான முஸ்லிம் அமைப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது தீவிரவாதிகளையும் நகரத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்த்தனர். இது மும்பையின் யூத சமூகத்தால் மிகவும் பாராட்டப்பட்டது. [18]

மேற்கோள்கள்

தொகு
  1. Weil, Shalva. India's Jewish Heritage: Ritual, Art and Life-Cycle. Mumbai: Marg Publications. 2009 [first published in 2002; 3rd edn.].
  2. The Jewish Traveler
  3. "Historic Community of Bombay, India". Jewish Times Asia. March 2008. http://www.jewishtimesasia.org/bombay/264-bombay-communities/892-historic-community-of-bombay-india. 
  4. Lentin, Samuel Sifra (ed) Weil, Shalva. "The Jewish Presence in Bombay."India's Jewish Heritage: Ritual, Art and Life-Cycle. Mumbai: Marg Publications. 2009 [first published in 2002; 3rd edn.], pp. 22-35.
  5. Weil, Shalva (1981). The Jews from the Konkan: the Bene Israel Community of India. Tel-Aviv: Beth Hatefutsoth.
  6. 6.0 6.1 "The Jewish Community of Mumbai". ANU Museum. The foundation of a permanent Jewish settlement in Mumbai was laid in the second half of the 18th century by the Bene Israel who gradually moved from their villages in the Konkan region to Mumbai. Their first synagogue in Mumbai was built (1796) on the initiative of S.E. Divekar.
  7. Benjamin J. Israel, The Jews of India, Centre for Jewish and Inter-faith Studies, Jewish Welfare Association, New Delhi, 1982, p. 21: "At the opening of the eighteenth century the Bene Israel were almost wholly concentrated in a small coastal strip of about 1,000 square miles slightly to the south of Bombay."
  8. Madnick, Shulie (25 March 2021). "Why do the Jews of India call Passover 'The holiday of the covered clay pot with the sour liquid'?". The Forward. https://forward.com/news/466618/why-do-the-jews-of-india-call-passover-the-holiday-of-the-covered-clay-pot/. 
  9. Benjamin J. Israel, The Jews of India, Centre for Jewish and Inter-faith Studies, Jewish Welfare Association, New Delhi, 1982, p. 27
  10. Weil, Shalva (2008). "The Jews of Pakistan". In Erlich, M. Avrum (ed.). Encyclopedia of the Jewish Diaspora. Santa Barbara, USA: ABC CLIO.
  11. Weil, Shalva. 2009 'The Heritage and Legacy of Indian Jews' in Shalva Weil (ed.) India’s Jewish Heritage: Ritual, Art and Life-Cycle, Mumbai: Marg Publications [first published in 2002; 3rd edn.], pp. 8-21. In the early 20th century, the Sasoon family sponsored the emigration of Jews from Baghdad to Mumbai. In Mumbai they set up a Jewish school and a number of synagogues. Weil, Shalva. 2007 'Bene Israel' (3: 335-339); 'Cochin Jews', in Michael Berenbaum and Fred Skolnik (eds) Encyclopedia Judaica, 1st ed., Detroit: Macmillan Reference USA, CD-Rom. Weil, Shalva. 2008 'Jews in India', (3: 1204-1212); ' in M.Avrum Erlich (ed.) Encyclopaedia of the Jewish Diaspora, Santa Barbara, USA: ABC CLIO.11. 2010a 'Bombay'; 'Calcutta'; 'India'; 'Pakistan'; in Norman A. Stillman (ed.) Encyclopedia of Jews in the Islamic World, Leiden:Brill Weil, Shalva. 2011 'Bene Israel', in Adele Berlin (Ed. in Chief) Oxford Dictionary of Jewish Religion, 2nd edition, New York: Oxford University Press, 131. Weil, Shalva. 2011 'Bene Israel' in Judith Baskin (ed.) Cambridge Dictionary of Judaism and Jewish Culture, New York: Cambridge University Press. 59. Weil, Shalva. 2013 "Jews of India" in Raphael Patai and Haya Bar Itzhak (eds.) Jewish Folklore and Traditions: A Multicultural Encyclopedia, ABC-CLIO, Inc. (1: 255-258)
  12. Rockower, Paul (2007-02-20). "Tales of a Wandering Jew: Jewish India's crown jewel". The Jerusalem Post. http://fr.jpost.com/servlet/Satellite?cid=1171894477809&pagename=JPost/JPArticle/ShowFull. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. Weil, Shalva. 2010 'Bombay' in Norman A. Stillman (ed.) Encyclopedia of Jews in the Islamic World, Leiden:Brill.
  14. Berkman, Jacob (2008-11-28). "JTA". JTA. Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  15. Weil, Shalva. 2005 'Motherland and Fatherland as Dichotomous Diasporas: the Case of the Bene Israel' in Lisa Anteby, William Berthomiere and Gabriel Sheffer (eds) Les Diasporas 2000 ans d'histoire, Rennes: Presses Universitaires de Rennes, pp. 91-99. Weil, Shalva. 2012 "The Bene Israel Indian Jewish Family in Transnational Context", Journal of Comparative Family Studies 43 (1): 71-80
  16. The Jerusalem Post, 2008-12-2
  17. Weil, Shalva. 2009 India's Jewish Heritage: Ritual, Art and Life-Cycle, Mumbai: Marg Publications [first published in 2002; 3rd edn.].
  18. 18.0 18.1 "The Times | UK News, World News and Opinion". Timesonline.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.[தொடர்பிழந்த இணைப்பு]
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Synagogues in Mumbai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நூல் பட்டியல்

தொகு

Tigay, Alan M. (1994). The Jewish Traveler: Hadassah Magazine's Guide to the World's Jewish Communities and Sights. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781568210780.

வெளி இணைப்புகள்

தொகு