முர்ரே
முர்ரே (Murree), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இராவல்பிண்டி மாவட்டத்தின், முர்ரே தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமும், மலைவாழிட நகரமும் ஆகும். இது பிர்பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, முர்ரே நகரத்தின் மொத்த மக்கள் தொகை 25,816 ஆகும். இது இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி பெருநகரத்தின் வெளிப்புறத்தில், இஸ்லாமாபாத்திற்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2291 மீட்டர் உயரத்தில், பிர்பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது. இந்நகரத்தை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1853-ஆம் ஆண்டு முதல் மலைவாழிடமாக கொண்டனர். பஞ்சாப் ஆளுநரின் மலைவாழிட அலுவலக முகாமாகவும், வாழிடமாகவும் 1876-ஆம் ஆண்டு முடிய இருந்தது. பின்னர் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. [2][3][4][3]
முர்ரே
مری | |
---|---|
மலைவாழிட நகரம் | |
அடைபெயர்(கள்): மலைகளின் ராணி, வெள்ளை நகரம் | |
ஆள்கூறுகள்: 33°54′15″N 73°23′25″E / 33.90417°N 73.39028°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | இராவல்பிண்டி |
தாலுகா | முர்ரே தாலுகா |
ஏற்றம் | 2,291.2 m (7,517.1 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 25,816 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
ஒன்றியக் குழு | 8 |
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் முர்ரே காலனித்துவ துருப்புகளுக்கான முகாமாகவும், மருத்துவ தளமாகவும் செயல்பட்டது. மேலும் பிரித்தானிய மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் முர்ரே ஒரு மலைவாழிட நகரமாக இருந்தது. [5] [6]முர்ரே நகரத்தில் ஆங்கிலேயர்களுக்காக நடத்தப்பட்ட லாரன்ஸ் கல்லூரி மற்றும் வணிக வளாகம் செயல்பட்டது. தற்போது முர்ரே குளிர்கால சுற்றுலா மலைநகரமாக உள்ளது.
பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு முர்ரே நகரம் பாகிஸ்தான் மக்களின் மலைவாழிட நகரமாக விளங்குகிறது.[7]முர்ரே நகரம் ஆசாத் காஷ்மீர் மற்றும் அப்போட்டாபாத் பகுதிகளுக்கு செல்பவர்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது.[8][9]
இயேசு கிறிஸ்து முர்ரே பகுதிக்கு வருகை புரிந்தார் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும். [10]இயேசு சிலுவையில் மரித்த பின்னர், மேரி மாதா தனது இறுதிககாலத்தை முர்ரே பகுதியில் கழித்தார் என்பதும் உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும்.[11]
2022 கடும் பனிப்பொழிகள்
தொகு8 சனவரி 2022 அன்று முர்ரே பகுதியில் கடும் பனிப்பொழிவினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.[12][13]
படக்காட்சியகம்
தொகு-
முர்ரே தலைமை அஞ்சலகம்
-
திருத்துவ தேவாலயம்
-
முர்ரே வணிக வளாகம்
-
முர்ரே நகரம்
-
பிரித்தானிய இந்தியா காலத்திய இயேசு-மேரி கன்னியாஸ்திரிகள் மடம்
-
முர்ரே சாலை
-
முர்ரே நகர கேபிள் கார்கள்
-
முர்ரே நகரத்தின் ஒன்றியக் குழு
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், முர்ரே | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 17.2 (63) |
19.8 (67.6) |
23.0 (73.4) |
26.0 (78.8) |
32.0 (89.6) |
32.2 (90) |
31.7 (89.1) |
27.2 (81) |
25.6 (78.1) |
25.0 (77) |
22.3 (72.1) |
21.1 (70) |
32.2 (90) |
உயர் சராசரி °C (°F) | 7.2 (45) |
7.5 (45.5) |
11.6 (52.9) |
17.2 (63) |
21.7 (71.1) |
25.1 (77.2) |
22.4 (72.3) |
21.4 (70.5) |
20.9 (69.6) |
18.6 (65.5) |
14.5 (58.1) |
10.2 (50.4) |
16.53 (61.75) |
தினசரி சராசரி °C (°F) | 3.7 (38.7) |
4.0 (39.2) |
8.0 (46.4) |
13.2 (55.8) |
17.3 (63.1) |
20.6 (69.1) |
19.1 (66.4) |
18.4 (65.1) |
17.2 (63) |
14.3 (57.7) |
10.3 (50.5) |
6.3 (43.3) |
12.7 (54.86) |
தாழ் சராசரி °C (°F) | 0.1 (32.2) |
0.5 (32.9) |
4.3 (39.7) |
9.1 (48.4) |
12.8 (55) |
16.1 (61) |
15.7 (60.3) |
15.4 (59.7) |
13.4 (56.1) |
10.1 (50.2) |
6.2 (43.2) |
2.4 (36.3) |
8.84 (47.92) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −8.4 (16.9) |
-10.6 (12.9) |
−7.0 (19) |
-3.3 (26.1) |
0.6 (33.1) |
3.6 (38.5) |
8.9 (48) |
10.0 (50) |
6.0 (42.8) |
1.1 (34) |
-3.3 (26.1) |
−10.5 (13.1) |
−10.6 (12.9) |
பொழிவு mm (inches) | 126.5 (4.98) |
145.0 (5.709) |
176.8 (6.961) |
133.0 (5.236) |
91.9 (3.618) |
142.0 (5.591) |
418.3 (16.469) |
336.3 (13.24) |
161.5 (6.358) |
70.2 (2.764) |
32.5 (1.28) |
70.3 (2.768) |
1,904.3 (74.972) |
ஆதாரம்: NOAA (1961–1990)[14] |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Punjāb (Pakistan): Province, Major Cities, Municipalites & Towns - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de.
- ↑ "A British town in the hills: Book on Murree launched" (in en-US). The Express Tribune (newspaper). 2013-11-12. https://tribune.com.pk/story/630567/a-british-town-in-the-hills-book-on-murree-launched/.
- ↑ 3.0 3.1 Murree Hills Cantonment GlobalSecurity.org website, Retrieved 16 October 2021
- ↑ Chisholm (1911).
- ↑ "Murree Culture | Murree History". www.world66.com. Archived from the original on 2016-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
- ↑ "Kelley [née Beadon, Joanna Elizabeth (1910–2003), prison administrator]". Oxford Dictionary of National Biography (online). (2004). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/89897. (Subscription or UK public library membership required.)
- ↑ "Rain, tourists cause traffic jams in Murree". Dawn (newspaper). 2016-07-10. https://www.dawn.com/news/1269846.
- ↑ "Independence Day: Festivity plans finalised for Murree" (in en-US). The Express Tribune (newspaper). 2014-08-04. https://tribune.com.pk/story/743914/independence-day-festivity-plans-finalised-for-murree/.
- ↑ Asghar, Mohammad (2015-08-14). "Pakistanis not free to go to Murree on Independence Day". Dawn (newspaper). https://www.dawn.com/news/1200394.
- ↑ Jesus In India: How the film came to be
- ↑ Mai Mari da Ashtan
- ↑ முர்ரேயில் கடும் பனிப்பொழிவு: இதுவரை 21 பேர் உயிரிழப்பு
- ↑ முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ↑ "Murree Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
மேற்கோள்கள்
தொகு- "Murree Town". Imperial Gazetteer of India 18. (1909). Oxford: Clarendon Press.
- Lee, Harold (2001). Brothers in the Raj: The Lives of John and Henry Lawrence. Karachi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-579415-X.
- "World Weather Information Service — Murree". பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
Attribution:
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Murree". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. (1911). Cambridge University Press. 42–43.
மேலும் படிக்க
தொகு- Everett-Heath, John (2012). "Murree". (2nd). Oxford University Press.
- "Murree, Pakistan". GeoNames. 2007. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
- Abbasi, Wajih (26 April 2014). "Political History of Murree". பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
- Abbasi, Usama (26 April 2014). "Pakistan Tours Online". பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.