மூலூர் ச. பத்மநாப பணிக்கர்

(மூலூர் எஸ். பத்மநாப பணிக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூலூர் ச. பத்மநாப பணிக்கர் (Mooloor S. Padmanābha Panicker) (1869-1931) மூலூர் ஆசான் என்றும் சரச கவி, ("நகைச்சுவைக் கவிஞர்") என்றும் அழைக்கப்படும் இவர் இன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய சமூக சீர்திருத்த ஆர்வலராவார்.

மூலூர் பத்மநாப பணிக்கர்

ஆரம்ப ஆண்டுகள்

தொகு

பத்மநாபன் 1869 ஆம் ஆண்டில் மத்திய திருவிதாங்கூரில் உள்ள மன்னார் நகருக்கு அருகில் பனையண்ணார்காவுக்கு அருகிலுள்ள காவில் என்ற தனது தாயின் மூதாதையர் வீட்டில் பிறந்தார் (மலையாள ஆண்டு கும்பம் 27, 1044). இவரது தந்தை மூலூர் சங்கரன் வைத்யர், தாய் வெளுத்த குஞ்சம்மா ஆகிய இருவரும் நன்கு படித்த, வளமும் மரியாதைக்கும் உரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். [1] காவில் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களின் குடும்பம், மூலூர் குடும்பம் அதன் களரிப்பயிற்று (தற்காப்பு கலை), இயற்கை சிகிச்சைகள், சமசுகிருதம், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டிருந்தது. இவரின் கவிதையில் தலைசிறந்த படைப்பான கிராதம் என்பது இவரது பதின்ம வயதிலேயே பல்வேறு பகுதிகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்றது. திருவிதாங்கூர் மாநிலத்தில் இந்து கோவில்களில் நுழைய தாழ்த்தப்பட்டோர் மீதிருந்த தடையை ரத்து செய்த 1936 ஆம் ஆண்டு கோயில் நுழைவு பிரகடனத்தின் பின்னணியில் உள்ள உந்துசக்தியாக 25 வயதில் இவர் எழுதிய கவி-ராமாயணம் தலை சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது.

ஆரம்பகால கவிதை நாட்களும் முக்கிய படைப்புகளும்

தொகு

பத்மநாபன் ஆரம்பத்தில் சமசுகிருதம், ஆயுர்வேதம், களரிபயிற்று போன்றவற்றை தனது தந்தையிடமிருந்து படித்தார். இவர் சிறுவயதிலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் தனது வாழ்க்கையை இலக்கியப் பணிகளுக்காக மட்டுமல்லாமல், தனது ஈழவர் சமூகத்துக்கும், ஒட்டுமொத்த மாநிலத்துக்காகவும் ( கேரளா ) அர்ப்பணித்த மனிதர் ஆவார். இவர் 1914 முதல் மூலம் பிரஜா சபையில் உறுப்பினராக இருந்தார். மேலும், இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். [2]

தொழில்

தொகு

இவர், கேரளகௌமுதி நாளிதழின் முதல் ஆசிரியராகவும், மெழுவேலியின் சிறிய குக்கிராமத்தில் 78 ஆண்டுகளான பத்மநாபோதயம் என்ற ஆங்கிலப் பள்ளியின் நிறுவனரும் ஆவார். மறைந்த கேரள வர்ம வலிய கோயில் தம்புரான் 1913 இல் இவருக்கு "சரசகவி" என்ற பட்டத்தை வழங்கினார். திருவிதாங்கூர் அரசு இவரை இன்றைய சட்டமன்றத்தின் முன்னோடியான மூலம் பிரஜா சபையின் உறுப்பினராக நியமித்தது. நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் துணைத் தலைவராக அந்நிறுவனம் உருவான 25 வது ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] இவர் 1931 இல் இறந்தார் ( மலையாள ஆண்டு 1106, மீனம் 9). [2]

நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள்

தொகு

இவரால் நிறுவப்பட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:

  • மெழுவேலி பத்மநாபோதயம் மேல்நிலைப்பள்ளி
  • கங்காதர வித்யாசாலை, மெழுவேலி
  • கேரளவர்ம விலாசம், கீழ் தொடக்கப்பள்ளி, கரக்காடு

நினைவு

தொகு
 
இவரின் வீடு நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

தனது நெருங்கிய நண்பராக இருந்த கேரள வர்மா வலிய கோயில் தம்புரானின் மரியாதைக்குரிய அடையாளமாக இவர் தனது இல்லத்திற்கு கேரள வர்மா சவுதம் என்று பெயரிட்டார். பின்னர் இது 1989 ஆம் ஆண்டில் மாநில அரசால் சரசகவி மூலூர் நினைவிடமாக மாற்றப்பட்டது. எலவம்திட்டாவில் உள்ள இவரது வீடு கேரள அரசின் கலாச்சாரத் துறையால் ஒரு நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. தற்போதைய தலைமுறையினரை கவிஞரின் இலக்கிய பங்களிப்புகளுடன் பழக்கப்படுத்துவதும் இவரது நினைவை உயிரோடு வைத்திருப்பதும் மூலூர் நினைவிடத்தின் நோக்கமாகும். [3] இது இப்போது "எழுத்தினிருத்து" (குழந்தைகள் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆரம்பிக்கும் ஒரு சடங்கு) என்பதற்கு பிரபலமானது. [4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Mathew, George (1989). Communal Road To A Secular Kerala. New Delhi: Ashok Kumar Mittal Concept Publishing Company. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-282-6.
  2. 2.0 2.1 "Archived copy". Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-05-12. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  4. "Archived copy". Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)