மூவுருளி மிதிவண்டி

மூவுருளி மிதிவண்டி அல்லது மிதியிழுவை வண்டி (சைக்கிள் ரிக்‌ஷா), மூவுருளி வண்டியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு காலால் இயக்கப்படுவது. நகரத்திற்குள் அதிகபட்சம் 3 கிலோ மீட்டர் தொலைவு போக்குவரத்திற்கு மூவுருளி மிதிவண்டிகள் வாடகை வண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒருவர் காலால் இயக்க, வண்டியில் ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து பயணிக்கலாம்.

வங்காளதேசப் பாணியில் மூவுருளி மிதிவண்டி, சுவீடன்
துவக்க கால மூவுருளி மிதிவண்டி

தற்போது பெட்ரோலால் இயக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு, மனிதர்கள் பயணிக்கும் மூவுருளி மிதிவண்டிகளின் புழக்கம் அரிதாக உள்ளது.. ஏழைகள் உள்ளூரில் பயன்படுத்தும் இவ்வகை வண்டிகள் இந்தியாவில் சென்னை, வாரணாசி, கொல்கத்தா போன்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காணப்படுகிறது.

வரலாறு

தொகு

முதல் மூவுருளி மிதிவண்டி 1880களில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் 1929ல் இவ்வகை வண்டி சிங்கப்பூரில் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது. 1950களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளில் மூவுருளி மிதிவண்டிகள் உள்ளூர் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தது. 1980களில் உலகம் முழுவதும் 4 மில்லியன் மூவுருளி மிதிவண்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. David Edgerton (2011). The Shock of the Old: Technology and Global History Since 1900. Oxford University Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199832613.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவுருளி_மிதிவண்டி&oldid=4151134" இலிருந்து மீள்விக்கப்பட்டது