மெக் லானிங்
மெகன் மொய்ரா லானிங் (பிறப்பு: 25 மார்ச் 1992) ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். லானிங் ஆத்திரேலிய தேசிய மகளிர் அணியின் தலைவராக 2014 முதல் 2023 வரை இருந்தவர். மேலும், இரண்டு பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை மற்றும் ஐந்து ஐசிசி மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பை தொடர்கள் வென்ற அணியில் இடம்பெற்றவர். மகளிர் துடுப்பாட்ட போட்டிகளில் அதிக சத்தங்களை அடித்தவர் என்ற பெருமை பெற்ற வீராங்கனை ஆவார்.
2020 ஐசிசி மகளிர் இருபது-20 உலகக்கோப்பையில் மெக் லானிங் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மெகன் மொய்ரா லானிங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 25 மார்ச்சு 1992 சிங்கப்பூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | மெகாஸ்டார், சீரியஸ் செல்லி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | டாப் ஆர்டர் பேட்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | வேய்ன் (தந்தை) சூய் (தாயார்) ஆன்னா லானிங் (தங்கை) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 164) | 11 ஆகத்து 2013 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 27 சனவரி 2022 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 119) | 5 சனவரி 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 21 சனவரி 2023 எ. பாகிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 32) | 30 டிசம்பர் 2010 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 26 பிப்ரவரி 2023 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008/09–தற்போது வரை | விக்டோரியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015/16–2017/18 | மெல்போர்ன் ஸ்டார்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | ஐபிஎல் சூப்பர்நோவாஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–2019/20 | பெர்த் ஸ்கோசேர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020/21–present | மெல்போர்ன் ஸ்டார்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | டில்லி கேபிட்டல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 9 நவம்பர் 2023 |
உள்ளூர் துடுப்பாட்டத்தில் விட்ட்டோரை அணிக்காகவும், மகளிர் பிக் பேஷ் லீகில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் லானிங் விளையாடுகிறார். [1] மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவராகவும் உள்ளார். நவம்பர் 9, 2023 அன்று அவர் சர்வதேச துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [2]
சர்வத்தேச துடுப்பாட்டம்
தொகுலானிங் சர்வதேச மகளிர் இருபது-20 போட்டிகளில் 30 டிசம்பர் 2010-ல் நியுஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.[3] பின்னர் 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகளிர் ஒரு நாள் துடுப்பாட்ட வகைப் போட்டிகளில் அறிமுகமானார்.[4] 2012 மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பை வென்ற ஆத்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.[5] மேலும் 2013 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை வென்ற ஆத்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தனர்.[6]
2013 மகளிர் ஆஷஸ் தொடரின் போது தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[7]
2014-ல் ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8][9] தொடர்ந்து, 2014 மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பையில் ஆத்திரேலிய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றார்.
2015-ல் முதல் முறையாக மகளிர் ஆஷஸ் தொடரை தலைவராக வென்றார்.[10]
2017 உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோற்றாலும், 2018 மகளிர் இருபது-20 உலகக்கோப்பையில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்றார்.[11]
2020-ல் நான்காவது முறையாக மகளிர் 20-20 உலகக்கோப்பையை வென்றார்.[12]
2022-ல் இரண்டாவது முறையாக பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்றார். மேலும், 2023 மகளிர் துடுப்பாட்ட 20-20 உலகக்கோப்பை தொடரில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்றார். 2023 இருபது-20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிதான் மெக் லானிங் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Players | Melbourne Stars - BBL". பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "Lanning retires from international cricket at 31 | cricket.com.au". பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "Full Scorecard of New Zealand Women vs Australia Women 2nd T20I 2010 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Full Scorecard of Australia Women vs England Women 1st ODI 2011 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "ICC Women's World Twenty20, 2012/13 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Full Scorecard of Australia Women vs West Indies Women Final 2013 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Full Scorecard of Australia Women vs England Women Only Test 2013 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Lanning to captain Aus women at World T20". SBS News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Lanning confirmed as Southern Stars captain". www.abc.net.au (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2014-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Recent Match Report - Australia Women vs England Women 2nd T20I 2015 | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Get Ball by Ball Commentary of England Women vs Australia Women Final 2018 | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Captain Lanning joins exclusive World Cup club". wwos.nine.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.