மெட்டா கிரெசால்

பீனால் வழிப்பொருளான இது ஆர்த்தோ கிரெசால் மற்றும் பாரா கிரெசால்களின் மாற்றியன்

மெட்டா கிரெசால் (meta-Cresol) என்பது CH3C6H4(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-மெத்தில்பீனால், மெ-கிரெசால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற ஒரு பாகுநிலை மிகுந்த திரவமான இச்சேர்மம் பிற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும்போது பரவலாக ஒரு இடைநிலைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பீனால் வழிப்பொருளான இது ஆர்த்தோ கிரெசால் மற்றும் பாரா கிரெசால்களின் மாற்றியன் ஆகும்[3].

மெட்டா-கிரெசால்
m-Cresol
m-cresol
3D model of m-cresol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பீனால்
வேறு பெயர்கள்
3-ஐதராக்சிதொலுயீன்
மெ-கிரெசிலிக் அமிலம்
3-கிரெசால்
1-ஐதராக்சி-3-மெத்தில்பென்சீன்
இனங்காட்டிகள்
108-39-4 Y
ChEBI CHEBI:17231 N
ChEMBL ChEMBL298312 N
ChemSpider 21105871 N
DrugBank DB01776 N
EC number 203-39-4
InChI
  • InChI=1S/C7H8O/c1-6-3-2-4-7(8)5-6/h2-5,8H,1H3 N
    Key: RLSSMJSEOOYNOY-UHFFFAOYSA-N N
  • InChI=1/C7H8O/c1-6-3-2-4-7(8)5-6/h2-5,8H,1H3
    Key: RLSSMJSEOOYNOY-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் GO6125000
  • Cc1cc(O)ccc1
UNII GGO4Y809LO N
பண்புகள்
C7H8O
வாய்ப்பாட்டு எடை 108.14 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.034 கி/செ.மீ3, நீர்மம் 20 °செ இல்
உருகுநிலை 11 °C (52 °F; 284 K)
கொதிநிலை 202.8 °C (397.0 °F; 475.9 K)
2.35 கி/100 மி.லி 20 °செ இல்
5.8 கி/100 மி.லி 100 °செ இல்
[[எத்தனால்]]-இல் கரைதிறன் முற்றிலும் கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் முற்றிலும் கலக்கும்
ஆவியமுக்கம் 0.14 மி.மீபாதரசம் (20°செ)[1]
-72.02·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5398
பிசுக்குமை 184.23 cP 20 °செ இல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புண்களை உண்டாக்கும். சளிச் சவ்வுகளை அழிக்கும்.உட்கொள்ளப்பட்டால் தீங்கானது. தொடநேர்ந்தால் புண் உண்டாகும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R20 R24 R25 R34
S-சொற்றொடர்கள் S36 S37 S39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 86 °C
வெடிபொருள் வரம்புகள் 1.1%-? (149°செ)[1]
Lethal dose or concentration (LD, LC):
242 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1969)
2020 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1944)
828 மி.கி/கி.கி (வாய்வழி,சுண்டெலி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மில்லியனுக்குப் பகுதிகள் (22 மி.கி/மீ3) [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2.3 மில்லியனுக்குப் பகுதிகள் (10 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
250 மில்லியனுக்குப் பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

மெ-கிரோசால் பாரம்பரியமாக நிலக்கரி தாரிலிருந்து பல சேர்மங்களுடன் சேர்ந்து எடுக்கப்படுகிறது, இந்நிலக்கரித்தார் புகைமிகு நிலக்கரியிலிருந்து கல்கரியைத் தயாரிக்கும் போது கிடைக்கிறது. எஞ்சியிருக்கும் கசடில் சிறிதளவு பீனாலும் மெ-கிரெசாலும் கிடைக்கின்றன. சைமின்-கிரெசால் செயல்முறையில் பீனாலுடன் புரோப்பைலீன் சேர்த்து ஆல்கைலேற்றம் செய்தால் சைமினின் மாற்றியன்கள் உருவாகின்றன. பின்னர் கியுமின் செயல்முறையை ஒத்த ஆக் மறுசீரமைப்பு வினையினால் ஆக்சிசனேற்ற ஆல்கைல்நீக்கம் செய்யப்படுகிறது [3][3].

பயன்பாடுகள்

தொகு

பல முக்கியமான சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக மெ- கிரெசால் பயன்படுகிறது.

  • பெனிட்ரோதயோன் மற்றும் பெந்தியான் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்க மெ-கிரெசால் பயன்படுகிறது.
  • மெத்திலேற்றம் செய்யும்போது 2,3,6-டிரைமெத்தில்பீனால் வழியாக செயற்கை வைட்டமின் இ தயாரிக்க உதவுகிறது [3]
  • அமைல்மெட்டாகிரெசால் போன்ற கிருமிநாசினி தயாரிப்பில் பயன்படுகிறது..
  • பாலிமர்கள் எனப்படும் பலபடிகளுக்கு ஒரு கரைப்பானாக மெட்டா கிரெசால் பயன்படுகிறது. உதாரணமாக, மெட்டா கிரெசாலில் இருந்து கிடைக்கும் பாலியனிலீன் வார்ப்பைப் பயன்படுத்தி பாலியனிலீன் படலம் தயாரிக்கப்படுகிறது. இது பாலியனிலீனைவிட அதிகக் கடத்துத்திறன் கொண்டதாக உள்ளது. இந்நிகழ்முறையை இரண்டாம்நிலை கலப்பு என்பர் [4].
  • சிலவகை இன்சுலின்களில் பேணிகளாகப் பயன்படுகிறது.
  • தைமால் தயாரிக்கும் ஒட்டுமொத்த தொகுப்பு வினையின் தொடக்க நிலைப் புள்ளியாக மெ-கிரெசால் கருதப்படுகிறது [5] ஒரு முக்கியமான செயற்கை வேதிப்பொருளாகவும் தயாரிக்கப்படுகிறது [6]
    C7H8O + C3H6   C10H14O.

இயற்கைத் தோற்றம்

தொகு

மதம் பிடிக்கும் காலத்தில், ஆப்பிரிக்க ஆண் யானைகளின் சுரப்பிகளில் சுரக்கும் சுரப்புகளில் மெ-கிரெசால் பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது [7].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0155". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Cresol (o, m, p isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 3.2 3.3 Fiege, Helmut (2000). "Cresols and Xylenols". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_025. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30673-0.[page needed]
  4. Alan G. MacDiarmid and Arthur J. Epstein. 1995. "Secondary Doping in Polyaniline" Synthetic Metals 69 (85-92).
  5. Stroh, R.; Sydel, R.; Hahn, W. (1963). Foerst, Wilhelm (ed.). Newer Methods of Preparative Organic Chemistry, Volume 2 (1st ed.). New York: Academic Press. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323150422.
  6. Asim Kumar Mukhopadhyay (2004). Industrial Chemical Cresols and Downstream Derivatives. New York: CRC Press. pp. 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203997413.
  7. Some chemical constituents of the secretion from the temporal gland of the African elephant (Loxodonta africana). Jack Adams, Alexander Garcia and Christopher S. Foote, Journal Of Chemical Ecology, 1978, Volume 4, Number 1, 17-25, எஆசு:10.1007/BF00988256

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா_கிரெசால்&oldid=2289586" இலிருந்து மீள்விக்கப்பட்டது