மெரினா நீச்சல் குளம்

மெரினா நீச்சல் குளம் (Marina Swimming Pool) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நீச்சல் குளமானது சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாது. நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயங்கி வருகிறது.கோடை காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காகவும் வார இறுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நீச்சல் குளத்தை நாடி வருகின்றனர்[1] [2]. 2009 ஆம் ஆண்டு 70 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் புணரமைக்கப்பட்டது.[3] [4] தற்போது இந்த நீச்சல் குளமானது குத்தகை முறையில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது [5].

மெரினா நீச்சல் குளம் முகப்புத் தோற்றம் பின்னணியில் மெரினா கடற்கரை மற்றும் வங்காள விரிகுடா கடல்
மெரினா நீச்சல் குளம்

அமைப்பு மற்றும் வசதிகள்

தொகு

நீச்சல் குளம் 100 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் 400 பேர் வரை குளிக்கும் வசதி உள்ளது.இந்த நீச்சல் குளத்தில் [6]. ஆண்கள் பெண்கள் உடை மாற்றுவதற்கு தனி அறைகள்,வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன [7].ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம் மற்றும் பயிற்சிகள்

தொகு

ஒரு மணி நேரம் குளிப்பதற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.[8] அது மட்டுமல்லாமல் நீச்சல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. வருடந்தோறும் கோடை கால சிறப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

கோடை கால சிறப்பு பயிற்சி நேர அட்டவணை
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காலை 5.30 முதல் 8.30 வரை
பெண்கள் மற்றும் குழந்தைகள் காலை 8.30 முதல் 9.30 வரை
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மாலை 8.30 முதல் 9.30 வரை

சலுகைகள்

தொகு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை இலவசமாக நீச்சல் பயிற்சி தரப்படுகிறது. [6].மேலும் அவர்களுக்கு சத்தான உணவும் நீச்சல் உடைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒளிக்கோப்பு

தொகு
 
சென்னை மெரினா நீச்சல் குளத்தில் உள்ள அறிவிப்பு பலகைகள்
 
மெரினா நிச்சல் குள முகப்பு
 
மெரினா நீச்சல் குளத்தில் விளையாடி மகிழும் குழந்தைகள்
 
மெரினாவின் நீச்சல் குள முகப்பு
 
சென்னை மெரினா நீச்சல் குளத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்த அறிவிப்பு பலகை


மேற்கோள்கள்

தொகு
  1. "சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுகமான குளியல்: மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதும் கூட்டம்". 1 April 2014.
  2. "மெரினா நீச்சல் குளத்தில் கூட்ட நெரிசலின் போது: நுழைவுச்சீட்டு வழங்காமல் கூடுதல் ..."
  3. http://www.maalaisudar.com/staticpage.php?id=31069&section=19&%20catid=83
  4. Administrator. "மெரினா நீச்சல் குளம்: ரூ.70 லட்சத்தில் சீரமைக்க திட்டம் - TNIUS, Coimbatore". www.tniusnews.org.
  5. "மெரினா நீச்சல் குளத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம்".
  6. 6.0 6.1 "சுற்றுலா பயணிகளை கவர்கிறதா மெரினா?".
  7. "மெரினா நீச்சல் குளம்: ரூ.70 லட்சத்தில் சீரமைக்க திட்டம்". Dinamani.
  8. "மெரினா நீச்சல் குளத்தில் கூட்ட நெரிசலின் போது: நுழைவுச்சீட்டு வழங்காமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு". 19 May 2015.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரினா_நீச்சல்_குளம்&oldid=3589082" இலிருந்து மீள்விக்கப்பட்டது