மெலனாவு மொழி
மெலனாவு மொழி அல்லது மெலனாவ் மொழி (மலாய்: Bahasa Melanau; ஆங்கிலம்: Melanau Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள மெலனாவு மக்களின் (Melanau People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.
மெலனாவு மொழி Melanau Language | |
---|---|
Bahasa Melanau | |
நாடு(கள்) | மலேசியா புரூணை |
பிராந்தியம் | சரவாக் புரூணை |
இனம் | மெலனாவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 113,700 (2000) |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | daro1239 |
ISO 639-3 | iba |
மொழிக் குறிப்பு | iban1264[1] |
மலேசியா, வடமேற்கு போர்னியோ, சரவாக், இராஜாங் ஆற்றுப் படுகைகள் (Rajang River Delta); மற்றும் புரூணையில் உள்ள கடலோரப் பகுதியில் வாழும் மெலனாவு மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும் (Austronesian Language).[2]
பொது
தொகு14-ஆம் நூற்றாண்டில் இருந்து, மெலனாவு மக்கள் ஒரு போதும் இன அரசியல் ரீதியாக ஓர் அமைப்பின் கீழ் ஒன்றுபடவில்லை. ஏறக்குறைய 500 ஆண்டுகளாகப் புரூணை சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். சுமார் 100 ஆண்டுகளாக சரவாக் வெள்ளை இராஜாக்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர்.
வடமேற்கு போர்னியோவின் கடற்கரையோரத்தில் பரவலாக வாழ்ந்த மெலனாவ் மக்களிடையே மொழி வேறுபாடுகளுக்கு வழி வகுத்ததற்கு அதுவே முக்கியக் காரணம் ஆகும்.
மெலனாவு பேச்சுவழக்கு மொழிகள்
தொகுஇருப்பினும், மெலனாவு மொழி, அதன் அசல் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த மொழியின் மீது மலாய் மொழி அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும், மெலனாவு மொழி தனித்து இயங்கி வருகிறது.
மெலனாவு மொழியில் பல பேச்சுவழக்குகள் (Dialects) உள்ளன.
- முக்கா-ஓயா - (Mukah-Oya)
- பலிங்கியான் - (Balingian)
- புரூயிட்டு - (Bruit)
- தலாத்து - (Dalat)
- இலாவாசு - (Lawas)
- இகான் - (Igan)
- சரிக்கேய் - (Sarikei)
- செககான் - (Segahan)
- பிரிகான் - (Prehan)
- செகலாங்கு - (Segalang)
- சித்தெங்கு - (Siteng)
மெலனாவு மக்கள்
தொகு19-ஆம் நூற்றாண்டில், மத்திய சரவாக்கில் உள்ள இராஜாங் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் மெலனாவு மக்கள் சிதறிய சமூகங்களாகக் குடியேறினர்.
பெரும்பாலான மெலனாவு மக்களுக்கு, அவர்களை டயாக் மக்கள் என்று அழைப்பதை விரும்புவது இல்லை. ஏனெனில் தயாக் மக்கள் என்பது போர்னியோவில் வசிப்பவர்களுக்காக மேற்கத்தியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்று சொல்கிறார்கள்.
கிளமந்தான் துணைக்குழு
தொகுமெலனாவு மக்கள், கிளமந்தான் (Klemantan) எனும் துணை இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றனர்.[3] சரவாக்கில் முதன்முதலில் குடியேறியவர்களில் மெலனாவு மக்கள் தான் என்று கருதப்படுகிறது.
தங்களைக் குறிக்க, மெலனாவு என்ற பெயரை அண்மைய காலம் வரையில் அவர்கள் பயன்படுத்தவில்லை. மெலனாவு மக்கள் தங்களை அ லிகோவ்; அதாவது 'நதியின் மக்கள்' என்றே அடையாளப் படுத்திக் கொண்டார்கள். புருணை மலாய் மக்கள் தான் இவர்களை மெலனாவு என்று அழைத்தார்கள்.[4]
மேற்கோள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Iban". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Raymond G. Gordon Jr., ed. 2005. Ethnologue: Languages of the World. 15th edition. Dallas: Summer Institute of Linguistics.
- ↑ Charles Hose; William Mcdougall (2015). Borneo Shamanism. Charles Hose. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-605-176-617-1.
- ↑ "The Melanau-speaking people refer to themselves as "A-Liko X," meaning "the people of a river, a district, or a village," according to context. "Melanau," they assert, was given to them by the Malays of Brunei. The name possibly signifies "coast-dweller" in contrast to "inland-dweller."". www.everyculture.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
சான்றுகள்
தொகு- I.F.C.S. Clayre. 1970. "The Spelling of Melanau (nee Milano)," The Sarawak Museum Journal 18:330-352.
- Clayre, Iain F. C. S. 1972. A grammatical description of Melanau. University of Edinburgh.
- Rensch, Calvin R. 2012. Melanau and the Languages of Central Sarawak. SIL Electronic Survey Report. SIL International.
வெளி இணைப்புகள்
தொகு- Kaipuleohone holds two open access collections that include Balingian language materials (RB1-002 and RB2-003-E) as well as notebook pages of stories
மேலும் காண்க
தொகு