மெலனேசிய மீன்கொத்தி
மெலனேசிய மீன்கொத்தி | |
---|---|
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தோடிராம்பசு
|
இனம்: | தோ. திரிசுதிராமி
|
இருசொற் பெயரீடு | |
தோடிராம்பசு திரிசுதிராமி (லேயர்டு, 1880) |
மெலனேசிய மீன்கொத்தி (Melanesian Kingfisher-தோடிராம்பசு திரிசுதிராமி) என்பது அல்செடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது பிசுமார்க் தீவுக்கூட்டம் மற்றும் வடமேற்கு மற்றும் மத்திய சாலமன் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகும். இது முன்பு கழுத்துப்பட்டை மீன்கொத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது.[1][2]
துணையினங்கள்
தொகுஇச்சிற்றினத்தின் கீழ் 7 துணையினங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன.[3]
- தோ. தி. நுசே (கெய்ன்ரோத், 1902) - நியூ ஹனோவர் தீவு, நியூ அயர்லாந்து (தென்மேற்கு தவிர), மற்றும் பெனி தீவுகள்
- தோ. தி. மத்தியே (கெய்ன்ரோத், 1902) - தூய மத்தியாசு தீவுகள் (பிசுமார்க் வளைவு.)
- தோ. தி. இசுடெர்செமானி (லாப்மேன், 1923) - நியூ கினி மற்றும் நியூ பிரிட்டன் இடைத் தீவுகள்
- தோ. தீ. நோவாஹிபெர்னே (ஆர்டர்ட், 1925) - தென்மேற்கு நியூ அயர்லாந்து (பிசுமார்க் வளைவு)
- தோ. தி. பென்னெட்டி (ரிப்லி, 1947) நிசான் தீவு (பிசுமார்க் வளைவு.)
- தோ. தி. திரிசுதிராமி (லேயார்ட், எல், 1880) - நியூ பிரிட்டன் (பிசுமார்க் வளைவு)
- தோ. தி. ஆல்பர்டி (ரோத்சுசைல்ட் & ஹார்டர்ட், 1905) புகு தென்கிழக்கு முதல் குவாடல்கனல் (வடமேற்கு மற்றும் மத்திய சாலமன் தீவு)
மேற்கோள்கள்
தொகு- ↑ https://ebird.org/species/melkin1
- ↑ Woodall, P. F. (2020). Melanesian Kingfisher (Todiramphus tristrami), version 1.0. In Birds of the World (S. M. Billerman, B. K. Keeney, P. G. Rodewald, and T. S. Schulenberg, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.melkin1.01
- ↑ https://www.oiseaux.net/birds/melanesian.kingfisher.html