மேற்கத்திய உலகில் கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி

மேற்கத்திய உலகில் கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி என்பது மேற்கு ஐரோப்பா, வட அமெரிககாவின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் கனடாவில் கிறித்தவத் திருச்சபைகள் மற்றும் கிறித்துவ மக்கள் தொகை குறைவதைக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கல்வி, உலகமயமாதல், சமயச் சார்பின்மை மற்றும் பன்முக பண்பாடுகளால் கிறித்தவம் வீழ்ச்சி கண்டு வருகிறது.

உணவு விடுதியாக மாற்றப்பட்ட தேவாலயம், ஆஸ்திரேலேயா

தற்போது மேற்கு ஐரோப்பா[1][2], கனடா[3][4]மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில்[5] [6] கிறிஸ்தவம் முதன்மையான மதமாக இருந்தாலும், மேற்கு ஐரோப்பா உட்பட பல பகுதிகளில் கிறித்தவத் திருச்சபைகள் மற்றும் கிறித்தவ மக்கள் தொகை குறைந்து வருகிறது. மேற்கு ஐரோப்பாவின் 12 நாடுகளில் பெரும்பான்மையான இளைஞர்கள், எந்த சமயத்தையும் பின்பற்றாது சமயச் சார்பற்றவர்களாக உள்ளனர். செக் குடியரசில் 16 முதல் 29 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 91% தங்களுக்கு எந்த சமயச் சார்பு இல்லை எனத்தெரிவித்தனர். ஐக்கிய இராச்சியம், எசுத்தோனியா, சுவீடன் மற்றும் நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 70% முதல் 80% இளைஞர்கள் தங்களை சமயச் சார்பற்றவர்களாக வகைப்படுத்திக் கொள்கின்றனர். போலாந்தில் 17% மற்றும் லிதுவேனியாவில் 25% பேர் சமயச் சார்பற்றவர்களாக தெரிவித்தனர்.[7][8]

மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கிறிஸ்தவர்களில் பலர் சமயச் சார்பற்றவர்களாக மாறிவருதால், தேவாலயங்களின் உறுப்பினர் வருகை குறைந்து போவதால் தேவாலயங்கள் மூடப்படுவதுடன், தேவாலயங்கள் உள் விளையாட்டரங்கங்களாகவும், உணவு விடுதிகளாகவும் மற்றும் பீர் குடிப்பகங்களாக மாறிவருகிறது.[9]

பின்னணி தொகு

2012ஆம் ஆண்டின் பியூ ஆராய்ச்சி மையத்தின் கணக்கெடுப்பின்படி, அடுத்த நான்கு பத்தாண்டுகளில் கிறிஸ்தவம் உலகின் மிகப்பெரிய மதமாகத் தொடர்ந்தாலும், இருப்பினும், கிறிஸ்தவம் மிகப்பெரிய நிகர இழப்பை சந்திக்கக்கூடும். உலகளவில் கிறிஸ்தவ மத மாற்றங்கள் 2010 மற்றும் 2050க்கு இடையில் "கிறிஸ்தவ மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களில் மிதமான தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[10]

மேற்கு ஐரோப்பாவைப் போலல்லாமல், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.[27] 2018 ப்யூ ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, மேற்கு ஐரோப்பாவில் 71% ஐரோப்பியர்கள் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மிகப்பெரிய மதமாக கிறிஸ்தவம் உள்ளது.

2017ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள செயின்ட் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிக்கை, கிறிஸ்தவம் "ஒரு விதிமுறையாக" குறைந்தபட்சம் எதிர்நோக்கக்கூடிய எதிர்காலத்தில் இல்லாமல் போய்விட்டது என்று முடிவு செய்தது. 629 பேரின் மாதிரியின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட 29 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 12இல் பெரும்பாலான இளைஞர்கள் தாங்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல என்று தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டில் கிறித்தவத் திருச்சபைகள் மற்றும் பாதிரியார்களின் போக்கு குறித்து போப்பாண்டவர் மிகவும் வருத்தப்பட்டார்.

ஐரோப்பா தொகு

 
2019ஆம் ஆண்டின் கணக்குப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சமயம் சாராதோர் எண்ணிக்கை.[11]
  75%க்கு மேல் கத்தோலிக்கம்
  50–75% கத்தோலிக்கம்
  கத்தோலிக்கம் தொடர்பானவைகள்

அறிஞர்களின் கூற்றுப்படி 2017இல், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 77.8% கிறிஸ்தவர்கள் (1970இல் - 74.9%) ஆகும்.[12] 2019 ஐரோப்பா மக்கள் கணக்கெடுப்பின்படி, கிறித்துவ மக்கள் தொகை 64%ஆக குறைந்துள்ளது.[13]சமயம் சாரதோர் எண்ணிக்கை பெருகியுள்ளனர்.

ஆஸ்திரியா தொகு

ஆஸ்திர்யாவின் 2021ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரியாவில் 68.2% மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றனர்

பிரான்ஸ் தொகு

1980களிலிருந்து பிரான்சில் கிறிஸ்தவம் படிப்படியாக குறைந்து வருகிறது. 2021ஆம் ஆண்டில், பிரெஞ்சு குடிமக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடவுளை நம்பவில்லை அல்லது கிறிஸ்தவத்தை பொருத்தமானதாகக் கருதவில்லை என்று ஒரு பிரெஞ்சு கருத்துக் கணிப்பு காட்டுகிறது. கத்தோலிக்கராக அடையாளம் காணப்பட்ட மக்கள் 1986இல் 81% இலிருந்து 2020இல் 47% ஆக குறைந்துள்ளனர். அதே சமயம் மதம் இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 16% இலிருந்து 40% ஆக உயர்ந்ததுள்ளது.[14]2021இல் பதிலிளித்தவர்களில் 50% கிறிஸ்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.[15]

பின்லாந்து தொகு

2011இல் பின்லாந்தில் 78.4% மக்கள் கிறிஸ்தவத்தை கடைப்பிடித்தனர். இது 2021இல் 67.7% ஆக குறைந்துள்ளது.[16]2010 இலையுதிர் காலத்தில் கிறித்தவத் திருச்சபையை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள் பெரிய அளவில் அதிகரித்தது. இது ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின திருமணம் மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர்கள் மீதான சகிப்புத்தன்மை இன்மையே காரணம் என்று உணரப்பட்டது.

ஜெர்மனி தொகு

2020இல் ஜெர்மன் மக்கள்தொகையில் சுமார் 54% பேர் கிறிஸ்தவர்கள். அவர்களில் 51% பேர் இரண்டு பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் உறுப்பினர்களாக இருந்தனர்.[17] ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் வருகை மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை பல தசாப்தங்களாக குறைந்து வருகிறது. 2021இல் மட்டும் சுமார் 3,60,000 கத்தோலிக்கர்கள் கிறித்தவத் திருச்சபையை விட்டு வெளியேறினர். மேலும் சுமார் 2,80,000 பேர் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.[18]

அங்கேரி தொகு

பெரும்பான்மையான ஹங்கேரியர்கள் கத்தோலிக்கராக அடையாளம் காணப்பட்டாலும், 12% பேர் மட்டுமே தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.[19] 2018இல் பியூ ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகள்படி, அங்கேரியில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 76% ஆக உள்ளது.

அயர்லாந்து தொகு

கத்தோலிக்கம் அயர்லாந்தின் பெரும்பான்மை மதமாக உள்ளது. 2016 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 85.1% மக்கள் கிறிஸ்தவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.[20]இருப்பினும் தேவாலயத்திற்குச் செல்வோர் குறைந்து வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் பிரச்சனைகள் அயர்லாந்தில் கத்தோலிக்க மதத்தின் வீழ்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளது வருகிறது.

நெதர்லாந்து தொகு

 
பீர் குடிப்பகமாக மாற்றப்பட்ட கிறித்தவ தேவாலயம், நெதர்லாந்து

19ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் மதச்சார்பற்ற தன்மை அதிகரித்தது. அரசாங்க நலன்கள் மற்றும் மதச்சார்பற்ற தொண்டு அமைப்புகளின் வளர்ச்சியால் நவீன நெதர்லாந்தில் ஏழைகளுக்கான திருச்சபை ஊழியம் தேவைப்படவில்லை. பொது வாழ்வில் மத நிறுவனங்களின் செல்வாக்கு குறைந்து வருவதால், டச்சு சமுதாயத்தின் தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட துறைகளில் பெரும் மத, தத்துவ மற்றும் இறையியல் பன்மைத்துவத்தை அனுமதித்தது.[21][22] 1960கள் மற்றும் 1970களில் கிறித்தவத் திருச்சபைகளின் தூண்கள் வலுவிழக்கத் தொடங்கினர் மற்றும் மக்கள் தொகை குறைந்த மதமாக கிறித்துவம் மாறியது. 1971இல் டச்சு மக்களில் 39% பேர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தனர்; 2014 இல் மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 23.3%ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் கால்வினிசம் மற்றும் மெத்தடிசம் பின்பற்றுபவர்களின் விகிதம் 31% முதல் 15.5% வரை குறைந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் தொகு

இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிறுவப்பட்ட தேவாலயம் தொடர்பான வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது வேகமாக குறைந்து வருகிறது, மேலும் சமூக, தார்மீக மற்றும் நெறிமுறை பிரச்சினைகளில் திருச்சபை அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. தினசரி தேவாலயத்திற்கு வருகை குறைந்துள்ளது ஆனால் கத்தோலிக்க மதம் இன்னும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பிரதான மதமாக உள்ளது. சமூகவியல் ஆராய்ச்சிக்கான ஸ்பானிஷ் மையத்தின்படி, 2023 ஆம் ஆண்டில் 57% ஸ்பானியர்கள் கத்தோலிக்கராக சுயமாக அடையாளம் காணப்பட்டனர். 2021 யூரோபரோமீட்டர் கணக்கெடுப்பின்படி, இத்தாலியில் வசிப்பவர்களில் 79.2% பேர் கத்தோலிக்கர்கள்.

ஐக்கிய இராச்சியம் தொகு

 
கைவிடப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம், ஸ்காட்லாந்து

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்டினர்.மேலும் தங்களுக்கு மதம் இல்லை என்று கூறும் மக்களின் விகிதத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.[23]2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 46.2% மக்கள் கிறிஸ்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மக்கள் தொகையில் சுமார் 37.2% பேர் மதச்சார்பற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[24] ஆங்கிலிகன் தேவாலயங்களில் வருகை, மன்னர் எட்வர்டு காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் குறையத் தொடங்கியது. முக்கிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருகையும் குறைந்தது. [25]இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குழந்தை ஞானஸ்நானம் குறைந்துவிட்டது. 2014ஆம் ஆண்டில், கேன்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ், இங்கிலாந்து "கிறிஸ்தவத்திற்குப் பிந்தைய நாடாக" மாறிவிட்டது என்று கூறினார்.[26]

வட அமெரிக்கா தொகு

கனடா தொகு

2021ஆம் ஆண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனேடியர்களில் 68% பேர் மட்டுமே மதத் தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று புள்ளியியல் கனடா கண்டறிந்தது. 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், 53.3% மக்கள் கிறிஸ்துவர்களாக அடையாளம் காணப்பட்ட கனடாவில் கிறிஸ்தவம் பெரிய மதமாக உள்ளது.[27][28]

தற்போது கியூபெக் மாகாணத்தின் 500க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் 20% மூடப்பட்டுள்ளது அல்லது வழிபாடு அல்லாத பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டுள்ளது.1950களில் கியூபெக்கின் மக்கள் தொகையில் 90% பேர் திருச்சபை வழிபாட்டிற்குச் சென்றனர்; தற்போது அந்த எண்ணிக்கை 10%க்கும் குறைவாக உள்ளது.[29][30] [31]

ஐக்கிய அமெரிக்கா தொகு

1976இல் ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகையில் 91% கிறிஸ்தவம் ஆகும்.[32] இது 2016இல் மொத்த மக்கள் தொகையில் 73.7% ஆகக் குறைந்துள்ளது. 2022இல் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 64% ஆக உள்ளது.

2022 பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையின்படி, மாறுதல் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால் 2070ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள்தொகையில் பாதிக்குக் குறைவாக 35% முதல் 46% வரை கிறிஸ்தவர்கள் இருப்பார்கள்.

நாடு தழுவிய கத்தோலிக்க உறுப்பினர் எண்ணிக்கை 2000 மற்றும் 2017க்கு இடையில் அதிகரித்தது. ஆனால் தேவாலயங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11% குறைந்துள்ளது மற்றும் 2019இல் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2 மில்லியன் மக்களால் குறைந்துள்ளது. மக்கள் தொகையில் கத்தோலிக்கர்கள் 23% இலிருந்து 21% ஆக குறைந்துள்ளது.

1970ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்கர்களிடையே வாராந்திர தேவாலய வருகை 55% இலிருந்து 20% ஆகக் குறைந்துள்ளது. பாதிரியார்கள் எண்ணிக்கை 59,000 இலிருந்து 35,000 ஆகக் குறைந்துள்ளது மற்றும் கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 1975இல் 2 மில்லியனுக்கும் குறைவாக இருந்து இன்று 30 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 42,000க்கும் குறைவான கன்னியாஸ்திரிகள் இருந்தனர். இது 50 ஆண்டுகளில் 76% சரிவு ஆகும். 40 வயதிற்குட்பட்ட கன்னியாஸ்திரிகளில் 1% க்கும் குறைவானவர்கள்.

அமெரிக்காவில் உள்ள எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் (ELCA) அதன் சபையில் சுமார் 30% இழந்தது மற்றும் அதன் 12.5% தேவாலயங்களை மூடியது. ஐக்கிய மெதடிஸ்ட் தேவாலயம் அதன் சபையில் 16.7% மற்றும் அதன் தேவாலயங்களில் 10.2% இழந்தது. பிரஸ்பைடிரியன் தேவாலயம் தேவாலய உறுப்பினர் எண்ணிக்கையில் கூர்மையான சரிவைக் கொண்டுள்ளது: 2000 மற்றும் 2015 க்கு இடையில் அவர்கள் தங்கள் சபையில் 40% மற்றும் அவர்களின் தேவாலயங்களில் 15.4% ஐ இழந்தனர்.[87] குழந்தை ஞானஸ்நானம் குறைந்துவிட்டது; நாடு முழுவதும், கத்தோலிக்க ஞானஸ்நானம் கிட்டத்தட்ட 34% மற்றும் ஞானஸ்நானம் 40% குறைந்துள்ளது.[87] தெற்கு பாப்டிஸ்ட் மாநாடு சரிவை சந்தித்துள்ளது: 2006 மற்றும் 2020க்கும் இடையில் அவர்கள் 2.3 மில்லியன் உறுப்பினர்களை இழந்தனர். இது அந்த காலகட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் 14% குறைந்துள்ளது.[33][34][35]

2018 ஆம் ஆண்டில் மினியாபோலிஸ் ஸ்டார் ட்ரிப்யூன், மினசோட்டாவில் உள்ள தேவாலயங்கள் வருகை குறைந்து வருவதால் மூடப்பட்டதாக அறிவித்தது. மின்னசோட்டாவில் உள்ள பிரதான புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் தங்கள் சபைகளில் கூர்மையான சரிவைக் கண்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபை 2000 மற்றும் 2017க்கு இடையில் 81 தேவாலயங்களை மூடியுள்ளது; மினியாபோலிஸ் உயர் மறைமாவட்டம் 2010இல் 21 தேவாலயங்களை மூடியது. மேலும் டஜன் கணக்கான தேவாலயங்களை ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.

ஓசியானியா தொகு

ஆஸ்திரேலியா தொகு

2016ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 52.2%ஆக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை, 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 43.9% ஆகக் குறைந்துள்ளது. 2016இல் 30% பேர் மதம் இல்லை என அறிவித்தவர்களில்; 2021ஆம் ஆண்டில் 38.9% ஆக அதிகரித்துள்ளது.[36] 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டிய கிறிஸ்தவத்தின் ஒரே வடிவம் பெந்தேகோஸ்தே தேவாலயமாகும். இது 2016இல் 1.7%இல் இருந்து 2.1% அதிகரித்துள்ளது.[37][36][38] பெந்தேகோஸ்தே தேவாலயங்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக உள்ளனர்.[37][39]

நியூசிலாந்து தொகு

2018 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மதம் இல்லை எனப் பதிவுசெய்யப்பட்ட மக்கள்தொகை கிறிஸ்தவ மக்கள் தொகையை முந்தியது. இதற்கான காரணம் நிறுவன மதத்தின் மீதான நம்பிக்கையின் வீழ்ச்சி மற்றும் மதச்சார்பின்மையின் அதிகரிப்பு ஆகியவைகள் ஆகும்.[40] 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பில், மக்கள் தொகையில் 20.2% எந்த மதத்தையும் பின்பற்றவில்லை.[41] இந்த விகிதம் இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காக அதிகரித்து, 2013ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 41.9% ஆக உயர்ந்தது. மேலும் 2018ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை மீண்டும் 48.2% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2013 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 47.65% ஆக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை, 2018 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 37.31% ஆக குறைந்துள்ளது. 2018 மக்கள்தொகை கணக்கெடுப்பில், "மதம் இல்லை" என்று கூறும் நியூசிலாந்து மக்கள் தொகை, கிறிஸ்தவத்தை முந்தியுள்ளது.[42]

மேற்கோள்கள் தொகு

  1. Bullivant, Stephen (2018). Europe's Young Adults and Religion: Findings from the European Social Survey (2014-16) to inform the 2018 Synod of Bishops (PDF) (Report). St Mary's University's Benedict XVI Centre for Religion and Society; Institut Catholique de Paris. Archived from the original (PDF) on 22 March 2018.
  2. Sherwood, Harriet (21 March 2018). "'Christianity as default is gone': The rise of a non-Christian Europe". The Guardian (London). https://www.theguardian.com/world/2018/mar/21/christianity-non-christian-europe-young-people-survey-religion. 
  3. "Religions in Canada—Census 2011". Statistics Canada/Statistique Canada. 8 May 2013.
  4. "North America: Canada — The World Factbook - Central Intelligence Agency". www.cia.gov. 7 June 2022.
  5. "In U.S., Decline of Christianity Continues at Rapid Pace". Pew Research Center's Religion & Public Life Project (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  6. Bargsted, Matías; M. Somma, Nicolás; Valenzuel, Eduardo (2019). Atheism and Nonreligion in Latin America, Geography. Springer Publishing. பக். 137–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135980795. 
  7. ['Christianity as default is gone': the rise of a non-Christian Europe
  8. {https://edition.cnn.com/2023/04/08/us/christianity-decline-easter-blake-cec/index.html Predictions about the decline of Christianity in America may be premature]
  9. WE ARE HIRING ALL POSITIONS!
  10. Lipka, Michael, ed. (April 2, 2015). "2. Religious Groups (2.1: Christians)" (PDF). The Future of World Religions (Report). Pew Research Center. pp. 59−69. Archived from the original on 29 April 2015. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016. p. 67: Worldwide, religious switching is projected to have a modest impact on changes in the Christian population. Christians would make up a slightly larger share of the world's inhabitants in 2050 (32% rather than 31%) if religious switching were not taken into account. Full report PDF
  11. "Discrimination in the European Union". Special Eurobarometer. 493. European Commission. 2019. பார்க்கப்பட்ட நாள் 2 June 2020.
  12. "Discrimination in the European Union". Special Eurobarometer. 493. European Commission. 2019. பார்க்கப்பட்ட நாள் 2 June 2020.
  13. "Christians remain world's largest religious group, but they are declining in Europe", Pew Research Center, United States: Pew Research Center, 2017, பார்க்கப்பட்ட நாள் 5 April 2017
  14. York, Joanna (23 September 2021). "Less than half of people believe in God in 2021, French poll finds" (in en). The Connexion. https://www.connexionfrance.com/article/French-news/Less-than-half-of-people-believe-in-God-in-2021-French-poll-finds-how-to-find-an-English-speaking-church-service-in-France. 
  15. "Etat des lieux de la laïcité en France - Edition 2021 (sondage réalisé par Viavoice pour l'Observatoire de la laïcité)". Gouvernement.fr (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
  16. "Belonging to a religious community by age and sex, 2000–2021". Tilastokeskuksen PX-Web tietokannat. Government. Archived from the original on 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 November 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. Numbers and Facts about Church Life in the EKD 2021 Report. Evangelical Church of Germany. Retrieved 3 January 2022.
  18. Michels, Josue (19 July 2022). "Catholic Church in 'Profound Crisis' in Germany" (in en). The Trumpet. https://www.thetrumpet.com/25873-catholic-church-in-profound-crisis-in-germany. 
  19. Will Collins (7 January 2019). "The Myth Of A Christian Revival In Eastern Europe". The American Conservative.
  20. "2011 Census Sample Form" (PDF). Central Statistics Office. p. 4, q.12. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.; "Census 2016 Sample Form" (PDF). Central Statistics Office. p. 4, q.12. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  21. Hans Knippenberg, "Secularization in the Netherlands in its historical and geographical dimensions," GeoJournal (1998) 45#3 pp 209-220. online
  22. Tomáš Sobotka and Feray Adigüzel, "Religiosity and spatial demographic differences in the Netherlands" (2002) online பரணிடப்பட்டது 2012-11-15 at the வந்தவழி இயந்திரம்
  23. Why is the Christian population of England and Wales declining?
  24. Booth, Robert; Duncan, Pamela; García, Carmen Aguilar (2022-11-29). "England and Wales now minority Christian countries, census reveals" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/uk-news/2022/nov/29/leicester-and-birmingham-are-uk-first-minority-majority-cities-census-reveals. 
  25. Green, S. J. D. (1996). "9. The forward march of the Christian churches halted? Organisational stasis and the crisis of the associational ideal in early twentieth-century religious institutions". Religion in the age of decline: Organisation and experience in industrial Yorkshire, 1870–1920. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-511-52299-4. http://ebooks.cambridge.org/ref/id/CBO9780511522994. பார்த்த நாள்: 2018-07-31. 
  26. Losing My Religion: How the UK is leaving the Church and gaining conspiracy theories
  27. Stewart, Ashleigh (2022-01-08). "'Gone by 2040': Why some religions are declining in Canada faster than ever". Global News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  28. "Religions in Canada—Census 2011". Statistics Canada/Statistique Canada. May 8, 2013.
  29. Pope in Quebec amid decline of Catholic Church in province
  30. "Falling from Grace - The Rise and Fall of the Quebec Catholic Church". Culture Witness. பார்க்கப்பட்ட நாள் 2018-07-30.
  31. Bilefsky, Dan (2018-07-30). "Where Churches Have Become Temples of Cheese, Fitness and Eroticism". The New York Times. https://www.nytimes.com/2018/07/30/world/canada/quebec-churches.html. 
  32. "Five Key Findings on Religion in the U.S." (in en-us). Gallup.com. http://www.gallup.com/poll/200186/five-key-findings-religion.aspx. 
  33. Losing their religion: why US churches are on the decline
  34. U.S. Church Membership Falls Below Majority for First Time
  35. Thousands of churches close every year. What will happen to their buildings?
  36. 36.0 36.1 "Census of Population and Housing: Reflecting Australia - Stories from the Census, 2016 : Religion in Australia". Australian Bureau of Statistics. Archived from the original on 20 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2017.
  37. 37.0 37.1 "Christianity on the wane in Australia, but Pentecostal church bucks trend". The Guardian. 27 June 2017 இம் மூலத்தில் இருந்து 2019-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190502214846/https://www.theguardian.com/australia-news/2017/jun/27/christianity-on-the-wane-in-australia-but-pentecostal-church-bucks-trend. 
  38. 2016 Census of Population and General Community (Sheet G14) Australian Bureau of Statistics
  39. Simmons, Amy (July 29, 2011). "The rise of Pentecostalism". ABC News. https://www.abc.net.au/news/2011-07-29/pentecostal-background-growth-and-attendance/2815456. 
  40. Ward, Kevin (2004). "'No Longer Believing' – or – 'Believing without Belonging'". in Stenhouse, John. The Future of Christianity: Historical, Sociological, Political and Theological Perspectives from New Zealand. Adelaide: AFT Press. பக். 64–66. 
  41. "Diverse Communities – Exploring the Migrant and Refugee Experience in New Zealand" (PDF). Ministry of Social Development. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  42. "2018 Census totals by topic" (Microsoft Excel spreadsheet). Statistics New Zealand. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.

வெளி இணைப்புகள் தொகு