மேலி (பாடகர்)

மாலவிகா மனோஜ் (Maalavika Manoj பிறப்பு: செப்டம்பர் 16, 1993) மேடைப்பெயரான மேலி ( /mælɪ/) என்று பரவலாக அறியப்படுகிறார்,[1]மகாராட்டிராவின் மும்பையில் உள்ள ஓர் இந்தியப் பாடகர்-பாடலாசிரியர் ஆவார்.

சொந்த வாழ்க்கை

தொகு

மாளவிகா மனோஜ் 16 செப்டம்பர் 1993 [2][3] அன்று தமிழ்நாட்டின் சென்னையில் வடக்கு மலபாரைச் சேர்ந்த மலையாளிப் பெற்றோருக்குப் மகளாகப் பிறந்தார். மாளவிகா சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். மாளவிகா மின்னணு இசையைக் கேட்டு வளர்ந்தவர்.

தொழில் வாழ்க்கை

தொகு

2010 இல், மாளவிகா மைத்ரியில் (செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் கலாச்சார நிகழ்வுகள்) பங்குபெற்றார், மேலும் அந்த நிகழ்வில் "சிறந்த பாடகர்" என்று அறிவிக்கப்பட்டார். ஆர்ஜே அர்ஜுன் தாமஸ் , சென்னை லைவின் இசைக்குழு நிகழ்வில் பங்குபெறுவதற்காக ஓர் இசைக்குழுவை உருவாக்கப் பரிந்துரைத்தார். இந்த இசைக்குழு இறுதியில் செப்டம்பர் 2010 இல் "பாஸ்-இன்-பிரிட்ஜ்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது[4] அர்ஜுன் கிதார் கலைஞராகவும், சஜித் சத்யா பாஸிஸ்டராகவும், லியோன் ஜேம்ஸ் கீபோர்டு கலைஞராகவும், மாளவிகா பாடகராகவும், ஷஷாங்க் விஜய் தோற்கருவியாளராகவும் இருந்தனர்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு [5]

தொகு
பாடல் ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர்  
"கமான் கேர்ள்ஸ்" 2011 3 அனிருத் ரவிச்சந்திரன் [6]
"வாழ்க்கையே" 2012 ஹரிதாஸ் (2013 திரைப்படம்) விஜய் ஆண்டனி
"யேன் என்றால்" 2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா சித்தார்த் விபின்
"ஹாய் மை நேம் இஸ் மாலினி" 2013 மாலினி 22 பாளையங்கோட்டை அரவிந்த் சங்கர்
இருமுகன் சேட்டை" 2016 இருமுகன் (திரைப்படம்) ஹாரிஸ் ஜயராஜ்
ஹீ இஸ் மை ஹீரோ" 2016 சி3 (திரைப்படம்) ஹாரிஸ் ஜயராஜ்
"ஒன்னுமே ஆகலே" 2017 சுயாதீன பாடல் தொகுப்பு அனிருத் ரவிச்சந்திரன்
"சர்வைவா" 2017 விவேகம் (திரைப்படம்) அனிருத் ரவிச்சந்திரன்
"பீலா பீலா" 2018 தானா சேர்ந்த கூட்டம் அனிருத் ரவிச்சந்திரன்
"டேய் மச்சான் தேவ்" 2019 தேவ் (திரைப்படம்) ஹாரிஸ் ஜயராஜ்
" மங்கே மன்சூரியான்" 2022 "பதாய் தோ" "கமோஷ் சா"

சான்றுகள்

தொகு
  1. "மேலி இன்ஸ்டாகிராம் பக்கம்".
  2. "Mali (Maalavika) | About". Facebook. Archived from the original on 18 July 2013. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  3. "birthday".
  4. "Introducing BASS – IN BRIDGE". Thamarai.co.uk. Archived from the original on 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  5. "malavika manoj songs - gaana".
  6. "3 movie songs".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலி_(பாடகர்)&oldid=3809568" இலிருந்து மீள்விக்கப்பட்டது