நூக் மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம்
(மேவாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நூக் மாவட்டம் (Mewat district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நூக் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் முந்தைய பெயர் மேவாத் மாவட்டம் ஆகும்.

நூக் மாவட்டம் மாவட்டம்
நூக் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா
மாநிலம்அரியானா, இந்தியா
தலைமையகம்நூக் நகரம்
பரப்பு1,507 km2 (582 sq mi)
மக்கட்தொகை1089263 (2011)
மக்கள்தொகை அடர்த்தி723/km2 (1,870/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை11.39%
படிப்பறிவு54.08
பாலின விகிதம்907
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 248-எ
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்

தொகு

மேவாத் மாவட்டத்தின் வடக்கில் குர்கான் மாவட்டம், மேற்கே ரேவாரி மாவட்டம், கிழக்கில் பரிதாபாத் மாவட்டம் மற்றும் பல்வல் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் நூ, பிரோஸ்பூர் - ஜிர்கா, புனாஹானா மற்றும் தோரு என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் நூ, தோரு, நாகினா, பிரோஸ்பூர் ஜிர்கா மற்றும் புன்ஹானா என ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டது. இம்மாவட்டத்தில் 512 வருவாய் கிராமங்களும்; 197 கிராமப் பஞ்சாயத்துகளையும் கொண்டது.

அரசியல்

தொகு

இம்மாவட்டம் நூ, பிரோஸ்பூர், ஜிர்கா மற்றும் புனஹானா என நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. குர்கான் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் இம்மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும்.

பொருளாதாரம்

தொகு

வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த தொழிலே இம்மாவட்டத்தின் பொருளாதார ஆதாரமாகும். இம்மாவட்டத்தில் வாழும் மியோ இன மக்கள் (Meo people) வேளாண் தொழிலை மட்டும் செய்கின்றனர். கால்வாய் நீர் பாசனம் மூலம் நீர் ஆதாரத்தை பெறுகிறது இம்மாவட்டம். ஆரவல்லி மலைத்தொடர்களால் சூழப்பட்ட இம்மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு, கால்நடை மேய்ச்சல், பால், பால் பொருட்கள் உற்பத்தி செய்தல் முக்கியத் தொழில்களாகும். பொருளாதாரம் மற்றும் தொழில் வளத்தில் மேவாத் மாவட்டம் அரியானா மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நூக் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,089,263 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.61% மக்களும்; நகரப்புறங்களில் 11.39% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 37.93% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 571,162 ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 518,101 பெண்கள் வீதம் உள்ளனர். 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 723 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 54.08% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 69.94% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 36.60% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 248,128 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 221,846 (20.37%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 592 (0.05%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 862,647 (79.20%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,235 (0.1 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,453 (0.13%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 516 (0.0%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 4 (0.00%) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 970 (0.09%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நூக்_மாவட்டம்&oldid=3890882" இலிருந்து மீள்விக்கப்பட்டது