மொதுகுலா வேணுகோபால ரெட்டி

இந்திய அரசியல்வாதி

மொதுகுலா வேணுகோபால ரெட்டி (Modugula Venugopala Reddy) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். [1] இவர் பிப்ரவரி 2019 வரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். மேலும் 2014 இல் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணா லட்சுமிநாராயணாவை எதிர்த்து வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நரசராவ்பேட்டைமக்களவைத் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

மொதுகுலா வேணுகோபால ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
2009-2014
முன்னையவர்மேகபதி இராஜ்மோகன் ரெட்டி
பின்னவர்ராயபாடி சாம்பசிவ ராவ்
தொகுதிநரசராவுபேட்டை, ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 மே 1966 (1966-05-29) (அகவை 57)
பெடமரிமி, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2018–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி (2008–2018)
துணைவர்மாதவி
உறவினர்கள்அல்லா அயோத்தி ராமி ரெட்டி (மைத்துனர்)
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "TDP MP Venugopala Reddy offers to quit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 May 2011. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. "Modugula Venugopala Reddy to be YSRCP's Guntur Lok Sabha ?". Samdani MN. 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.

வெளி இணைப்புகள் தொகு