மொரிசியசு இரவுக் கொக்கு
மொரிசியசு இரவு கொக்கு (Mauritius night heron) என்பது மொரிசியசு நாட்டில் அழிந்துபோன இரவுக் கொக்கு சிற்றினமாகும். மேர் ஆக்ஸ் சாங்சில் காணப்படும் மண்டை ஓடு, இடுப்பு, காக்கையலகுருவெலும்பு, அரந்தி, ஆரை மற்றும் கணுக்காலனுவெலும்பு ஆகிய ஏழு துணை புதைபடிவ எலும்புகளால் மட்டுமே இது அறியப்படுகிறது. இன்று காக்கையலகுருவெலும்பு மற்றும் கணுக்காலனுவெலும்பு மட்டுமே எஞ்சியுள்ளன. இது 1893ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் நியூட்டன் மற்றும் ஹான்ஸ் கடோ ஆகியோரால் உயிரியல் ரீதியாக விவரிக்கப்பட்டது. நியூட்டன் மற்றும் கேடோ ஆகியோர் கணுக்காலனுவெலும்பு 81 முதல் 87 மிமீ வரை அளவிட்டனர். இது 1693ஆம் ஆண்டில் பிரான்சுவா லெகுவாட் என்பவரால் முதன்முதலில் குறிப்பிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இவர் இதனை பறக்கக் கூடிய பெரிய நாரை என்று விவரித்தார்.
மொரிசியசு இரவுக் கொக்கு | |
---|---|
Subfossil coracoid (6-7) and tarsometatarsus (8) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | †N. mauritianus
|
இருசொற் பெயரீடு | |
Nycticorax mauritianus (Newton & Gadow, 1893) | |
Location of Mauritius | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Nycticorax mauritianus". IUCN Red List of Threatened Species 2016: e.T22728777A94996372. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728777A94996372.en. https://www.iucnredlist.org/species/22728777/94996372. பார்த்த நாள்: 12 November 2021.