மொகாவி பாலைவனம்

தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள பாலைவனம்
(மொஹாவே பாலைவனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொகாவி பாலைவனம் (Mojave Desert, உச்சரிப்பு: /m[invalid input: 'ɵ']ˈhɑːv/ mo-hah-vee) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தென்கிழக்கின் பெரும்பகுதியிலும் தெற்கு நெவாடா, தென்மேற்கு யூட்டா , மற்றும் வடமேற்கு அரிசோனாவில் சிறிதளவிலும் அமைந்துள்ள மழை பெறாத, பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதி ஆகும். இது மொகாவி மக்களின் மொழியில் நீரை அடுத்த என்ற பொருள்படும் அமக்காவி என்பதன் மறுவலாகும்.[6] மொகாவி பாலைவனம் வழமையான மலைகளும் தாழ்நிலங்களும் கொண்ட நிலப்பகுதியாக விளங்குகிறது. 2,000 அடிக்கு (610 மீ) உயரமானப் பகுதிகள் உயர் பாலைவனம் எனப்படுகிறது; இருப்பினும், மொகாவி பாலைவனத்தின் கெட்ட பெயரெடுத்த சாவுப் பள்ளத்தாக்கு வட அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த உயரத்தில், கடல்மட்டத்திற்கு கீழே 282 அடியில்(86 மீ) அமைந்துள்ளது.

மொகாவி பாலைவனம் (அயிக்வீர் மடார்[1])
மொகாவி பாலைவனம்
பாலைவனம்
ஜோசுவா மரத் தேசியப் பூங்காவில் மொகாவி பாலைவனத்தின் தோற்றம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள் கலிபோர்னியா, நெவாடா, யூட்டா, அரிசோனா
பகுதி வட அமெரிக்க பாலைவன சூழல்வலயம்[2]
Borders on பெரும் தாழ்நிலப் பாலைவனம் (வடக்கு)
சோனோரன் பாலைவனம் (தெற்கு)
கொலராடோ உயர்நிலம் (கிழக்கு)
கொலராடோ பாலைவனம் (தெற்கு)
ஆறு மோகாவி ஆறு
ஆள்கூறு 35°0.5′N 115°28.5′W / 35.0083°N 115.4750°W / 35.0083; -115.4750
மிகவுயர் புள்ளி சார்லசுட்டன் சிகரம் 11,918 அடி (3,633 m)[3]
 - அமைவிடம் சாவுப் பள்ளத்தாக்கு[4]
 - ஆள்கூறுகள் 36°10′11″N 117°05′21″W / 36.16972°N 117.08917°W / 36.16972; -117.08917
மிகத்தாழ் புள்ளி பேட்வாட்டர் தாழ்நிலம் −282 அடி (−86 m)
 - அமைவிடம் சாவுப் பள்ளத்தாக்கு[5]
 - ஆள்கூறு 36°51′N 117°17′W / 36.850°N 117.283°W / 36.850; -117.283
பரப்பு 1,24,000 கிமீ² (47,877 ச.மைல்)
Biome பாலைவனம்
Geology மலைகளும் தாழ்நிலங்களும் மாநிலம்
For public மோகாவி தேசியக் காப்பகம், தேசியப் பூங்காக்கள் (சாவுப் பள்ளத்தாக்கு, ஜோசுவா மரம், சீயோன், மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு)

மொகாவி பாலைவனத்தின் எல்லைகளை பொதுவாக ஜோசுவா மரங்களைக் (Yucca brevifolia) கொண்டு வரையறுக்கலாம். இவை இந்தப் பாலைவனத்தின் அடையாள இனமாக கருதப்படுகிறது. டெகாசபி மலைகளும் சான் காபிரியல், சான் பெர்னார்டொ மலைத்தொடர்களும் இதன் அமைப்புசார் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த மலைத்தொடர்களின் எல்லைகளை மிகத்தெளிவாக சான் அன்றியாஸ் பிளவும் கார்லாக் பிளவும் வரையறுக்கின்றன. வடக்கில் பெரும் தாழ்நில புதர் இசுடெப்பியும் தெற்கிலும் கிழக்கிலும் வெப்பமான சோனோரன் பாலைவனமும் அமைந்துள்ளன. இப்பாலைவனத்தில் 1,750 முதல் 2,000 வரையிலான தாவர இனங்கள் உள்ளன.[7]

மொகாவி பாலைவனத்தின் பெரும்பகுதியில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் பல பெரிய நகரங்கள் (கலிபோர்னியாவில் இலான்கேசுட்டர், பால்ம்டேல், விக்டர்வில், நெவாடாவில் ஹெண்டர்சன், லாஸ் வேகஸ் நகரங்கள்) அமைந்துள்ளன. மேலும் இங்கு மொகாவி வானூர்தி மற்றும் விண்ணூர்தி நிலையம் அமைந்துள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. Munro, P., et al. A Mojave Dictionary Los Angeles: UCLA, 1992
  2. Western Ecology Division பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், US Environmental Protection Agency
  3. Stark, Lloyd R.; Whittemore, Alan T. "Bryophytes From the Northern Mojave Desert". Bryophytes of Nevada On-line. State of Nevada. Archived from the original on 2003-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-04-26.
  4. Thomas, Kathryn; Stoms, David; Davis, Frank. "Appendix MOJ. The Mojave Desert Region". biogeog.ucsb.edu. Bio-Geography Lab at Donald Bren School of Environmental Science and Management at University of California Santa Barbara. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
  5. Lynch, David K. "Land Below Sea Level". Geology.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-26.
  6. "American Indian History".
  7. Mazzucchelli, Vincent G., "The Southern Limits of the Mohave Desert, California", The California Geographer, 1967, VIII: 127–133. This study provides original maps of the Mohave and adjacent deserts in the southwestern states.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகாவி_பாலைவனம்&oldid=3591324" இலிருந்து மீள்விக்கப்பட்டது