மோடக்/மோதகம் (Modak) (மராத்தி: मोदक; Japanese; சப்பானிய மொழி: 歓 喜 団) என்பது பல இந்திய மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களில் பிரபலமான ஒருவகையான இந்திய இனிப்பு உணவாகும். இந்து புராணங்களின்படி, இது விநாயகரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே விநாயகர் பூஜையின் போது பயன்படுத்தப்படுகிறது.[1] மோடக்கின் உட்புறத்தில் புதிதாக அரைக்கப்பட்ட தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு நிரப்பப்படுகிறது. இதன் வெளிப்புற மென்மையான ஓடானது அரிசி மாவு அல்லது கோதுமை, மைதா மாவு கலந்து தயாரிக்கப்படுகிறது.

மோதகம்
வகைDumpling
பரிமாறப்படும் வெப்பநிலைdessert
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமகராட்டிரம்-இந்தியா, Japan
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு, அல்லது கோதுமை மாவு & மைதா மாவு, தேங்காய், வெல்லம்
வேறுபாடுகள்காங்கிடன் (歓喜団)

மோடக்கினை வறுத்தோ அல்லது வேகவைத்தோ தயாரிக்கலாம். வேகவைத்த மோடக் (உக்டிச் மோடக்) [2] பெரும்பாலும் நெய்யுடன் சூடாக உண்ணப்படுகிறது.

பெயர் வேறுபாடுகள் தொகு

 
விநாயகருக்கு வழங்கப்படும் மோடக்

இது மராத்தி, கொங்கணி மற்றும் குஜராத்தி மொழிகளில் மோடக் (मोदक) என்று அழைக்கப்படுகிறது; கன்னடத்தில் மோதகா என்றும், தமிழ் மற்றும் மலையாளத்தில் மோதகம் அல்லது கொழுக்கட்டை என்றும் தெலுங்கில் குடுமு என்றும் அழைக்கப்படுகிறது.

மத முக்கியத்துவம் தொகு

மோடக் இந்து தெய்வமான விநாயகரின் விருப்பமான இனிப்பாகக் கருதப்படுகிறது.[1] இதனால் விநாயகர் மோதகப்பிரியர் என அழைக்கப்படுகிறார்.

விநாயக சதுர்த்தியின் போது, வழக்கமாகக் கணேசருக்குப் பிரசாதமாக 21 அல்லது 101 மோடக்குகளை வழங்குகின்றனர். பெரும்பாலும் அரிசி மாவினால் செய்யப்படும் வெளி அடுக்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் கோதுமை மாவும் பயன்படுத்தப்படுகின்றன.

சப்பானில், மோடக்கிற்கு ஒத்த இனிப்பானது கங்கிடன் (歓喜団) என அழைக்கப்படுகிறது. இது கணேசனின் சப்பானியக் கடவுளான காங்கிடென் கடவுளுக்கு வழங்கப்படுகிறது. தயிர், தேன் மற்றும் சிவப்பு பீன் பேஸ்ட் ஆகியவற்றிலிருந்து காங்கிடன்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை வறுக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவைப் போர்த்தி, வறுத்தெடுப்பதற்கு ரொட்டி போல வடிவமைக்கப்படுகின்றன.

வகைகள் தொகு

வகை பண்புகள்
உகாடிச் மோடக் தேங்காய்கள் மற்றும் சர்க்கரை / வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. இந்த மாறுபாடு குறிப்பாக விநாயக சதுர்த்தி திருவிழாவின் போது தயாரிக்கப்படுகிறது. இவை கையால் தயாரிக்கப்பட்டு ஒரு நீராவி கலனில் சமைக்கப்படுகின்றன. இவை விரைவில் கெட்டுப்போவதால், உடனடியாக உட்கொள்ள வேண்டும். [3] [4] [5]
வறுத்த மோடக் வேகவைக்கப்படுவதற்குப் பதிலாக எண்ணெய்யில் ஆழமாக வறுத்தெடுக்கவும். வறுக்கப்படும் மோடக் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் மாறுபட்ட சுவையுடன் இருக்கும். [6]
மாவா மோடக் பொதுவாகக் கடைகளில் கிடைக்கின்றன. முற்றிலும் கோவாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை பிஸ்தா, ஏலக்காய், சாக்லேட் மற்றும் பாதாம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கலந்து தயாரிக்கப்படுகின்றன.

மாடம் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதகம்&oldid=3655832" இலிருந்து மீள்விக்கப்பட்டது