ம. நடராசன் (அறிவியலாளர்)

முனைவர் ம. நடராசன் (மந்திரம் நடராசன், ஆங்கிலம் M. Natarajan, பிறப்பு ஆகஸ்டு 1945) மேன்மை தாங்கிய விஞ்ஞானி (Distinguished Scientist), பொறியியலாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) தலைவராவார். இந்தப் பதவியின் அலுவல் முறையில் இவர் இந்திய மைய அரசின் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். . இவரின் பணியினைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி உள்ளது.

பிறப்பும் கல்வியும்

தொகு

நடராசன் 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி இல் இயந்திரவியல் துறையில் பி.டெக் இளங்கலை பட்டமும், மும்பை ஐ.ஐ.டி இல் பொறியியல் வடிவமைப்பு (Engineering Design) என்ற சிறப்புத் துறையில் எம்.டெக் முதுகலை பட்டமும் பெற்றார்[1]. பின்னர் ஐக்கிய இராச்சியம் (யு.கே) (United Kingdom (U.K.) நாட்டில் உள்ள சிரிவென்ஹாம் (Shrivenham) நகரில் அமைந்துள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் (ஆர்.எம்.சி.எஸ், R.M.C.S) படைத்துறை ஊர்தி தொழில் நுட்ப இயலில் எம்.எஸ்.சி பட்டமும் பெற்றார்.

செயல் முறைத் திட்ட இயக்குனர், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை

தொகு

நடராசன் 1970 ஆம் ஆண்டில் டி.ஆர்.டி.ஒ (DRDO) இல் இணைந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராக பதவி ஏற்பதற்கு முன்பே டி.ஆர்.டி.ஒ இல் 37 ஆண்டுகளுக்கும் மேலாக[2] பல முக்கிய பாதையிடு ஊர்திகளின் (tracked vehicles) வடிவமைப்பு மற்றும் வளர்மானத் திட்டங்களில் (design and development projects) பங்களித்துள்ளார்.

அர்ஜுன் முதன்மை போர் ஊர்தி செயல் முறைத் திட்டத்தில் (programme) அதன் தொடக்க காலம் முதலே தொடர்பில் இருந்தார். அர்ஜுன் முதன்மை போர் ஊர்தி செயல் முறைத் திட்டத்தின் செயல் முறை இயக்குனருக்கான சகல பொறுப்புக்களையும் 1987 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டார்.

இயக்குனர், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை

தொகு

தொடர்ந்து போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)) இயக்குனாராக 1989 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்[1]. முனைவர் நடராசன் மற்றும் இவருடைய குழுவினர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆற்றிய கூட்டு முயற்சியும், கடின உழைப்பும், வடிவமைப்பு அணுகு முறைகளும், மேலதிகமான அர்ப்பணிப்பும், நமது படைத்துரையினருக்கான நவீன (state of the art) உள்நாட்டு (indigenous) அர்ஜுன் முதன்மை போர் ஊர்தியாகவும், தன சுழல் திறன் பீம் பிரங்கி ஊர்தியாகவும் உருவாயின[2].

அர்ஜுன் போரூர்த்தி தற்சமயம் உறபத்தியில் உள்ளது. இது மட்டுமல்லாமல் பல பயனுள்ள பல சிறந்த தொழில் நுட்பங்களையும் பிற போரூர்திகளுக்காகவும் இலகுரக போர் வானூர்திக்காகவும் (Light Combat Aircraft (L.C.A) வடிவமைத்தவர் இவர். இது காரணமாகவே இவர் இந்தியாவின் போரூர்தி தொழில் நுட்பத்தின் தந்தை (father of combat vehicle technology in India) என்று அறியப்படுகிறார்.

முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (ஆராய்ச்சி மற்றும் வளர்மானம்)

தொகு

நடராசன் 2000 ஆம் ஆண்டு முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (ஆராய்ச்சி மற்றும் வளர்மானம்) (Chief Controller (Research and Development (C C R & D) ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்[1]. இவர் கட்டுப்பாட்டில் படைகலன்கள் (Armament) போரூர்தி (Combat Vehicles) மற்றும் பொறியியல் கருவிகள் (Engineering Equipments) (சுருக்கெழுத்து (ஏ. சி. இ - A. C. E) போன்ற திட்டங்களும் ஆய்வகங்களும் செயல்பட்டன. இவர் இப்பணியில் திறம்பட செயலாற்றியதால் பினாகா பல்குழல் எறிகணை ஏவுபொறி (Pinaka Multi-Barrelled Rocket Launching System (M.B.R.L. S) பல கள சோதனைகளுக்குப் (field tests) பின்னர் படைத்துறையினரால் (Army) பயனாக்கம் (induction) பெற்றது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் செயலாளர்

தொகு

இவர் 2004 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் செயலாளராகவும் (Secretary of Dept. of Defence Research & Development), பொது இயக்குனர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Director General Research and Development (D.G.R&D), பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 31,2004 அன்று இப்பதவியை முனைவர் ஆத்ரேயின் (Dr. Aatre) பணி ஓய்வினை அடுத்து ஏற்றார்[1][3].

இவருடைய தலைமையில் 52 ஆய்வகங்களைத் தன்னகத்தே கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய ஆய்வு அமைப்பான டி ஆர். டி. ஒ பல படி நிலைகளைக் (milestones) கடந்தும் பல அரிய ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியும் பெரிதும் முன்னேற்றம் கண்டது. அக்னி (மூன்று) (Agni III ) ஏவுகணை, இடைமறி ஏவுகணை (Interceptor missile), கப்பற்படைக்கான சூழ்சசித்திறனமைந்த ஏவுகணை (strategic missile for Navy), அர்ஜுன் முதன்மைப் போரூர்தி (MBT Arjun), படைத்துறையினருக்கான சம்யுக்தா இலத்திரனியல் எச்சரிக்கை அமைப்பு (Samyukta Electronic Warning (EW) system), இலகுரக போர் வானூர்தி (Light Combat Aircraft (L. C. A) போன்ற ஆயுதங்களின் வளர்மானத்தை ஒருமுகப்படுத்தி, கள சோதனைகளை முடுக்கிவிட்டு இணக்கம் (acceptance) பெற்றமையால் முப்படைகளில் பயனாக்கம் (induction) பெற்றன.

ஒய்வு

தொகு

நடராசன் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 தேதி ஆக்கப் பணிகள் உச்ச நிலை அடைந்தமையால் (culmination) நிறைவளிக்கும் பணி ஆற்றிய மனநிறைவுடன் பணிமூப்பு (superannuation) அடைந்தமையால் ஒய்வு பெற்று டி.ஆர்.டி.ஒ விலிருந்து விடைபெற்றார்[2]..

விருதுகள் மற்றும் மேன்மைச் சிறப்புகள்

தொகு
  1. நடராசன் பல விருதுகளையும் மேன்மைச் சிறப்புகளையும் (awards and distinctions) பெற்றுள்ளார்[4]. இவற்றின் விவரங்கள்:
  2. டி.ஆர்.டி.ஒ விருது: 1994 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருது
  3. டி.ஆர்.டி.ஒ சுழற கேடயம் 1995 ஆம் ஆண்டு சி.வி.ஆர்.டி.இ சிறந்த ஆய்வக அமைப்பு என்ற பாராட்டு. சி.வி.ஆர்.டி.இ இயக்குனருக்கு
  4. இந்திய பொறியியலாளர் கழகம் (The Institution of Engineers (India)) 1996 ஆம் ஆண்டு தேசிய வடிவமைப்பு விருது. (National Design Award) சி.வி.ஆர்.டி.இ இயக்குனருக்கு
  5. அக்னி விருது (AGNI Award) 1998 ஆம் ஆண்டு சுய சார்பில் மேம்பாடு அடைந்தமைக்கு (Excellence in Self-Reliance) சி.வி.ஆர்.டி.இ இயக்குனருக்கு
  6. டி.ஆர்.டி.ஒ விருது மேன்மை தாங்கிய விஞ்ஞானி (Distinguished Scientist) மார்ச்சு 1999
  7. இந்திய தேசிய பொறியியல் கலைக்கழகம் (Indian National Academy of Engineering) பெல்லோஷிப் 2001 ஆம் ஆண்டு
  8. மைய அரசு விருது. பத்மஸ்ரீ விருது சி.சி.ஆர்.& டி (ஏ.சி.இ) 2003 இல்
  9. டி.ஆர்.டி.ஒ விருது தொழில் நுட்ப தலைமை விருது (Technology Leadership Award) போரூர்தி மற்றும் எல்.சி.ஏ வடிவமைப்பு மற்றும் வளர்மானத்திர்காக 2003 அம் ஆண்டு
  10. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஐ.ஐ.டி மேன்மை தாங்கிய முன்னாள் மாணவர் விருது (Distinguished Alumnus of IIT Madras ) திசம்பர் 2003[1]
  11. மைய அரசு, சர் சி.வி.இராமன் நூற்றாண்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் சனவரி 2008 டி.ஆர்.டி.ஒ சிறந்த தொழில்நுட்ப தலைமைக்காக

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Life Time Achievement Award 2005
  2. 2.0 2.1 2.2 "Powerhouse of technology". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  3. "Rediscovering IISc for the 21st Century". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  4. "Combat Vehicles Research & Development Establishment Awards". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._நடராசன்_(அறிவியலாளர்)&oldid=3565879" இலிருந்து மீள்விக்கப்பட்டது