யசகர்ணன்

கலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளன்

யசகர்ணன் (Yashahkarna) ( ஆட்சிக் காலம்; பொ.ச. 1073-1123) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவனது ஆட்சியின் போது, காலச்சூரிகள் தங்கள் இராச்சித்தின் வடக்குப் பகுதிகளை ககாதவலார்களிடம் இழந்தனர். மேலும் பரமாரர்களுக்கும் சந்தேலர்களுக்கும் எதிராக தோல்வியடைந்தனர்.

யசகர்ணன்
தஹாலா மன்னன்
ஆட்சிக்காலம்சுமார். 1073-1123 பொ.ச
முன்னையவர்கர்ணன்
பின்னையவர்கயகர்ணன்
குழந்தைகளின்
பெயர்கள்
கயகர்ணன்
அரசமரபுதிரிபுரியின் காலச்சூரிகள்
தந்தைகர்ணன்
தாய்அவல்லாதேவி

ஆட்சி தொகு

யசகர்ணன் கர்ணனின் மகனாவான். இவனது தாயார் அவல்லாதேவி ஒரு ஹூண இளவரசியாவாள்.[1] பொ.ச.1073இல் யசகர்ணன் அரியணை ஏறினான். விரைவில் ஆந்திரா பகுதியை தாக்கினான். அங்கு திரக்சாரமம் சிவன் கோவிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. கீழைச் சாளுக்கிய மன்னன் ஏழாம் விஜயாதித்தன் அப்போதைய ஆட்சியாளனாக இருக்கலாம். வரலாற்றாசிரியர் வி.வி.மிராஷி குறிப்பிடும் சம்பரண்யம் என்ற பகுதியையும் (பீகாரிலுள்ள சம்பரண்) யசகர்ணன் வெற்றி பெற்றான்.[1]

யசகர்ணன், வாரணாசி உட்பட தனது இராச்சியத்தின் வடக்குப் பகுதிகளை ககாதவலர்களிடம் இழந்தான்.[1] பரமார மன்னன் இலட்சுமதேவன் இவனது ஆட்சியின் போது காலச்சூரி திரிபுரி மீது படையெடுத்தான். சந்தேல மன்னன் சல்லக்சணவர்மனும் யசகர்ணனை தோற்கடித்தான். [2] யசகர்ணனின் இராஜகுரு (அரச ஆசான்) புருஷ-சிவன் ஆவார். [3]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 V. V. Mirashi 1957, ப. 494.
  2. V. V. Mirashi 1957, ப. 495.
  3. R. K. Sharma 1980, ப. 84.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசகர்ணன்&oldid=3376087" இலிருந்து மீள்விக்கப்பட்டது