பண்டிட் யஷ்பால் (Yashpaul) (பிறப்பு 22 மார்ச் 1937) ஆக்ரா கரானாவை (பாடும் பாணி) சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். [1]

யஷ்பால்
பிறப்பு22 மார்ச்சு 1937 (1937-03-22) (அகவை 87)
குஜ்ரன்வாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1948–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர், 1937 இல் குஜ்ரன்வாலாவில் பிறந்தார். [[இந்தியப் பிரிப்புக்குப் பிறகு இவரது பெற்றோர் இந்தியாவுக்கு வந்து ஜலந்தரில் குடியேறினர். அங்கு இலாகூரைச் சேர்ந்த சோட் குலாம் அலிகானின் சீடராக இருந்த கஸ்துரிலாலிடம் 'ஜஸ்ரா' இசையைக் கற்கத் தொடங்கினார். [2] [3] ஆக்ரா கரானாவிலிருந்து விலயாத் உசைன் கான், யூனுஸ் உசேன் கான் ஆகியோரிடமிருந்து மேலதிக பயிற்சி பெற்றார். படே குலாம் அலி கான், மல்லிகார்ச்சுன் மன்சூர் ஆகியோரால் இவர் ஈர்க்கப்பட்டார். [4]

தொழில்

தொகு

தனது 11 வயதில் முதன்முதலில் அரிவல்லப சங்கீத மாநாட்டு நிகழ்ச்சியில் நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். [2] இவர் ஜலந்தரின் சுவாமி அரிவபல்லப சங்கீத அகாடமியின் மூத்த மாணவராவார். இவர் 1952 முதல் அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவர் தேசிய அளவில் ஒளிபரப்பிய பல இசை நிகழ்ச்சிகளிலும், வருடாந்திர ஆகாசவானி சங்கீத மாநாடுகளிலும் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார்.

இவர் ஒரு இசையமைப்பாளராகவும், ஆசிரியராகவும் இருக்கிறார். இவர் "சகுன் பியா" என்ற பெயரில் பல இசைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார். 1997 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராக ஓய்வு பெற்றார். [5]

விருதுகளும் கௌரவங்கள்

தொகு

இவர் பெற்ற விருதுகள் பின்வருமாறு: [2] [6] [7]

  • சங்கீத நாடக அகாதமி விருது
  • தேசிய உதவித்தொகை விருது, 1962 (கல்வி அமைச்சகம், இந்திய அரசு)
  • பஞ்சாப் மாநில விருது
  • பஞ்சாப் சங்கீத நாடக அகாதமி விருது
  • அர்ப்பணிக்கப்பட்ட கல்வியாளர் விருது
  • சங்கீத சுமேரு விருது
  • இசை சிரோமணி விருது
  • இந்தியாவின் வடமேற்கு பிராந்தியத்தின் இசை மன்னர் ( வாழ்நாள் விருது)
  • சண்டிகரின் மூத்த குடிமக்கள் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்

குறிப்புகள்

தொகு
  1. Wade, Bonnie (1973). "Chĩz in Khyāl: The Traditional Composition in the Improvised Performance". Ethnomusicology 17 (3): 443–459. doi:10.2307/849960. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-1836. 
  2. 2.0 2.1 2.2 :: Felicitation of Pt. Yashpaul Ji ::
  3. "Festival of Performing Arts begins, Akademi Awardees showcase their Art". www.internationalnewsandviews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  4. "Pandit Yashpaul". The Anād Foundation (in ஆங்கிலம்). 2017-03-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  5. "Department of Music (Vocal) of PG Government College for Girls, Sector-11, Chandigarh organized a Lecture-cum-Demonstration today. Pt. Yash Paul, an eminent and traditional performing artist, who has made a significant contribution in the field of Hindustani Classical Vocal Music, was the resource-person. - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  6. . 
  7. "Pandit Yashpaul - Asian School of Music". Asian School of Music. 28 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யஷ்பால்&oldid=3712712" இலிருந்து மீள்விக்கப்பட்டது