யாங்சி ஆறு

சீனாவின் மிகநீளமான ஆறு
(யாங்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாங்சி ஆறு (Yangtze River) அல்லது சாங் சியாங் (Chang Jiang), (listen; அதாவது: "நீண்ட ஆறு") அல்லது யாங்சி ஜியாங் (listen) என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நைல், மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறுகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் ஆறுகளில் உலகில் மிக நீளமானது இது ஆகும். சீன மொழியில் சாங் ஜியாங் என்பது நீளமான ஆறு எனப்பொருள் தரும்.   இது சீன மக்கள் குடியரசின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது, மேலும் அதன் ஆற்றங்கரையில் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். [7] யாங்சே ஆறு வெளியேற்றும் நீரின் அளவில் உலகின் ஆறாவது மிகப்பெரிய நதி ஆகும்.

யாங்சி ஆறு
Yangtze (长江)
River
யாங்சே ஆறு பாயும் நடுப்பகுதி
நாடு  சீனா
மாநிலங்கள் கிங்ஹாய் , திபெத்து, யுன்னான், சிச்சுவான், சோங்கிங், ஹுபேய் , ஹுனான் , ஜியாங்சி , அன்ஹுயி , சியாங்சு, சாங்காய்
கிளையாறுகள்
 - இடம் யோலாங், மின், டுவோ, ஜியாலிங், ஹான்
 - வலம் வு, யுவான், சி, சியாங், கான், ஹுவாங்பு
நகரங்கள் இபின், லுஜோ, சோங்கிங், வான்சோ, யிசாங், ஜிங்ஜோ, யியாங், வுகான், ஜியுஜியாங், அங்கிங், தொங்கிங், வூஹு, நாஞ்சிங், ஜெனியாங், நாந்தோங், சாங்காய்
உற்பத்தியாகும் இடம் கெலாடியைடுங் சிகரம்
 - அமைவிடம் டங்குலா மலைகள், குஇன்காய்
 - உயர்வு 5,042 மீ (16,542 அடி)
 - ஆள்கூறு 33°25′44″N 91°10′57″E / 33.42889°N 91.18250°E / 33.42889; 91.18250
கழிமுகம் கிழக்கு சீனக் கடல்
 - அமைவிடம் சாங்காய், மற்றும் சியாங்சு
 - ஆள்கூறு 31°23′37″N 121°58′59″E / 31.39361°N 121.98306°E / 31.39361; 121.98306
நீளம் 6,300 கிமீ (3,915 மைல்) [1]
வடிநிலம் 18,08,500 கிமீ² (6,98,266 ச.மைல்) [2]
Discharge
 - சராசரி [3]
 - மிகக் கூடிய [4][5]
 - மிகக் குறைந்த
சீனாவில் யாங்சி ஆற்றின் போக்கு
சீனாவில் யாங்சி ஆற்றின் போக்கு
சீனாவில் யாங்சி ஆற்றின் போக்கு
யாங்சே ஆறு
சீனாவின், யங்-டிஸ் ஆற்றில் உள்ள தங்கத்தீவு   ( எல்எம்எஸ், 1869, ப .64)[6]


சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சே ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. வளமான யாங்சீ ஆற்று பள்ளத்தாக்கானது சீனாவின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% அளவைத் தருகிறது. யாங்சி ஆற்றுப் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இப்பகுதியில் வாழக்கூடிய அகணிய உயிரிகள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளன இதில் குறிப்பாக சீன முதலை, ஃபின்லஸ் கடல்பன்றி, சீன துடுப்பு மீன், யங்ட்கே ஆற்று ஓங்கில் அல்லது பைஜி மற்றும் யாங்க்தெஸ் ஸ்டர்ஜன் போன்ற பல இன உயிர்கள் ஆபத்துக்கு உள்ளான இனங்களா ஆகியுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் நீரானது, நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொழில், எல்லை- அடையாளம், போர் போன்றவற்றிற்று பயன்படுத்தபட்டு வருகிறது. இது தன் அமைவிடம் காரணமாக சீனாவை வடக்கு தெற்காக பிரிக்கும் கோடாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றில் கட்டப்பட்ட மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது உலகின் மிகப்பெரிய நீர் மின் ஆற்றல் நிலையமாக உள்ளது.[8][9] சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது.


அண்மைய ஆண்டுகளில், இந்த ஆலை தொழில்துறை மாசுபாடுகளாலும், சதுப்புநிலம் மற்றும் ஏரிகள் அழிப்பு போன்றவற்றால் பாதிப்புற்றுள்ளது. இது பருவகால வெள்ளத்தை அதிகரிக்கிறது. ஆற்றின் சில பகுதிகள் உள்ள இயற்கை வளங்களை இப்போது பாதுகாக்கின்றனர். மேற்கு யுன்னானின் ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் யாங்சி ஆறின் நீட்சியான   யுனன் பாதுகாக்கப்பட்ட பகுதியின் மூன்று இணை ஆறுகளில் ஒரு பகுதி யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக உள்ளது. 2014 நடுப்பகுதியில் சீன அரசாங்கம்   இரயில், சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய, பல அடுக்கு போக்குவரத்து வலையமைப்பு ஒன்றை ஆற்றுப் பகுதி ஊடாக ஒரு புதிய பொருளாதாரப் பட்டையை, உருவாக்குவதாக அறிவித்தது. [10]


இந்த ஆறு ஏறத்தாழ 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஏப்ரல் 22, 2013 புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு இதழில் வெளியான ஆய்வு அறிக்கையில், சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு இயாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.[11] அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.[12]

பெயர்கள்

தொகு

சீனம்

தொகு

யாங்சி ஆற்றின் மூலப்பகுதியானது நவீன காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்படவில்லை, இதனால் ஆற்றின் கீழ்பகுதி மற்றும் மேல் பகுதிகளை சீனர்கள் பல்வேறு பெயர்களால் அழைத்தனர்.[13][14]

இந்த ஆறு நஞ்சிங்கில் இருந்து ஆற்றின் கழிமுகப் பகுதியான ஷாங்காய்வரையிலான குறைந்த பகுதியில் "யாங்கெஸ்ஸி" (Yangtze) என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், இந்தப் பகுதியில் கிருத்துவத்தை பரப்பவந்த மறைபணியாளர்கள் சாங் ஜியாங் என்ற இந்த பகுதியின் பெயரால் "யாங்கெஸ்ஸி ஆறு" என்ற பெயரை ஆங்கில மொழியில் சாங் ஜியாங் (Chang Jiang) என்று குறிப்பிட்டனர்.

நவீன சீன மொழியில், யாங்கெசை (Yangtze) என்ற சொல்லை இன்னமும் சாங்கி ஜியாங்கின் கீழ் பகுதியான நஞ்சிங் முதல் ஆற்றின் முகத்துவாரம் வரையிலான பகுதியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். யாங்சி என்ற பெயர் முழு ஆற்றுப் பகுதியை குறிக்கும்விதமாக ஒருபோதும் நிலைக்கவில்லை.

சாங் ஜியாங் - "நீண்ட ஆறு"

தொகு

சாங் ஜியாங் (長江 / 長江) என்பது நவீன சீனமொழியில் ஆற்றின் முகத்துவாரம் உள்ள ஷாங்காயில் இருந்து 2,884 கிமீ (1,792 மைல்) நீளத்துக்கு சிச்சுவான் மாகாணப்பகுதிவரை பாயும் யாங்சி ஆற்றைக் குறிப்பிடும் சொல்லாகும். சாங் ஜியாங் என்பதன் பொருள் "நீண்ட ஆறு" என்பதாகும். பழைய சீன மொழியில், யங்சி ஆற்றின் இந்த நீட்சி ஜியாங் / கியாங் ,[15] என அழைக்கப்பட்டது.

ஜின்ஷா ஜியாங் - "தங்க மணல் ஆறு"

தொகு

ஜின்ஷா ஆறு (金沙江, "தங்க தூசு"[16] அல்லது "தங்க மணல் ஆறு" [17] என்பது யாங்சி ஆறு இபின் அப்ஸ்டீமில் இருந்து, 2,308 கிமீ (1,434 மைல்) தொலைவில் கிங்ஹாய் மாகாணத்தில் யுஷு அருகில். படன்ங் ஆற்று கலக்கும் பகுதிவரை அழைக்கப்படுகிறது.

தொங்கியன் ஆறு

தொகு

தொங்கியன் ஆறு (通天 河, பொருள் "சொர்கத்தைக் கடந்துசெல்லும் ஆறு") என்பது யூசுபுடமிருந்து 813 கிமீ (505 மைல்) நீளமுள்ள பகுதியாக டாங்க் ஆற்று வந்து கலக்கும் இடம்வரை அழைக்கப்படுகிறது. இந்த பெயரானது  மேற்கு நோக்கி பயணிக்கும் ஒரு வசீகரிக்கும் ஆறு என்பதிலிருந்து வந்தது. பழங்காலத்தில், இது யாக் ஆறு என்று அழைக்கப்பட்டது. மங்கோலிய மொழியில், இந்த பகுதி முருய்-உஸ்சு (சுருள் ஓடை) என அழைக்கப்படுகிறது. [18] மேலும் சில நேரங்களில் அருகிலுள்ள பெய்யுயிவுடன் சேர்த்து குழப்பப்படுகிறது.[14]

டுவோடோ ஆறு

தொகு

டூயோட்டோ ஆறு (沱沱河, p Tuótuó Hé, lit. "Tearful River" [19] என்பது தென்கிழக்கு கிங்ஹாய் மாகாணத்தில் உள்ள டங்குலா மலைகளில் இருந்து தொங்குவே ஆறு ஆறும் டாங்குக் ஆறு சங்கமிக்கும் 358 கிமீ (222 மைல்) நீளம் வரையிலான பகுதியைக் [20] குறிக்க யாங்சி ஆற்றைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ பெயராகும். ஆற்றின் இந்த பகுதி மங்கோலியாவில், உலான் மோரன் அல்லது "சிவப்பு ஆறு" என்று அழைக்கப்படுகிறது.

நிலவியல்

தொகு

பல ஆறுகளில் இருந்து இந்த ஆறு உருவாகிறது, அவற்றில் இரண்டு முதன்மை ஆதாரங்களாக கூறப்படுகிறது.  கிங்ஹாய்-திபெத் பீடபூமியின் கிழக்கு பகுதியில் டாங்லா மலைத்தொடரில் உள்ள கீலாடாண்டொங் மலைக்கு மேற்கில் உள்ள பனிப்பாறை அடிவாரத்தில் உள்ள ஆதாரத்தை PRC அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.  இருப்பினும், இதன் புவியியல் ஆதாரமானது (அதாவது, கடலில் இருந்து நீண்ட தொலைவு) கடல் மட்டத்திலிருந்து 32°36′14″N 94°30′44″E / 32.60389°N 94.51222°E / 32.60389; 94.51222 மற்றும் 5,170 m (16,960 அடி) கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் உள்ளது. [21] இதில் பல ஆறுகள் சேர்ந்து, பின் கிங்ஹாய் (சிங்காய்) வழியாக கிழக்கு நோக்கி செல்கிறது, அங்கிருந்து தெற்குப் பகுதியில் திரும்பி சிச்சுவான் மற்றும் திபெத் எல்லைகளில் யென்னையுன்னானை அடைவதற்கு ஆழமான பள்ளத்தாக்கில் கீழே இறங்கி வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் போது, ஆற்றின் உயரம் 5,000 மீ (16,000 அடி) உயரத்திலிருந்து 1,000 மீ (3,300 அடி) என்று குறைகிறது.

இது சிச்சுவான் பள்ளத்தாக்கின் யினினில் நுழைகிறது.   சிச்சுவான் பள்ளத்தாக்கில் நுழைந்த பிறகு, அது பல வலிமையான கிளையாறுகளைப் பெற்று, அதன் நீர் அளவு அதிகரிக்கிறது. பின்னர் சோங் கிங்ஸைச் சுற்றியுள்ள வுஸன் மலை வழியாக சோங் கிங் மற்றும் ஹூபியோ பகுதிகளை குடைந்தபடி வருகிறது.

அங்கிருந்து ஹூபியி பகுதியில் நுழைந்தவுடன், யாங்சே ஏராளமான ஏரிகளிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது.   இந்த ஏரிகளில் மிகப் பெரியது டோங்ரிங் ஏரி ஆகும், இது ஹுனான் மாகாணம் மற்றும் ஹுபேய் மாகாணம் ஆகியவற்றில் எல்லையில் அமைந்துள்ளது, மேலும் ஹுனானில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கு இந்த ஏரி வடிகாலாக உள்ளது.   வுகானில், அது மிகப்பெரிய கிளை ஆறான ஹான் நதியைப் பெறுகிறது, இது சென்சி மாகாணத்துக்கு அப்பால் அதன் வடக்குப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வருகின்றது.

ஜியாங்சியின் வடக்கு முனையில், சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பாயங் ஏரி ஆற்றில் சேர்கிறது. அதன்பிறகு இந்த ஆறு அன்ஹுயி மாகாணம்  மற்றும் சியாங்சு ஆகிய மாகாணங்களில் நுழைகிறது, வழியெங்கும் ஏராளமான சிறு ஏரிகள் மற்றும் ஆறுகள் இருந்து இன்னும் தண்ணீர் பெற்று, இறுதியாக ஷாங்காயின் கிழக்கு சீனகடலை அடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Encyclopaedia Britannica: Yangtze River http://www.britannica.com/eb/article-9110538/Yangtze-River
  2. Zhang Zengxin; Tao Hui; Zhang Qiang; Zhang Jinchi; Forher, Nicola; Hörmann, Georg. "Moisture budget variations in the Yangtze River Basin, China, and possible associations with large-scale circulation". Stochastic Environmental Research and Risk Assessment (Springer Berlin/Heidelberg) 24 (5): 579–589. 
  3. "Main Rivers". National Conditions. China.org.cn. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
  4. https://probeinternational.org/three-gorges-probe/flood-types-yangtze-river பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம் Accessed 2011-02-01
  5. "Three Gorges Says Yangtze River Flow Surpasses 1998". Bloomberg Businessweek. 2010-07-20. http://www.businessweek.com/news/2010-07-20/three-gorges-says-yangtze-river-flow-surpasses-1998.html. பார்த்த நாள்: 2010-07-27. 
  6. London Missionary Society, ed. (1869). Fruits of Toil in the London Missionary Society. London: John Snow & Co. p. 64. பார்க்கப்பட்ட நாள் 12 September 2016.
  7. [1][தொடர்பிழந்த இணைப்பு]. Accessed 10 Sept 2010. (சீனம்)
  8. "Three Gorges Dam, China : Image of the Day". earthobservatory.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
  9. International Rivers, Three Gorges Dam profile பரணிடப்பட்டது 2009-04-20 at the வந்தவழி இயந்திரம், Accessed August 3, 2009
  10. "New stimulus measures by China to boost economic growth". Beijing Bulletin இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714231927/http://www.beijingbulletin.com/index.php/sid/222852671/scat/ce9cf98a4a863704/ht/New-stimulus-measures-by-China-to-boost-economic-growth. பார்த்த நாள்: 12 June 2014. 
  11. http://www.sciencenews.org/view/generic/id/349900/description/News_in_Brief_Yangtzes_age_revealed
  12. http://www.pnas.org/content/early/2013/04/17/1216241110
  13. Jamieson, George. Encyclopædia Britannica, 11th ed. "Yangtsze-Kiang பரணிடப்பட்டது மே 30, 2013 at the வந்தவழி இயந்திரம்". Cambridge University Press, 1911. Accessed 14 August 2013.
  14. 14.0 14.1 Yule, Henry. The River of Golden Sand: The Narrative of a Journey Through China and Eastern Tibet to Burmah, Vol. 1, p. 35. "Introductory Essay". 1880. Reprint: Cambridge University Press, 2010. Accessed 14 August 2013.
  15. Baxter, Wm. H. & Sagart, Laurent. "Baxter–Sagart Old Chinese Reconstruction". Archived from the original on April 25, 2012. (1.93 MB), p. 56. 2011. Accessed 12 August 2013.
  16. Little, Archibald. The Far East, p. 63. 1905. Reprint: Cambridge University Press (Cambridge), 2010. Accessed 13 August 2013.
  17. Davis, John. The Chinese: A General Description of the Empire of China and Its Inhabitants, Vol. 1, pp. 132 ff. C. Knight, 1836.
  18. Ravenstein, Ernest & al. (ed.). The Earth and Its Inhabitants, Vol. VII: "East Asia: Chinese Empire, Corea, and Japan", p. 199. D. Appleton & Co. (New York), 1884. Accessed 14 August 2013.
  19. Powers, John & al. Historical Dictionary of Tibet, p. 155. Scarecrow Press (Plymouth), 2012. Accessed 14 August 2013.
  20. 梅祖彦 [Mei Zuyan]. 《晚年随笔》 ["Old Age Essays"], p. 289. "The Changjiang Sanxia Hydro Power Development". 1997. Accessed 13 August 2013.
  21. Wong How Man (2005) New and longer Yangtze source discovered.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்சி_ஆறு&oldid=3587998" இலிருந்து மீள்விக்கப்பட்டது