யாமினி (இசை விழா)

யாமினி என்பது பெங்களூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய பாரம்பரிய இசை விழா ஆகும், இது இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPIC MACAY) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்பி) நடத்தப்படுகிறது. [1] [2] [3]

யாமினி
வகைஇந்திய பாரம்பரிய இசை விழா
நாள்25-26 ஜனவரி
(ஒவ்வொரு ஆண்டும்)
அமைவிடம்(கள்)இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
அமைப்பாளர்yamini-iimb.in
மார்கி மதுவின் கூடியாட்டம் நிகழ்ச்சி

கட்டமைப்பு

தொகு

2004 ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த இசை நிகழ்ச்சி பொதுவாக இந்திய குடியரசு தினத்திற்கு முந்தைய இரவில் ஐஐஎம்பி வளாகத்தில் திறந்த வெளியில் அந்தி முதல் விடியல் வரை (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை) நடைபெறும். [4] முதன்மை அமைப்பாளர்களான ஸ்பிக்மேகேயின் கூற்றுப்படி, இளம் தலைமுறையினரிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலைகளை அறிமுகப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இவ்விழாவின் குறிக்கோள் ஆகும். [5] ஐஐஎம்பியின் புல்வெளிகளில் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு மெத்தைகள், போர்வைகள், தேனீர் மற்றும் தீப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

இசைக்கலைஞர்கள் பட்டியல்

தொகு

கடந்த சில ஆண்டுகளில் விழா அமைப்பாளர்கள் பல இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களை அழைத்தனர். அவற்றில் சிலரின் பெயர்கள்-

ஆண்டு நிகழ்த்துபவர்கள் களம் குறிப்புகள்
2012 அஸ்வினி பிடே தேஷ்பாண்டே ஹிந்துஸ்தானி குரல் >
கலா ராம்நாத் இந்துஸ்தானி வயலின்
அலர்மேல் வள்ளி பரதநாட்டியம்
ஷஷாங்க் சுப்ரமணியம் கர்நாடக புல்லாங்குழல்
மதுரை டி.என்.சேஷகோபாலன் கர்நாடக குரல்
2013 மாளவிகா சருக்காய் பரதநாட்டியம் [6] [7]
விஸ்வ மோகன் பட் மோகன் வீணா
லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணன் & லால்குடி விஜயலட்சுமி கர்நாடக வயலின்
வசிபுதீன் தாகர் ஹிந்துஸ்தானி குரல்
பாம்பே ஜெயஸ்ரீ கர்நாடக குரல்
2014 எல்.சுப்ரமணியம் வயலின்
ஹைதராபாத் சகோதரர்கள் கர்நாடக குரல்
கௌசிகி சக்ரவர்த்தி ஹிந்துஸ்தானி குரல்
தருண் பட்டாச்சார்யா சந்தூர்
கோனார்க் நாட்டிய மண்டபம் கோட்டிபுவா நடனம்
2015 தனஞ்சயன்ஸ் பரதநாட்டியம் [8]
பர்வீன் சுல்தானா ஹிந்துஸ்தானி குரல்
நித்யானந்த் ஹல்திபூர் இந்துஸ்தானி புல்லாங்குழல்
கணேஷ் மற்றும் குமரேஷ் வயலின்
நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக குரல்
2016 ஹரிபிரசாத் சௌராசியா இந்துஸ்தானி புல்லாங்குழல் [9]
ஜெயந்தி குமரேஷ் கர்நாடக வீணை
மார்கி மது கூடியாட்டம்
சாகேதராமன் கர்நாடக குரல்
குண்டேச்சா பிரதர்ஸ் துருபத்

  மேற்கோள்கள்

தொகு
  1. "IIM-B to host music festival". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/iimb-to-host-music-festival/article690788.ece. 
  2. "Sunset to sunrise". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/sunset-to-sunrise/article2826746.ece. 
  3. "Music and dance extravaganza at IIM-B". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Music-and-dance-extravaganza-at-IIM-B/articleshow/45980415.cms. 
  4. "Musical Night". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/musical-night/article5610651.ece. 
  5. "Yamini 2015 @ IIMB". SPICMACAY. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  6. "Music concert at IIMB". Deccan Herald. http://www.deccanherald.com/content/306121/music-concert-iimb.html. 
  7. "Yamini 2013". Margazhi. Archived from the original on 22 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Yamini 2015". https://www.eventshigh.com/detail/Bangalore/681010f2028dbd45ec9685f173c6775f-yamini-2015-pes-university. 
  9. "Yamini: All-night classical music festival at IIM-B". Citizen Matters. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாமினி_(இசை_விழா)&oldid=3712715" இலிருந்து மீள்விக்கப்பட்டது