யுராசில் /ˈjʊərəsɪl/ (Uracil , U) என்பது, ஆறனையில் (ஆர். என். ஏ) காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும்.[2] இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது.

Uracil
Structural formula of uracil
Ball-and-stick model of uracil
Ball-and-stick model of uracil
Space-filling model of uracil
Space-filling model of uracil
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Pyrimidine-2,4(1H,3H)-dione
வேறு பெயர்கள்
2-oxy-4-oxy pyrimidine,
2,4(1H,3H)-pyrimidinedione,
2,4-dihydroxypyrimidine,
2,4-pyrimidinediol
இனங்காட்டிகள்
66-22-8 Y
ChEBI CHEBI:17568 N
ChEMBL ChEMBL566 N
ChemSpider 1141 N
InChI
  • InChI=1S/C4H4N2O2/c7-3-1-2-5-4(8)6-3/h1-2H,(H2,5,6,7,8) N
    Key: ISAKRJDGNUQOIC-UHFFFAOYSA-N N
  • InChI=1/C4H4N2O2/c7-3-1-2-5-4(8)6-3/h1-2H,(H2,5,6,7,8)
    Key: ISAKRJDGNUQOIC-UHFFFAOYAV
IUPHAR/BPS
4560
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் YQ8650000
  • O=C1NC=CC(=O)N1
UNII 56HH86ZVCT N
பண்புகள்
C4H4N2O2
வாய்ப்பாட்டு எடை 112.08676 கி/மூல்
தோற்றம் திண்மம்
அடர்த்தி 1.32 கீ/செமீ3
உருகுநிலை 335 °C (635 °F; 608 K)[1]
கொதிநிலை N/A - உருச்சிதையும்
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயாக்கி, திரிபொருள்
தீப்பற்றும் வெப்பநிலை எரிதகைமை அற்றது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வரலாறு

தொகு

யூரிக்கமிலத்தின் பெறுதிகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட யேர்மனிய வேதியியலர் ராபர்ட் பேர்னாட் என்பவரால், 1885இல் "யுராசில்" என்ற பெயர் முன்மொழியப்பட்டது.[3] மதுவத்தின் (yeast) கருவமிலத்தை நீரேற்றுவதன் மூலம், 1900இல் ஆல்பேர்டோ அஸ்கொயில் என்பவரால் இது முதன்முதலாகப் பிரித்தெடுக்கப்பட்டது.[4] நிறைவுறா (நிரம்பாச்) சேர்மமான யுராசில், ஒளியுறிஞ்சும் வல்லமை பெற்ற தள வடிவச் (planar) சேர்மம் ஆகும்.[5]

அண்டப் பொருட்களில், ஏனைய தாங்கிகள்/உப்பு மூலங்களுடன், யுராசிலும் காணப்படலாம் என நம்பப்படுவதற்கு, மேர்ச்சிசன் விண்வீழ்கல்லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிகூறுகின்றன.[6][7] சனிக்கிரகத்தின் நிலவான தைற்றனின் மேற்பரப்பில் யுராசில் உட்பட்ட சேர்மானங்கள் காணப்படுவதை காசினி விண்கலம் 2012இல் கண்டுபிடித்துள்ளது.[8]

இயல்புகள்

தொகு

மென்னமில இயல்புகளைக் கொண்ட யுராசில் தைமின்னின் மீதைலகற்றப்பட்ட வடிவம் ஆகும்.[9] ஆறனையில், அடினினுடன் பிணைப்பிலீடுபடும் யுராசில், தாயனையிலும், அதேபோல் இணையக்கூடியதாக இருப்பினும், தாயனை படியெடுத்தல் (DNA transcription) செயற்பாட்டின் போது, தைமின்னால் பிரதியிடப்படுகின்றது. தைமின் பிரதியிடப்பட்டிருப்பதால், ஆறனையை விட, தாயனை உறுதிகூடிய சேர்மமாகத் திகழ்கின்றது. யுராசில் ஒரு இறைபோசு மூலத்துடன் இணையும் போது, "யுரிடின்" எனும் இறைபோநியூக்கிளியோசைட்டை உருவாக்குகின்றது.[5]

யுராசில், அமைட்டு மற்றும் இமிட்டு வடிவங்களில் இரு தானொத்தியங்களை உருவாக்குகின்றது. அமைட்டு வடிவம் "இலற்றம்" (lactam) என்றும், இமிட்டு வடிவம் "இலற்றிம்" (lactim) என்றும் அழைக்கப்படுகின்றது. இலாற்றம் வடிவமே பொதுவான யுராசிலின் வடிவம் ஆகும். யுராசில் உருவழியும்போது, அஸ்பர்டேட்டு, கார்பன்டைஆக்சைடு (காபனீரொட்சைட்டு), அமோனியா என்பன உருவாகின்றன.[2]

 
யுராசில் (தானொத்தியங்கள்): அமைட்டு (அ) இலற்றம் உரு (இடம்) மற்றும் இமிட்டு (அ) இலற்றிம் உரு (வலம்)

தயாரிப்பு

தொகு

சைட்டோசின்னுக்கு நீரைச் சேர்ப்பதன் மூலம், யுராசிலையும் யூரியாவையும் உருவாக்க முடியும்.[2] மேலும், மலேயிக்கமிலத்தையும் யூரியாவையும் புகை சல்பூரிக்கமிலம் முன்னிலையில் சேர்க்கும்போதும், யூரியாவை உருவாக்கலாம்.

C4H5N3O + H2O → C4H4N2O2 + NH3
COOH(CH)2COOH + NH2CONH2 → C4H4N2O2 + 2 H2O + CO

மேலும் காண்க

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. Richard L. Myers, Rusty L. Myers: The 100 most important chemical compounds, 92-93 link
  2. 2.0 2.1 2.2 Garrett, Reginald H.; Grisham, Charles M. Principals of Biochemistry with a Human Focus. United States: Brooks/Cole Thomson Learning, 1997.
  3. Robert Behrend (1885) "Versuche zur Synthese von Körpern der Harnsäurereihe" (யூரிக்கமிலத் தொடர்களைத் தயாரிக்கும் ஆய்வு), Annalen der Chemie, 229 : 1-44. பக்கம் 11: "Dasselbe stellt sich sonach als Methylderivat der Verbindung: [யுராசிலின் மூலக்கூற்றமைப்பு]
  4. Alberto Ascoli (1900) "Ueber ein neues Spaltungsprodukt des Hefenucleins" (மதுவ நியூக்கிளிக்கமிலத்திலிருந்து பெற்ற கிழிவப் பொருள் (cleavage product)), Zeitschrift für Physiologische Chemie, 31 : 161-164.
  5. 5.0 5.1 Horton, Robert H.; et al.Principles of Biochemistry. 3rd ed. Upper Saddle River, NJ: Prentice Hall, 2002.
  6. Martins, Zita; Botta, Oliver; Fogel, Marilyn L.; Sephton, Mark A.; Glavin, Daniel P.; Watson, Jonathan S.; Dworkin, Jason P.; Schwartz, Alan W. et al. (15 June 2008). "Extraterrestrial nucleobases in the Murchison meteorite". Earth and Planetary Science Letters 270 (1–2): 130–136. doi:10.1016/j.epsl.2008.03.026. Bibcode: 2008E&PSL.270..130M. 
  7. AFP Staff (20 August 2009). "We may all be space aliens: study". AFP. பார்க்கப்பட்ட நாள் 2011-08-14.
  8. ClarkExpression error: Unrecognized word "etal". (2012). "The Surface Composition of Titan". American Astronomical Society (Smithsonian/NASA Astrophysics Data System) 44. Bibcode: 2012DPS....4420102C. 
  9. http://www.madsci.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுராசில்&oldid=3226286" இலிருந்து மீள்விக்கப்பட்டது