யுரேனியம் டெட்ராபுளோரைடு

வேதிச் சேர்மம்

யுரேனியம் டெட்ராபுளோரைடு (Uranium tetrafluoride) என்பது UF4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிறிய நீராவி அழுத்தமும் தண்ணீரில் குறைந்த கரைதிறனும் கொண்ட ஒரு பச்சை நிற திண்மப் பொருளாகும். யுரேனியம் அதன் நான்கு இணைதிடன் (யுரேனசு) நிலையில் பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளில் முக்கியமானதாக உள்ளது. யுரேனியம் சுத்திகரிப்புத் தொழிலில் இது பச்சை உப்பு என்று அழைக்கப்படுகிறது.[1]

யுரேனியம் டெட்ராபுளோரைடு
Uranium tetrafluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
யுரேனியம்(IV) புளோரைடு
யுரேனியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
10049-14-6 Y
ChemSpider 14676181 Y
EC number 233-170-1
InChI
  • InChI=1S/4FH.2U/h4*1H;;/q;;;;2*+2/p-4 Y
    Key: CWWZGQYYTNZESQ-UHFFFAOYSA-J Y
  • InChI=1/4FH.2U/h4*1H;;/q;;;;2*+2/p-4
    Key: CWWZGQYYTNZESQ-XBHQNQODAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61461
  • F[U](F)(F)F
UNII PJ46VTD8B2 Y
பண்புகள்
UF4
வாய்ப்பாட்டு எடை 314.02 கி/மோல்
தோற்றம் பச்சை நிற படிகத் திண்மம்
அடர்த்தி 6.70 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,036 °C (1,897 °F; 1,309 K)
கொதிநிலை 1,417 °C (2,583 °F; 1,690 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு, mS60
புறவெளித் தொகுதி C2/c, No. 15
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயன்
H300, H330, H373, H411
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யுரேனியம்(IV) குளோரைடு]]
யுரேனியம் டெட்ராபுரோமைடு
யுரேனியம்(IV) அயோடைடு
யுரேனியம் ஈராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம்(IV) புளோரைடு
தோரியம் டெட்ராபுளோரைடு
புரோடாக்டினியம்(IV) புளோரைடு]]
நெப்டியூனியம்(IV) புளோரைடு
புளுட்டோனியம்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

யுரேனியம் ஈராக்சைடுடன் ஐதரசன் புளோரைடுடன் சேர்ந்து வினைபுரியச் செயவதால் யுரேனியம் டெட்ராபுளோரைடு உருவாகிறது, யுரேனியம் ஈராக்சைடு சுரங்க நடவடிக்கைகளில் இருந்து பெறப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 60,000 டன்கள் யுரேனியம் ஈராக்சைடு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது. ஒரு பொதுவான அசுத்தமாக UO2F2 காணப்படுகிறது. UF4 நீராற்பகுப்புக்கும் எளிதில் பாதிக்கப்படுகிறது.[1]

செங்குத்து குழாய் வகை உலையில் ஐதரசன் வாயுவுடன் UF6 வினைபுரிவதால் UF4 உருவாகிறது. UF4 யுரேனியம் ஆக்சைடுகளைக் காட்டிலும் குறைவான நிலைப்புத்தன்மை கொண்டது. சுற்றுப்புற வெப்பநிலையில் ஈரப்பதத்துடன் மெதுவாக வினைபுரிந்து, UO2 மற்றும் HF சேர்மத்தை உருவாக்குகிறது. ஐதரசன் புளோரைடு மிகவும் அரிக்கும் பண்பையும் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். இது நீண்ட கால அகற்றலுக்கு குறைந்த அளவே சாதகமாக உள்ளது. UF4 இன் மொத்த அடர்த்தி உற்பத்தி செயல்முறை மற்றும் தொடக்க யுரேனியம் சேர்மங்களின் பண்புகளைப் பொறுத்து சுமார் 2.0 கி/செ.மீ3 முதல் 4.5 கி/செ.மீ3 வரை மாறுபடும்.

அணு உலையின் ஓர் உருகிய உப்பு உலை வடிவமைப்பில் அங்கு பயன்படுத்தும் திரவம் உருகிய உப்பாக இருக்கும், UF4 சேர்மத்தை மையப் பொருளாகப் பயன்படுத்தும். ஓரிடத்தான் பிரிப்பு இல்லாத தனிமங்களின் பயன், சிறந்த நியூட்ரான் பொருளாதாரம் மற்றும் மிதமான செயல்திறன், குறைந்த நீராவி அழுத்தம் மற்றும் சிறந்த இரசாயன நிலைத்தன்மை ஆகிய காரணங்களால் UF4 பொதுவாக மற்ற உப்புகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

வினைகள்

தொகு

யுரேனியம் டெட்ராபுளோரைடு புளோரினுடன் மேலும் வினைபுரிகிறது. முதலில் யுரேனியம் ஐம்புளோரைடும் பின்னர் யுரேனியம் அறுபுளோரைடும் உருவாகின்றன.

2 UF4 + F2 → 2 UF5
2 UF5 + F2 → 2 UF6

UF4 சேற்மத்தை மக்னீசியம் உலோகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் குறைப்பு வினை நிகழ்ந்து iயுரேனியம் உருவாகிறது:[2]

UF4 + 2 Mg → U + 2 MgF2

அறை வெப்பநிலையில் UF5 சேர்மமாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. பின்னர் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் அறுபுளோரைடாக மாறுகிறது.

கட்டமைப்பு

தொகு

பெரும்பாலான உலோக புளோரைடுகளைப் போலவே, UF4 சேர்மமும் ஓர் அடர்த்தியான மிகவும் குறுக்கு இணைப்புள்ள கனிம பலபடியாகும். எக்சு கதிர் படிகவியல் சோதனைகள் மூலம் நிறுவப்பட்டபடி, U மையங்கள் சதுர எதிர்ப்பட்டக ஒருங்கிணைப்பு கோளங்களுடன் எட்டு-ஒருங்கிணைப்புகளை கொண்டுள்ளது. புளோரைடு மையங்கள் இரட்டிப்பு பாலமாக பிணைந்துள்ளன.[2][3]

பாதுகாப்பு

தொகு

அனைத்து யுரேனியம் உப்புகளைப் போலவே, UF4 சேர்மமும் நச்சுத்தன்மையுடையது. உள்ளிழுத்தல், உட்கொள்ளுதல் மற்றும் தோல் தொடர்பு மூலம் இவ்வுப்பு தீங்கு விளைவிக்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Peehs, Martin; Walter, Thomas; Walter, Sabine; Zemek, Martin (2005), "Uranium, Uranium Alloys, and Uranium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a27_281.pub2
  2. 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. Kern, S.; Hayward, J.; Roberts, S.; Richardson, J. W.; Rotella, F. J.; Soderholm, L.; Cort, B.; Tinkle, M. et al. (1994). "Temperature Variation of the Structural Parameters in Actinide Tetrafluorides". The Journal of Chemical Physics 101 (11): 9333–9337. doi:10.1063/1.467963. Bibcode: 1994JChPh.101.9333K. https://zenodo.org/record/1232099. 

வெளி இணைப்புகள்

தொகு
  • "Uranium Tetrafluoride". Appendix A of the PEIS (DOE/EIS-0269). Argonne National Laboratory. Archived from the original on 30 January 2016. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.