யோகான்னசு கெப்லர் (விண்கலம்)

யோகான்னசு கெப்லர் (Johannes Kepler ATV, அல்லது "தானியங்கி இடமாற்ற வண்டி" (Automated Transfer Vehicle 002, ATV-002), என்பது ஐரோப்பிய சரக்கு விண்கலம். செருமானிய வானியலாளர் யோகான்னசு கெப்லரின் நினைவாக இவ்விண்கலத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது[3][3]. இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களுக்கு எரிபொருள், உணவு, காற்று, மற்றும் தேவையான உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்காக[4] 2011 பெப்ரவரி 16 ஆம் நாள்[5] விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 7000 கிலோகிராமுக்கு அதிகமான சரக்குகளைக் கொண்டு சென்றது. இவ்விண்கலத்தின் மொத்த எடை 20000 கிகி ஆகும்[6]. யொகான்னசு கெப்லர் என்ற சரக்குக் கப்பல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தானியங்கி இடமாற்ற வண்டி (ATV) என்ற வகையில் இரண்டாவது தானியங்கிக் கப்பலாகும். ஜூல்ஸ் வேர்ன் என்ற முதலாவது விண்கப்பல் 2008 ஆம் ஆண்டில் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது.

யோகான்னசு கெப்லர் (ஏடிவி-002)
யோகான்னசு கெப்லர் சரக்கு விண்கலத்தின் வடிவம்
வகைதானியங்கி இடமாற்ற வண்டி
அமைப்புஈசா
விண்வெளி நிலையம்பவிநி
உந்து காவிஏரியான் 5ES
ஏவு நிலையம்கயானா விண்வெளி மையம்
ஏவிய நாள்16 பெப்ரவரி 2011
Docking
இணைந்த கலம்சுவெஸ்தா
இணைந்த நாள்பெப்ரவரி 24, 2011, 15:59:19 UTC[1]
Undocking dateசூன் 20, 2011[2]
Orbit
Regimeதாழ் பூமி கோள்ப்பாதை
Inclination51.6°
எடை
மொத்தம்20,000 kg (44,000 lb)

யோகான்னசு கெப்லர் ஆரியான் 5 ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவின் கயானா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆளற்ற இந்த முழுமையான தானியங்கி விண்கலம் விண்வெளி நிலையத்தின் சுவெஸ்தா என்ற கலத்துடன் 2011 பெப்ரவரி 24 ஆம் நாள் 1559 ஜிஎம்டி மணிக்கு இணைந்தது[1]. இதன் நான்கு மாதத் திட்டம் 2011, சூன் 21 இல் முடிவுக்கு வந்தது. சூன் 20 இல் விண்வெளி நிலையத்தில் இருந்து 1.3 தொன் எடையுள்ள கழிவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பிரிந்து சூன் 21 ஜிஎம்டி 2100 மணிக்கு புவியின் வளி மண்டலத்துள் நுழைந்தது. பின்னர் இது தானியங்கியாகத் தன்னை எரித்து அழிந்தது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகளும், அது ஏற்றிவந்த கழிவுப்பொருட்களும் ஆவியாகின, விண்கலத்தின் சில துண்டுகளே பசிபிக் கடல் பகுதியில் வீழ்ந்தன[7].

பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைந்துள்ள உயரத்தை தனது அமுக்கி மூலம் மேலும் அதிகரிக்கச் செய்தமை கெப்லரின் மற்றுமொரு முக்கிய பணியாக இருந்தது. இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் பூமியில் இருந்தான உயரம் 360 கிமீ உயரத்தில் இருந்து 380 கிமீ ஆக அதிகரித்தது[8].

யோகான்னசு கெப்லர் திட்டம்

தொகு
மேற்கோள்: நாசா[9]
அமைவிடம் சரக்கு எடை
அவிநி
reboost/attitude
control propellants
4,534 கிகி
ISS
எரிபொருள் உந்துபொருள்
850 கிகி
ஒக்சிசன் காற்று 100 கிகி
நீர் 0 கிகி
உலர் பொருள்
(உணவு, உடை, உபகரணம்)
1,600 கிகி
மொத்தம்: 7,084 கிகி

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 NASA.gov/multimedia/nasatv/: per NASA Live TV broadcast
  2. http://blogs.esa.int/atv/2011/04/15/atv-undocking-set-for-20-june/ ESA ATV blog. Retrieved June 11, 2011.
  3. 3.0 3.1 "Second ATV named after Johannes Kepler". ESA. 19 பெப்ரவரி 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. http://www.nasa.gov/mission_pages/station/structure/iss_manifest.html
  5. http://www.spaceflightnow.com/
  6. http://www.nasaspaceflight.com/2011/02/ariane-mission-launch-atv-2-space-station/
  7. ATV-2 is no more…, ஈசாவின் பதிவு, சூன் 22, 2011
  8. Europe's ATV space freighter burns up, பிபிசி, சூன் 21, 2011
  9. NASA.gov: JK ATV Mission Cargo

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.