ய. ச. சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

யலமஞ்சிலி சத்யநாராயண சௌத்ரி (Yalamanchili Satyanarayana Chowdary) (பிறப்பு 2 ஜூன் 1961), சுஜனா சௌத்ரி அல்லது சுருஜனா சௌத்ரி என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார். இவர் 9 நவம்பர் 2014 முதல் 8 மார்ச் 2018 வரை இந்திய மத்திய அறிவியல், தொழில்நுட்ப மாநில அமைச்சராக இருந்தார் [3] ஒரு தொழிலதிபரான இவர் அரசியலில் சேர வணிகத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐதராபாத்தை தளமாகக் கொண்ட சுஜனா குழுமத்தின் தலைவராக இருந்தார்.

யலமஞ்சிலி சத்யநாராயண சௌத்ரி
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 2014[1] – 8 மார்ச் 2018
மாநிலங்களவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
22 2010 – 02 ஏப்ரல் 2022
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1961 (1961-06-02) (அகவை 62)[2]
காஞ்சிகச்சேர்லா, கிருஷ்ணா மாவட்டம், (தற்போதைய என் டி ஆர் மாவட்டம்) ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பத்மஜா (திருமணம் 1989)
வாழிடம்(s)ஐதராபாத்து, இந்தியா
முன்னாள் கல்லூரிசைதன்யா பாரதி தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்து பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
வேலைதொழிலதிபர், அரசியல்வாதி
இணையத்தளம்YSChowdary.com

அரசியல் வாழ்க்கை தொகு

ய. ச. சௌத்ரி 2010 இல் அரசியலில் நுழைந்தார் [4] 22 ஜூன் 2010 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவம்பர் 9, 2014 அன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் முதல் விரிவாக்கத்தின் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 4 ஜூன் 2014 அன்று தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுஜனா அறக்கட்டளை தொகு

சுஜனா அறக்கட்டளை சுஜனா குழுமத்தின் நிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன. [5] இந்த அறக்கட்டளையானது சென்னையில் உள்ள சவாலான குழந்தைகளுக்கான இரண்டு பள்ளிகளை ஆதரிக்கிறது, ஐதராபாத்தில் உள்ள முதியோர் இல்லம், மேலும் கல்வி, விளையாட்டு, சமூக தொழில்முனைவு, பொறியியல், விவசாயம், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் தகுதி விருதுகளை வழங்குகிறது. .

மேற்கோள்கள் தொகு

  1. "Rajya Sabha members alloted [sic] to Telangana, Andhra Pradesh". The Economic Times. 30 May 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rajya-sabha-members-alloted-to-telangana-andhra-pradesh/articleshow/35792140.cms. 
  2. "Welcome to Department of Science and Technology, Govt. Of India ::". Archived from the original on 17 July 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
  3. Staff Reporter (7 August 2016). "Telugu Desam will continue its efforts for SCS: Sujana". The Hindu. https://www.thehindu.com/todays-paper/Telugu-Desam-will-continue-its-efforts-for-SCS-Sujana/article14556402.ece. 
  4. "Detailed Profile – Shri Y. S. Chowdary – Members of Parliament (Rajya Sabha) – Who's Who – Government: National Portal of India". 5 May 2012.
  5. "Y. S. Chowdary". 27 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ய._ச._சௌத்ரி&oldid=3819673" இலிருந்து மீள்விக்கப்பட்டது