ரகுராம் கோவிந்தராஜன்
ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக இருந்தார். செப்டம்பர் 5, 2013இல் டி. சுப்பாராவை அடுத்து இப்பதவியில் 23 ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை ஏற்பதற்கு முன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 2008 இல் இவரை இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். 2003 முதல் 2007 வரை அனைத்துலக நாணய நிதியத்தில் முதன்மைப் பொருளியலாளராக இருந்துள்ளார்.
ரகுராம் கோவிந்தராஜன் | |
---|---|
2004இல் ரகுராம் ராஜன் | |
23வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் | |
பதவியில் 5 செப்டம்பர் 2013 – 4 செப்டம்பர் 2016 | |
முன்னையவர் | முனைவர். டி சுப்பாராவ் |
பின்னவர் | உர்சித் படேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1963 போப்பால், இந்தியா |
தேசியம் | இந்தியர்[1] |
துணைவர் | இராதிகா பூரி |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (பி.டெக்.) இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (எம்பிஏ) எம்ஐடி (பிஎச்டி) |
கையெழுத்து | |
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் பன்னாட்டு செட்டில்மென்டு வங்கியின் துணைத்தலைவராக அமர்த்தப்பட்டார்.[3]
இவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். இவரின் தந்தை தில்லியில் நடுவண் அரசில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் போபாலில் பிறந்து, தில்லியில் வளர்ந்து படித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ India—A Hub for Globalization. Quote "let me state that my talk reflect my views as a citizen of India".
- ↑ "Chicago Booth professor Raguhram Rajan is named Governor of Reserve Bank of India". 6 August 2013. Archived from the original on 2016-06-09. பார்க்கப்பட்ட நாள் 2013-09-10. Quote: "Raghuram Rajan, a professor of finance at the University of Chicago Booth School of Business and the Indian government’s Chief Economic Adviser, has been named Governor of the Reserve Bank of India, the school announced today. While in this post, Rajan will be on leave from the university."
- ↑ http://www.business-standard.com/article/finance/raghuram-rajan-appointed-vice-chairman-of-bis-115111100017_1.html
வெளி இணைப்புகள்
தொகு- "Read Full Text: Raghuram Rajan's first speech as RBI governor". Firstpost. 5 September 2013. http://www.firstpost.com/business/read-full-text-raghuram-rajans-first-speech-as-rbi-governor-1084971.html.
- "A Journey of thoughts - with Raghuram Rajan". YouTube. Doordarshan. 8 March 2013. Archived from the original on 2021-12-19.
- "Citations". Google Scholar.