ரஞ்சன் விஜேரத்ன

(ரஞ்சன் விஜேரத்னே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெனரல் ரன்ஜன் விஜேரத்ன (ஏப்ரல் 4, 1931 - மார்ச் 2, 1991) இலங்கையின் அரசுத்தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் 1989 முதல் 1991 வரை வெளிநாட்டமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும்[1] பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர்[2].

ஜெனரல்
ரன்ஜன் விஜேரத்ன
பதவியில்
1988–1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 4, 1931
இலங்கை
இறப்புமார்ச் 2, 1991
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்டிலாண்டே சூரிய பண்டார
பிள்ளைகள்ரொகான் விஜேரத்ன
முன்னாள் கல்லூரிபுனித தோமையார் கல்லூரி
வேலைஅரசியவாதி
தொழில்பெருந்த்தோட்ட நிர்வாகி
இணையத்தளம்http://www.ranjanwijeratnefoundation.org

தொடக்க வாழ்க்கை

தொகு

வல்பொல முதலிகே யோர்ஜ் ஏர்கிலிஸ் விஜேரத்னவுக்கும் ரொசலிண்ட் மரியா செனாநாயக்கவுக்கும் பிறந்த ரஞ்சன் குருத்தலாவை புனித தோமையார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கிசை புனித தோமையார் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளியையும் மேற்கொண்டார். பின்னர் பெருந்தோட்டத்துறையில் அதிகாரியாக இணைந்து பணியாற்றினார். 1978 ஆம் அண்டு விவசாயத்துறை ஆராய்ச்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டத்துறைக்குப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இலங்கை நீள் துப்பாக்கி படையின் லுதினன் கேர்னலாக நியமிக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

1988 ஆம் ஆண்டுஐக்கிய தேசியக் கட்சியின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது அரச பணிகள் அனைத்திலிருந்தும் விலகினார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பாதுகாப்புப் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார்.

இறப்பு

தொகு

1991 மார்ச் 2 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், அராலியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தூர இருந்து இயக்கும் ஊர்தி வெடிகுண்டின் மூலம் கொலை செய்யப்பட்டார்[3]. இதன் போது 13 பொதுமக்கள், 5 அமைச்சு பாதுகாப்பு ஊழியர்கள், அமைச்சர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்[1][4].

லுதினன் கேர்னர் ரஞ்சன் விஜேரத்ன இறப்பின் பின்னர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் மேலும் கொத்தலாவலை பாதுகாப்பு பயிலகம் (தற்போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்) சட்டத்துறையில் முனைவர் பட்டத்தை வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Suicide terrorism: a global threat, www.janes.com
  2. "About Late General Ranjan Wijeratne, Ranjan Wijeratne Foundation". Archived from the original on 2009-04-29. பார்க்கப்பட்ட நாள் 2008-05-17.
  3. Patterns of Global Terrorism: 1991, Asia Overview, Federation of American Scientists
  4. 1991: Sri Lankan hardliner among 19 killed in blast

வெளியிணைப்புகள்

தொகு
அரசியல் பதவிகள்
முன்னர் இலங்கை வெளிநாட்டமைச்சர்
1989–1993
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_விஜேரத்ன&oldid=3569423" இலிருந்து மீள்விக்கப்பட்டது