ரன்மோர் மார்ட்டினெஸ்
ரன்மோர் மார்ட்டினெசு (Ranmore Martinesz, பிறப்பு: 24 சூன் 1967, கொழும்பு)) இலங்கைத் துடுப்பாட்ட நடுவரும், முன்னாள் முதல்தரத் துடுப்பாட்ட வீரரும் ஆவர். இவர் செபஸ்தியானைட்சு துடுப்பாட்டக் கழகத்திற்காக நான்கு முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரன்மோர் எத்தல்சன் ஜோன் மார்ட்டினெஸ் | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 சூன் 1967 கொழும்பு, இலங்கை | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தரம் | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர், நடுவர் | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
1994-1995 | செபஸ்தியானைட்சு துடுப்பாட்டக் கழகம் | ||||||||||||||||||||||||||
முதல்தர அறிமுகம் | 16 டிசம்பர் 1994 செபஸ்தியானைட்சு v குருணாகலை இளைஞர் துடுப்பாட்டக் கழகம் | ||||||||||||||||||||||||||
கடைசி முதல்தர | 10 பெப்ரவரி 1995 செபஸ்தியானைட்சு v காலி துடுப்பாட்டக் கழகம் | ||||||||||||||||||||||||||
நடுவராக | |||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 4 (2013–இன்றுவரை) | ||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 25 (2010–இன்றுவரை) | ||||||||||||||||||||||||||
முத நடுவராக | 117 (2000–இன்றுவரை) | ||||||||||||||||||||||||||
பஅ நடுவராக | 101 (2000–இன்றுவரை) | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 14 மார்ச் 2014 |
துடுப்பாட்டம்
தொகுவிரைவுப் பந்துவீச்சாளராக இருந்த மார்ட்டினெசு கொழும்பு சென் பீட்டர்சு கல்லூரி அணியில் விளையாடினார். 1985 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விளையாடினார். 1987/88 காலப்பகுதியில் பாக்கித்தானுக்கு எதிரான 23 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் சிங்கள விளையாட்டுக் கழகம், நீர்கொழும்பு துடுப்பாட்டக் கழகம், செபஸ்தியானைட்சு விளையாட்டுக் கழக அணிகளில் விளையாடிய பின்னர் 1994 இல் துடுப்பாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
நடுவர் பணி
தொகு1996 முதல் துடுப்பாட்ட நடுவராகப் பணியாற்றி வரும் இவர் 2000 ஆம் ஆண்டில் துடுப்பாட்ட சிறப்புப் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார்.[2] மார்ட்டினெசு தேர்வு மற்றும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அபுதாபியில் நடந்த யூரோ ஏசியா கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கும் பாக்கித்தான் அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் நடுவராகக் கலந்து கொண்டார். இவற்றை விட நேபாளத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான போட்டிகளிலும், வங்காளதேச உள்ளூர் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியிருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ranmore Martinesz". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2012.
- ↑ "Ranmore Martinesz". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2012.