ராசி (இந்தித் திரைப்படம்)

ராசி (Raazi) என்பது 2018 ஆண்டைய இந்தி உளவுத் திரைப்படமாகும். இப்படத்தை மேக்னா குல்சார் இயக்க,[3] வினீத் ஜெயின், கரண் ஜோஹர், ஹிரோ யஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோரால் தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஜங்லி பிக்சர்ஸ் ஆகிய பதாகைகைகளின் கீழ் தயாரிக்கப்பட்டது. படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் அலீயா பட் நடிக்க, பிற பாத்திரங்களில் விக்கி கவுசல், ராஜித் கபூர், ஷிஷிர் ஷர்மா, மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் நடித்துள்ளனர்.[4][5] இப்படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ஹரிந்தர் சிக்கா எழுதிய ‘காலிங் ஷெஹ்மத்’ என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.[6][7] இது 1971 இந்திய - பாகிஸ்தான் போருக்கு முந்தைய காலத்தில் இந்திய உளவாளியின் (கபூர்) வழியில் உளவாளியாக உள்ள அவரது மகளான (பட்) உளவுப் பணியைத் தொடர, பாகிஸ்தானிய ராணுவ வீரருடன் மணமுடித்து அங்கே வழ்வதே கதை.[8][9]

ராஸி
Raazi
இயக்கம்மேக்னா குல்சார்
தயாரிப்புவினீத் ஜெயின்
கரண் ஜோஹர்
ஹிரோ யஷ் ஜோஹர்
அபூர்வா மேத்தா
மூலக்கதைகாலிங் ஷெஹ்மத்
படைத்தவர் ஹரிந்தர் சிக்கா
திரைக்கதைபவானி ஐயர்
மேக்னா குல்சார்
இசைஷங்கர்-எஷான்-லோய்
நடிப்புஅலீயா பட்
விக்கி கவுசல்
ஒளிப்பதிவுஜே ஐ. படேல்
படத்தொகுப்புநித்தின் பைட்
கலையகம்ஜங்லி பிக்சர்ஸ்ர்
மர்மா புரொடக்சன்ஸ்
விநியோகம்ஏஏ பிலிம்ஸ்
வெளியீடுமே 11, 2018 (2018-05-11)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு35–40 கோடி[1]
மொத்த வருவாய்173.43 கோடி[2]

ராசி படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2017 சூலை மாதத்தில் மும்பையில் துவங்கி, 2017 அக்டோபர் 27 இல் முடிவடைந்தது.[10] படத்தின் படப்பிடிப்பானது பட்டியாலா, நாபா, மல்லர்கோட்லா, தூத்பத்ரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது.[11] படமானது 2018 மே 11 அன்று வெளியானது. 35 கோடி (US$4.4 மில்லியன்)–40 கோடி (US$5.0 மில்லியன்), செலவில் தயாரிக்கப்பட்ட இப்படமானது உலக அளவில் 173 கோடி (US$22 மில்லியன்) வசூலை ஈட்டியது. பெண் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட இந்தியப் படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படங்களில் இது ஒன்றாகும்.[12]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jha, Lata (17 May 2018). "Why ‘Raazi’ profits signal good times for small Bollywood films". Mint. https://www.livemint.com/Consumer/B52j1XMR0BDnHgHym0b8NJ/Why-Raazi-profits-signal-good-times-for-small-Bollywood-fi.html. பார்த்த நாள்: 31 May 2017. 
  2. "Box Office: Worldwide collections and day wise break up of Raazi". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 3 June 2017.
  3. "What a spy thriller teaches us about patriotism and empathy".
  4. Lohana, Avinash (23 June 2017). "Alia Bhatt kicks off Meghna Gulzar's upcoming espionage thriller, Raazi, in July". Mumbai Mirror. http://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/alia-bhatt-kicks-off-meghna-gulzars-upcoming-espionage-thriller-raazi-in-july/articleshow/59276486.cms. பார்த்த நாள்: 27 June 2017. 
  5. "This week in cinema: Alia Bhatt, Vicky Kaushal start shooting for 'Raazi'; a sequel to 'Baby Driver'". The Hindu. 8 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/this-week-in-cinema-alia-bhatt-vicky-kaushal-start-shooting-for-raazi-a-sequel-to-baby-driver/article19239944.ece. பார்த்த நாள்: 12 July 2017. 
  6. "That spy princess!" (in en-IN). The Hindu. 2008-05-03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/That-spy-princess/article15446864.ece. பார்த்த நாள்: 2018-05-10. 
  7. "Calling Sehmat – Penguin India" (in en-US). Penguin India. https://penguin.co.in/book/uncategorized/calling-sehmat/. பார்த்த நாள்: 2018-05-10. 
  8. "Raazi Trailer: Alia Bhatt, Vicky Kaushal Put Up A Promising Act". 10 April 2018.
  9. "Script was my bible and Meghna Gulzar was my priest: Vicky Kaushal". பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
  10. "Spotted: Alia Bhatt dons this look for Raazi and it is simply pretty". Bollywood Hungama. 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
  11. Iyer, Sanyukta (19 March 2018). "From Meghna Gulzar to Vikas Bahl, filmmakers explore the untapped interiors of India". Mumbai Mirror. http://ahmedabadmirror.indiatimes.com/entertainment/bollywood/discovery-of-india/articleshow/63356801.cms. பார்த்த நாள்: 25 March 2018. 
  12. "Top Fifteen Films Driven By Female Leads". Box Office India. 23 May 2018. Archived from the original on 23 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.