காஸி
காஸி (Ghazi (இந்தியில் படத்தின் பெயர் The Ghazi Attack ) என்பது 2017 ஆண்டு வெளியான ஓர் இந்திய போர்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தை சங்கலப் ரெட்டி இயக்கியுள்ளார்.[2][3] இந்தப் படம் 1971 ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது பிஎன்எஸ் காஸி மர்மமான மூழ்கியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.[4] இத்திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ரானா தக்குபாடி ,டாப்சி பன்னு , கே. கே. மேனன், அதுல் குல்கர்ணி.[5] அமிதாப் பச்சன் இந்தி படத்திற்கு தன் குரலை வழங்கியுள்ளார்.[6] சிரஞ்சீவி தன் குரலை தெலுங்கு பதிப்புக்கும், சூர்யா தமிழ் பதிப்பிர்கும் தன் குரலை வழங்கி உள்ளனர். இந்த படத்தின் அறிமுகக் காட்சிகள் 2017 சனவரி 11 அன்று வெளியானது.[7] இப்படம் 2017 பெப்ரவரி 17 அன்று வெளியானது. இந்தப்படம் இந்தியாவின் முதல் தண்ணீருக்கடியியில்/கடல் போர் திரைப்படாமாகும்.[8]
காஸி | |
---|---|
இயக்கம் | சங்கல்ப் ரெட்டி |
தயாரிப்பு | அனவிஷ் ரெட்டி, வெங்கடரமணா ரெட்டி பிரசாத் வி பொட்லுரி, என்எம் பாஷா, ஜகன் மோகன் வன்சா |
கதை | அசாத் அலாம் (இந்தி உரையாடல்), கங்கராஜு குன்னம் (தெலுங்கு/தமிழ் உரையாடல்) |
திரைக்கதை | சன்கல்ப் ரெட்டி, கங்கராஜு குன்னம், நிரஞ்சன் ரெட்டி |
கதைசொல்லி | சூரியா (தமிழ்) சிரஞ்சீவி (தெலுங்கு), அமிதாப் பச்சன் (இந்தி) |
இசை | கே |
நடிப்பு | ரானா தக்குபாடி டாப்சி பன்னு கேகே மேனன் ராகுல் சிங் சத்யதேவ் கன்சரனா அதுல் குல்கர்ணி |
ஒளிப்பதிவு | மாதுரி |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
கலையகம் | பிவிபி சினிமா மதினீ எண்டர்டையின்மெண்ட் |
விநியோகம் | தர்மா புரொடெக்சன்ஸ் ஏஏ பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 2017 |
ஓட்டம் | 2மணி 03நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு இந்தி |
கதை
தொகு1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாக்கித்தான் போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ்தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது.
பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் ரன்விஜய் சிங் (கே கே மேனன்) தலைமையில் எஸ் 21 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவால் அனுப்பப்படுகிறது. கேப்டன் ரன்விஜய் சிங் மிகுந்த திறமைசாலி. ஆனால், எதிரியை அழிக்கும் விஷயத்தில் விதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கிவிடக்கூடியவர். இவரைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதற்காக அர்ஜுன் வர்மா (ராணா டகுபதி) என்னும் அதிகாரியையும் உடன் அனுப்புகிறது காவல்படையின் தலைமை. கூடவே தேவராஜ் (அதுல் குல்கர்னி) என்னும் மூத்த அதிகாரியும் இருக்கிறார்.
வங்காள விரிகுடாவில் பாகிஸ்தானின் காஸி என்னும் நீர்மூழ்கிக் கப்பல் இருப்பதைக் கண்டுபிடிக்கும் கேப்டன், அந்தக் கப்பலைத் தாக்கத் திட்டமிடுகிறார். அதற்காக அபாயகரமான ஆட்டத்தில் இறங்கவும் தயாராகிவிடுகிறார். ராணா அதைத் தடுக்கிறார். மேலிடத்திலிருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். கேப்டன் அதைக் கேட்பதாக இல்லை.
இதற்கிடையே காஸி கப்பல் பொருத்திய கண்ணிவெடியில் எஸ் 21 சிக்கிக்கொள்கிறது. இதனால் கப்பலின் நடமாட்டம் பாதிக்கப்படுகிறது. கப்பலுக்குள் உயிர்ச் சேதமும் நிகழ்கிறது. காஸி அடுத்தடுத்து குண்டுகளைப் பொழிகிறது. ஒரு கட்டத்தில் கப்பலின் பொறுப்பு ராணாவிடம் வருகிறது. போரைத் தவிர்க்க நினைக்கும் அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்கிறார், எஸ் 21 தப்பித்ததா, காஸி என்னவாயிற்று என்பதே கதை
மேற்கோள்கள்
தொகு- ↑ Latha Srinivasan (7 Jan 2016). "Rana Daggubati on India's first Navy film 'Ghazi' and changes in the film industry".
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ Movies to watch out for in 2017
- ↑ "Rana Daggubati Started Shooting for India's First Navy Film 'Ghazi'". 8 January 2016. Archived from the original on 5 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ What happened to the Pakistani submarine that inspired the movie ‘The Ghazi Attack’?
- ↑ From ‘Baahubali’ to ‘Ghazi’, Rana Daggubati has come a long way
- ↑ Big B may lend voice for Ghazi
- ↑ The Ghazi Attack trailer: A rousing tale of India-Pakistan war, its heroes we never knew, watch video
- ↑ [1]