ராமக்கல் மேடு

கேரளத்தில் உள்ள ஒரு சிற்றூர்

ராமக்கல்மேடு (Ramakkalmedu) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் ஒரு சிற்றூர் ஆகும். இந்த இடம் அதன் அழகு மற்றும் ஏராளமாக உள்ள காற்றாலைகளுக்கு பெயர் பெற்றது.

ராமக்கல் மேடு
ராமக்கல்மேட்டில் குறவன், குறத்தி சிலை
ராமக்கல்மேட்டில் குறவன், குறத்தி சிலை
ஆள்கூறுகள்: 9°47′59″N 77°14′14″E / 9.79972°N 77.23722°E / 9.79972; 77.23722
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் இடுக்கி மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கருணபுரம் கிராம பஞ்சாயத்து
ஏற்றம்
981.07 m (3,218.73 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
685552
இடக் குறியீடு04868
வாகனப் பதிவுKL-69, KL-37

இருப்பிடம்

தொகு

இது நெடும்கண்டத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில்,   மூணார் - தேக்கடி பாதையில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரங்கள் தூக்குபாலம் (5   கி.மீ), கட்டப்பனை (25   கி.மீ), குமுளி (40)   கிமீ) போன்றவை ஆகும்.

நிலவியல்

தொகு

ராமக்கல்மேடானது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி (1,100 மீ) உயரத்தில் அமைந்துள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

இப்பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு பெரும்பாலும் புல்வெளி நிலம், சோலை வன வகைகளைக் கொண்டுள்ளது. இது பரந்த மூங்கில் காடுகளால் சூழப்பட்டுள்ளது.

காலநிலை

தொகு

ராமக்கல்மேட்டின் தனித்துவம் என்பது ஓயாத காற்று வீசுவதாகும். இங்கு  பருவம், நேரம் ஆகியவை என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் மணிக்கு சுமார் 35 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.

காற்று ஆற்றல்

தொகு

ராமக்கல்மேட்டுக்கு அருகிலுள்ள புஷ்பகண்டம், குருவிகானம் போன்ற கிராமங்கள் கேரளாவில் காற்றாலை ஆற்றல் பண்ணை நிறுவப்பட்டதில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இவை தனியார் காற்றாலை உற்பத்தி நிறுவனங்கள் ஆகும். தற்போது இதன் திறன் சுமார் 14.25 மெகாவாட் NEG MICON Make Wind Mills இல் உள்ளது. இந்த மின்சாரம் கேரள மாநில மின்சார வாரியத்திற்கு விநியோகிக்கப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய காற்று வீசும் பகுதி என்று கூறப்படுவதால், ராமக்கல்மேடு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சுற்றுலா

தொகு
 
ராமக்கல்மேட்டிலிருந்து ஒரு காட்சி

ராமக்கல்மேடு ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏற்கனவே 100,000 க்கும் மேற்பட்ட பயணிகளை இது ஈர்க்கிறது. இருப்பினும், 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி இப்பகுதியின் அருகில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிகம் செய்யப்படவில்லை. பேருந்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், கேரள காவல்துறையை மேம்படுத்துதல் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் இந்த சுற்றுலா மையத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது.

ராமக்கல்மேடுவின் அழகிய அழகு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உட்பட ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளது. "பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இங்கே உள்ளது" என்று டிகாப்ரியோ இந்த இடத்தைப் பற்றி கூறியதாகக் கூறப்படுகிறது.  

குறவன் மற்றும் குறத்தி

தொகு
 
ராமக்கல் மேட்டில் உள்ள குறவன் குறத்தி சிலை.


ராமக்கல்மேடு என்பது குறவன் மற்றும் குறதிக்கு ஒரு நினைவுச்சின்னம் கொண்ட ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் - இது கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் சங்க காலம் மற்றும் சங்க நிலப்பரப்பை சித்தரிக்கும் ஒரு பெரிய சிலை ஆகும். இந்த நினைவுச்சின்னம் உள்ள இடத்தில் இருந்து பாரத்தால் கம்பம், தேனி, கோம்பை, தேவரம், உத்தமபாளயம், போடிநாயக்கணூர் மற்றும் வைகா உள்ளிட்ட தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை அளிக்கிறது. பச்சை மலைகள் மற்றும் தூய மலைக் காற்று ஆகியவை ராமக்கல்மேட்டை ஒரு மயக்கும் இடமாக ஆக்குகிறது. அந்தி வேளையில் தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரங்கள் அனைத்தும் ஒளிரும் போது இந்த காட்சி வியக்க வைக்கிறது.

ராம - கல் - என்பதன் பொருள் "ராமனின் கல் நிலம்" அல்லது "ராமன் தனது புனித பாதத்தை பதித்த நிலம்" என்னதாகும். இங்கு உள்ள ஒரு கூற்றின் படி, இராமனும், இலக்குவனும், சீதையுடன் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது, சீதை இராவணனால் கடத்தப்பட்டாள் அப்போது இராமன் சீதையைத் தேடி அலைந்தபோது ராமக்கல்மேட்டின் உச்சியில் கால் வைத்திருந்தார்.

இந்த மலை உச்சியில் இரட்டை சிலையானது சி. பி. ஜினனால் சிற்பமாக வடிவமைக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சிலை இரண்டு வரலாற்று கதாபாத்திரங்களை சித்தரிக்கிறது, இது இடுக்கி அணையின் கட்டுமானத்துடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளது. குரக்கி மலா (குறவன் மலை) மற்றும் குராதி மலா (குறத்தி மலை) என பெயர் கொண்ட இரண்டு பிரம்மாண்டமான பாறை மலைகளை இடுகி வளைவு அணை இணைக்கிறது. [1]

ராமக்கல்மேட்டில் இருந்து, தமிழ்நாட்டின் காட்சி

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமக்கல்_மேடு&oldid=3491265" இலிருந்து மீள்விக்கப்பட்டது