ராம்பூர் சமஸ்தானம்

இராம்பூர் இராச்சியம் (Rampur State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில் உள்ள இராம்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ராம்பூர் நகரம் ஆகும். இராம்பூர் இராச்சியத்தி மொத்தப் பரப்பளவு 945 சதுர மைல்கள் ஆகும்.[2] இந்த இராச்சியத்தை சியா இசுலாம் நவாப்புகள் ஆட்சி செய்தனர். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

ராம்பூர் சமஸ்தானம்
Dar-Ul-Insha
1774–1947
கொடி of ராம்பூர்
கொடி
சின்னம் of ராம்பூர்
சின்னம்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் மஞ்சல் நிறத்தில் ராம்பூர் சமஸ்தானம்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் மஞ்சல் நிறத்தில் ராம்பூர் சமஸ்தானம்
தலைநகரம்ராம்பூர்
ஆட்சி மொழி(கள்)பாரசீக மொழி(1774-1887)
உருது (1889-1947)[1]
பேசப்படும் மொழிகள்உருது, இந்தி
சமயம்
சியா இசுலாம்
அரசாங்கம்சுதேச சமஸ்தானம்
நவாப் 
• 1754-1794
பைசுல்லா கான் (முதல்)
• 1794
முகமது அலி கான்
• 1794
குலாம் முகமது கான்
• 1794-1840
அகமது அலி கான்
• 1930-1966
ராஜா அலி கான் (இறுதி)
வரலாறு 
7 அக்டோபர் 1774
15 ஆகஸ்டு 1947
முந்தையது
பின்னையது
[[ரோகில்கண்ட் இராச்சியம்]]
[[இந்தியா]]
ராம்பூரின் குர்சு தோட்ட அரண்மனை
நவாப் கல்ப் அலி கான் பகதூர, ஆட்சிக் காலம், 1865–87
ராம்பூர் கோட்டை, Imambara, ஆண்டு1911
ராம்பூர் நவாப் கல்ப் அலி கான், ஆட்சிக் காலம், 1832–1887

வரலாறு தொகு

ரோகில்லாப் போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் அயோத்தி நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, 1774-இல் நிறுவப்பட்ட ராம்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராம்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது ஐக்கிய மாகாணத்தின் குவாலியர் முகமையின் கீழ் செயல்பட்டது. இராம்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1947-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராம்பூர் இராச்சியம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rahman, Tariq (2011). From Hindi to Urdu : a social and political history. Orient Blackswan Private Ltd. பக். 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-4248-8. இணையக் கணினி நூலக மையம்:757810159. http://worldcat.org/oclc/757810159. 
  2. Hunter, William Wilson (1881). The imperial gazetteer of India. India: Trübner & Company. பக். 544–546. https://archive.org/details/in.ernet.dli.2015.38098. பார்த்த நாள்: 16 December 2013. "Rampur state." 

ஊசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்பூர்_சமஸ்தானம்&oldid=3373656" இலிருந்து மீள்விக்கப்பட்டது