இரியோ டி செனீரோ

(ரியோ டி செனெய்ரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரியோ டி ஜெனீரோ (போர்த்துக்கீசிசம்: Rio de Janeiro, அல்லது "தை மாதத்தின் ஆறு") பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.

ரியோ டி ஜெனீரோ
வானத்திலிருந்து ரியோ டி ஜெனீரோவின் ஒரு காட்சி்
வானத்திலிருந்து ரியோ டி ஜெனீரோவின் ஒரு காட்சி்
ரியோ டி ஜெனீரோ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ரியோ டி ஜெனீரோ
சின்னம்
அடைபெயர்(கள்): Cidade Maravilhosa ("உயர்ந்த நகரம்"), "ரியோ"
ரியோ டி ஜெனீரோவின் அமைவிடம்
ரியோ டி ஜெனீரோவின் அமைவிடம்
நாடு பிரேசில்
பகுதிதென்கிழக்கு
மாநிலம்ரியோ டி ஜெனீரோ
அரசு
 • மாநகராட்சித் தலைவர்சேசார் மாயா (மக்களாட்சி)
பரப்பளவு
 • நகரம்1,260 km2 (490 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்60,93,472
 • அடர்த்தி4,781/km2 (12,380/sq mi)
 • பெருநகர்
1,17,14,000
நேர வலயம்ஒசநே-3 (UTC-3)
 • கோடை (பசேநே)ஒசநே-2 (UTC-2)
ம.வ.சு. (2000)0.842 – உயர்
இணையதளம்ரியோ டி ஜெனீரோ நகரம்

நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள்.

நகரத்தின் சிறப்புகள்

தொகு

உலக அதிசயம்

தொகு

பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

யுனெஸ்கோ அறிவிப்பு

தொகு

ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது.

ஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது

தொகு

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.[1]

அமைவிடம்

தொகு

ரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.

சீதோசனம்

தொகு

ரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ரியோ டி ஜெனீரோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 43
(109)
42
(108)
40
(104)
40
(104)
38
(100)
38
(100)
37
(99)
42
(108)
42
(108)
42
(108)
43
(109)
43
(109)
43
(109)
உயர் சராசரி °C (°F) 29.4
(84.9)
30.2
(86.4)
29.4
(84.9)
27.8
(82)
26.4
(79.5)
25.2
(77.4)
25.3
(77.5)
25.6
(78.1)
25.0
(77)
26.0
(78.8)
27.4
(81.3)
28.6
(83.5)
27.2
(81)
தினசரி சராசரி °C (°F) 26.2
(79.2)
26.5
(79.7)
26.0
(78.8)
24.5
(76.1)
23.0
(73.4)
21.5
(70.7)
21.3
(70.3)
21.8
(71.2)
21.8
(71.2)
22.8
(73)
24.2
(75.6)
25.2
(77.4)
23.7
(74.7)
தாழ் சராசரி °C (°F) 23.3
(73.9)
23.5
(74.3)
23.3
(73.9)
21.9
(71.4)
20.4
(68.7)
19.7
(67.5)
19.4
(66.9)
19.2
(66.6)
19.6
(67.3)
20.2
(68.4)
21.4
(70.5)
22.4
(72.3)
21.2
(70.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 18
(64)
18
(64)
17
(63)
15
(59)
11
(52)
7
(45)
8
(46)
10
(50)
13
(55)
12
(54)
12
(54)
17
(63)
7
(45)
மழைப்பொழிவுmm (inches) 114.1
(4.492)
105.3
(4.146)
103.3
(4.067)
137.4
(5.409)
85.6
(3.37)
80.4
(3.165)
56.4
(2.22)
50.5
(1.988)
87.1
(3.429)
88.2
(3.472)
95.6
(3.764)
169.0
(6.654)
1,172.9
(46.177)
ஈரப்பதம் 73 72 75 77 76 74 73 73 75 74 73 74 74
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 12 9 12 10 8 6 6 6 9 10 11 13 112
சூரியஒளி நேரம் 195.3 209.1 195.3 165.0 170.5 156.0 182.9 179.8 138.0 158.1 168.0 161.2 2,079.2
Source #1: World Meteorological Organization (UN),[2]Hong Kong Observatory[3]
Source #2: Weatherbase (record highs and lows, humidity)[4]
Average sea temperature
Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Year
25 °C (77 °F) 26 °C (79 °F) 26 °C (79 °F) 25 °C (77 °F) 24 °C (75 °F) 23 °C (73 °F) 22 °C (72 °F) 22 °C (72 °F) 22 °C (72 °F) 22 °C (72 °F) 23 °C (73 °F) 25 °C (77 °F) 24 °C (75 °F)

மாநகர் மாவட்டம்

தொகு
  • சென்ட்ரோ
  • தெற்கு மண்டலம்
  • வடக்கு மண்டலம்
  • மேற்கு மண்டலம்
  1. மேற்கு மண்டலத்துத் தெற்குப் பகுதி - பாதா டி திஜுக்கா பிராந்தியம்
  2. மேற்கு மண்டலத்து வடக்கு பகுதி-காம்போ கிராண்டே /சாந்தா கிரசு பிராந்தியம்

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 பேர் வசிக்கின்றனர்.

ரியோ டி ஜெனீரோவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் [5]

மக்கள் பகுப்பு

தொகு

இந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

மதங்கள்

தொகு

இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.

மதம் சதவிகிதம் மக்கள்
கத்தோலிக்கம் 51.09% 3,229,192
ஆங்கிரசம் 23.37% 1,477,021
இறைமறுப்பு 13.59% 858,704
மனஎழுச்சி - தன்னூக்கம் 5.90% 372,851
உம்பண்டா & கண்டோம்பளே 1.29% 72,946
யூதம் 0.34% 21,800
Source: IBGE 2010.[6]

போக்குவரத்து

தொகு

வான் வழி

தொகு

இந்நகரில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.

  • ஜோபிம் பன்னாட்டு மற்றும் உண்ணாட்டு விமான நிலைய இரண்டு முனையங்கள்
  • சந்தோஸ் டுமொன்ட் உண்ணாட்டு விமான நிலையம் - சாவ் பாலோவிற்கு (நாட்டின் மிகப் பெரிய நகரம்) மட்டும் சேவை வழங்குகிறது .
  • மரின்ஹோ விமான நிலையம் - விமான ஓட்டுனர் பயிற்சி மற்றும் பொற்கால ஏவுதல் தளம்

தரை வழி

தொகு

இந்நகரத்தில், புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது. மேலும் பேருந்துச் சேவையும் உள்ளது.

கடல் வழி

தொகு

இந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன.

 
ரியோ நகரக் கத்தோலிக்கத் திருச்சபையின் விதானத் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm
  2. "World Weather Information Service - Rio de Janeiro". World Meteorological Organization. September 2011. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Climatological Information for Rio de Janeiro, Brazil". Hong Kong Observatory. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Weatherbase: Historical Weather for Rio de Janeiro". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் August 9, 2012.
  5. "Barsa Planeta Ltda". Brasil.planetasaber.com. Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Sistema IBGE de Recuperação Automática — SIDRA". Sidra.ibge.gov.br. பார்க்கப்பட்ட நாள் 11 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியோ_டி_செனீரோ&oldid=3927834" இலிருந்து மீள்விக்கப்பட்டது